Wednesday, April 4, 2012

மூன்று பட விமா்சனம்

நடிப்பு: தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, ரோகிணி, சிவகார்த்திகேயன். இயக்கம்: ஐஸ்வர்யா
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ் இசை: அனிருத் தயாரிப்பு: ஆர்.கே புரொடக்ஷன்ஸ், வுண்டர் பார் பிலிம்ஸ்

பிளஸ் டூ படிக்கும் தனுஷூக்கும் ஸ்ருதிக்கும் காதல். ஸ்ருதியின் குடும்பம் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்கிறது. தனுஷைப் பிரிய முடியாத ஸ்ருதி, பெற்றோரிடம் விஷயத்தை சொல்கிறார். வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதீத கோபம், அதீத வெறுப்பு என ஒருவிதமான மனநோயில் (Bipolar disorder) சிக்கிய தனுஷ், தன்னால் ஸ்ருதிக்கு அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என பயந்து தனது சொத்துக்களை அவர் பெயரில் எழுதி வைத்துவிட்டு திடீரென இறந்துபோகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

ஷார்ப்பான கதையை ஷார்பாக இயக்கியுள்ள ஐஸ்வர்யா, நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். பிளஸ் டூ மாணவ, மாணவியாக தனுஷ், ஸ்ருதி ஜோடி அவ்வளவு பொருத்தம். ஒரு மழைநாளில் ஸ்ருதியின் சைக்கிளில் கழன்றுபோன செயினை மாட்டிக் கொடுத்ததுமே தனுஷ் மனதில் அப்பிக்கொள்கிறது காதல் தீ. ஸ்ருதியும் மனதைப் பறிகொடுக்க, பிறகு தொடர்கிறது இளமையும், கிளுகிளுப்புமான காதல் விளையாட்டு. ஸ்ருதியைக் கவர்வதற்காகவே தனுஷ், டியூஷன் சென்டரில் சேர்வதும், அங்கு சிவகார்த்திகேயனுடன் அடிக்கும் லூட்டியும் காமெடி மேளா.
தனக்கு வந்த மனநோயின் பாதிப்பை அறிந்து துடிக்கும் போதும், தன் நண்பன் சுந்தரை அடித்துவிட்டு புலம்பும்போதும், தன்னால் ஸ்ருதிக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று நடுங்கும்போதும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போதும் தனுஷ் நடிப்பில் தகதக மினுப்பு. ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மெருகேறி வருவதற்கு இதுவும் சாட்சி.

எதற்கெடுத்தாலும் தனுஷ் மடியில் அமர்ந்துகொள்ளும் ஸ்ருதி, இளசுகளின் லேட்டஸ்ட் ஹாட் ஆகியிருக்கிறார்.  காதலுக்காக பெற்றோரை எதிர்க்கும் ஸ்ருதி, ‘சரி நீ போ. இனிமே உன்னை பார்க்க வர மாட்டோம்‘ என்று அவர்கள் சொன்ன பிறகு தவிக்கிறாரே, முதிர்ச்சியான நடிப்பு. தனுஷின் மரணத்துக்குப் பிறகு நிலைகுலையும் அவர், உருக வைக்கிறார். கதறியழும் காட்சிகளிலும், டப்பிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தனுஷின் பெற்றோர்களாக வரும் பிரபு, பானுப்பிரியா ஜோடி மனதில் நிற்கிறார்கள். ஸ்ருதியின் அம்மா ரோகிணி, அவரது கணவர், கை சைகைகளின் மூலம் அனைவருடைய கவனத்தையும் கவரும் தங்கை கேரக்டர், டைமிங் காமெடிக்கு உத்தரவாதம் தரும் சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும், தங்கள் கேரக்டருடன் ஒன்றியிருக்கிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு, பளிச். தனுஷ், ஸ்ருதியின் பள்ளிப் பருவம், பிறகு திருமணம், மனநோய் காலம் என, மூணு கட்ட வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். அனிருத், பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார்.

தனுஷுக்கு ஏற்பட்டிருந்த மனநோய், அவரது பெற்றோர்களுக்கும், தனுஷுடன் வாழ்க்கை நடத்தும் ஸ்ருதிக்கும் தெரியாமல் போனது எப்படி? மனநோய்க்கு தற்கொலைதான் தீர்வா? சட்டென முடியும் கிளைமாக்ஸ் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதது ஏன்? என்பது உட்பட ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. சூப்பர் ஹிட் பாடலான, ‘ஒய் திஸ் கொலவெறி’யை இவ்வளவு சாதாரணமாகவா படமாக்கியிருப்பார்கள்?

மூன்று பட உயா் ரக படங்களை பார்க்க.............

By Anonymous with No comments

0 comments:

Share your opinion

Share me on facebook

  • Popular
  • Categories
  • Archives