Saturday, September 22, 2012

Team Viewer பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.

இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.

எப்படி இதை பயன்படுத்துவது?

Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ ஓபன் செய்யவும்.
மேலே படத்தில் உள்ளது போல உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை, இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.

நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி விண்டோவில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் இரண்டு வசதிகள் உள்ளன என்று சொல்லி இருந்தேன். இரண்டாவது File Transfer என்பது File களை Transfer செய்ய என்றும் சொல்லி இருந்தேன். இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும், உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.

உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password ஐ மாற்ற Teamviewer ஓபன் செய்து Refresh போன்ற பட்டன் (Password க்கு அடுத்து) கிளிக் செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே பட்டனில் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.

இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.

இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் ஓபன் செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer க்கும்.

இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது, 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும். இதைப் பற்றி பின்னர் பகிர்கிறேன்.

இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?

முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக மிக அவசியம்.

By Anonymous with No comments

Thursday, August 9, 2012

ஆண்கள் வீட்டிலேயே கிளீன் ஷேவ் செய்ய வேண்டுமா?

ஆண்களுக்கு முகத்தில் வளரும் தாடியை, எப்போது பார்த்தாலும் வீட்டில் இருக்கும் அம்மாவோ அல்லது மனைவியோ, அடிக்கடி ஷேவ் செய்ய சொல்வார்கள். ஏனெனில் ஷேவ் செய்தால் ஒரு நல்ல டீசன்ட் லுக் இருக்கும் என்பதாலேயே. அதிலும் பொதுவாக பெண்களுக்கு நல்ல டீசன்ட் லுக்கில் இருக்கும் ஆண்களை என்றால் மிகவும் பிடிக்கும். அதுமட்டுமல்லாமல் வாழ்நாளில் முதன்முதலில் ஷேவிங் செய்பவர்களுக்கு எப்படி ஷேவிங் செய்ய வேண்டும் என்பது பற்றி தெரியாமல் இருக்கும். ஆகவே நல்ல டீசன்ட் லுக்கைப் பெற, முகத்தில் வளரும் தாடியை நன்கு சுத்தமாக, எந்த ஒரு கீறலும் முகத்தில் விழாமல், அழகாக ஷேவ் செய்ய சில டிப்ஸ்-ஐ அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.clean-servingமுகத்தில் தாடியின் அளவை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள். தாடியானது குறைவாக இருந்தால், அவற்றை எளிதில் ட்ரிம் அல்லது ஷேவ் செய்யலாம். ஆனால் நீளமாக இருந்தால், அவற்றை முற்றிலும் நீங்குவது என்பது கடினமான ஒன்று. மேலும் நீக்க நினைத்தால், ரேசரில் இருக்கும் பிளேடுகள் பாதிக்கப்படும். ஆகவே அப்போது அந்த நீளமான முடியை ஒரு கத்திரிக்கோலால் ட்ரிம் செய்துவிட்டு, பின்பு ஷேவ் செய்ய வேண்டும்.

ட்ரிம் செய்யலாம் என்று நினைத்தால், முதலில் தாடி ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு ஈரத்துடன் இருந்தால், முடி வேரோடு வந்துவிடும். பின் அந்த இடம் புடைத்தோ அல்லது சிவப்பு நிறத்திலோ காணப்படும். மேலும் ட்ரிம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வாறு ட்ரிம் செய்ய எலக்ட்ரிக் ட்ரிம்மரை வாங்கியோ அல்லது கைகளில் செய்யத் தெரிந்தால் கத்திரிக்கோலிலோ செய்யலாம். ஆனால் எலக்ட்ரிக் ட்ரிம்மரில் செய்வதே சிறந்தது.

ட்ரிம் செய்தப் பின்னர், வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். ஏனெனில் வெதுவெதுப்பான நீர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி, முகத்தை மென்மையாக வைக்கும். ஆனால் சூடான தண்ணீரில் கழுவிட வேண்டாம். ஏனென்றால் அது முகத்தில் அரிப்புகளை ஏற்படுத்தும். மேலும் முகத்தை கழுவியப் பின் மென்மையான துணியால் முகத்தை துடைக்க வேண்டும்.

ஷேவிங் செய்வதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் நனைக்க வேண்டும். அவ்வாறு நனைத்து, முகம் ஈரமாக இருக்கும் போதே, ஷேவிங் ஆயிலை முகத்திற்கு தடவ வேண்டும். ஏனெனில் அந்த ஆயில் ஈரமில்லாமல் இருக்கும் முடியையும் ஈரமாக்கும். மேலும் இந்த ஆயில் ஷேவ் செய்யும் போது மிகவும் மென்மையாக முடியை நீக்கும். இதனால் ரேசரால் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம்.

ஷேவிங் ஆயிலை முகத்திற்கு தடவியப் பின், ஷேவிங் கிரீமை ஷேவிங் பிரஷ்ஷில் வைத்து முகத்திற்கு தடவ வேண்டும். பின் சிறிது தண்ணீரை நனைத்து, முகத்தில் மறுபடியும் தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் ஊற விடவும். ஏனெனில் இதனால் கடினமாக இருக்கும் முடி மென்மையாக மாறும். இதனால் ஈஸியாக ஷேவ் செய்யலாம்.

ஷேவ் செய்வதற்கு ரேசரை எடுத்தப் பின்னர், அதில் இருக்கும் பிளேடு கூர்மையாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். மேலும் ஷேவ் செய்யும் போது, முக்கியமாக அழுத்தி செய்துவிட வேண்டாம். இல்லையென்றால் முகத்தில் இரத்தக் காயத்தை பார்க்க நேரிடும். ஆகவே ரேசரை எடுத்து முகத்தின் ஒரு பகுதியை சுத்தம் செய்து, பின்னர் நீரில் நனைத்து, மறுபடியும் மற்றொரு பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். எப்போதும் சுத்தம் செய்யும் போதும், ரேசரை கீழ்நோக்கியே சுத்தம் செய்ய வேண்டும்.

ஷேவிங் முற்றிலும் முடிந்த பின்னர், உள்ளங்கைகளால் வெதுவெதுப்பான நீரில் நனைத்து, ஷேவ் செய்த இடத்தில் வைக்க வேண்டும். மேலும் இப்போது ஏதேனும் விடுபட்ட முடி உள்ளதா என்று பார்த்து, முடி இருந்தால் சுத்தம் செய்துவிடவும்.

மேற்கூறிய அனைத்தும் முடிந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, பின்னர் ஷேவிங் பாம் அல்லது ஷேவிங் லோசனை தடவ வேண்டும். அதிலும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தினால், முகச்சருமமானது வறட்சி அடையாமல், ரேசர் பயன்படுத்தியதால் அரிப்போ அல்லது எரிச்சலோ ஏற்படாமல் இருக்கும். மேலும் முகமும் பொலிவோடும், அழகோடும் காணப்படும்.

By Anonymous with No comments

Monday, July 9, 2012

‘P’ என்ற எழுத்தில் பெயர் துவங்கினால் பிறருக்கு உதவும் எண்ணம் இருக்கும்

பிறருக்காகவே வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கம் இந்த ‘P’ என்ற எழுத்தைக் கொண்டவர்கள், எதிலும் இறுதிவரை போராடிப் பார்க்கும் குணமுள்ளவர்கள், இளவயதிலேயே பொறுப்புகள் தலைமேல் வந்து வீழ்வதால் குடும்ப சூழ்நிலையை தாங்க வேண்டிய நிலை ஏற்படும். தீட்டும் திட்டங்கள் அவ்வப்பொழுது தடைபட வாய்ப்புண்டு. ஆனால், இடைவிடாது உழைப்பர். இந்த எழுத்துகளில் பெயர் துவங்குவோர், தொழிற்சாலைகளில் பணிபுரிந்தால், உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறர் துன்பத்தை தனக்கு வந்தது போல் நினைத்து அவர்களுக்கு உதவுவர். தற்போதைய நிலையை விட உயர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

Pஅன்பான இவர்களுக்கு அடிக்கடி துன்பங்கள் வந்து ஒரு மகானைப் போன்று மனதை மாற்றிவிடும். அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து தெய்வீகத்தில் அதிகபட்ச நம்பிக்கை அல்லது நம்பிக்கை குறைவு கொண்டவர்களாக இருப்பர். அனைத்து துறையிலும் ஆர்வமாக உழைப்பர். இவர்களிடம் மன உறுதி பெற்றவர்களை நோக்கி நல்ல நேரம் தேடிவரும். எங்கு பணியாற்றினாலும் அங்கு இவர்கள்தான் ஆதிக்கம் பெற்றிவராயிருப்பர். பல பேருக்கு உதவிகரமாக இருக்கும் இவர்களுக்கு, யாவரும் உதவமாட்டார்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் சென்று பணம் பெறலாம் என்று துர்போதனை கூறும் நண்பர்கள் சில வேளைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு.

மனம் ஒரு நிலைப்படாமலும், முடிவெடுக்க முடியாமலும் பல காரியங்கள் சிதைந்து போகலாம். யாருடனும் நெருங்கிய பழகமாட்டார்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி சிக்கல் அல்லது விபத்தில் மாட்டிக் கொள்வர். பொருள் விரையம் அடிக்கடி ஏற்படுவதால் மனம் சஞ்சலமடையும், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அத்துப்படி, ஆனால், முற்போக்குவாதி போல் தன்னைக் காட்டிக் கொள்வர்.

இரும்பு சம்பந்தமான துறை, மருத்துவம், கிரானைட், சினிமா, எண்ணெய், பெட்ரோல், கெமிக்கல் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்றவை. இவற்றில் இருந்தால் பெரும் பொருள் சேர்ப்பர். அழகான தோற்றமிருந்தும் இவர்களுக்கு இளவயதில் திருமணம் நடப்பதில்லை. போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் வாய்ப்பு வெகுவேகமாக கிடைக்கும். கவனம் தேவை.

ஏதேனும் ஒரு காரியத்தை பகீரதப் பிரயத்தனம் செய்து முடித்தவுடன் அடுத்த பிரச்னை தலைதூக்கும். வாழ்வில் இன்பங்களை விட துன்பங்களைக் களைவதற்கே அதிக நேரம் எடுத்துக் கொள்வர். சாதாரண காரியங்களைக் கூட அதிக முயற்சி செய்தால் தான் முடிக்க முடியும். சிறந்த நிர்வாகத் திறமை பெற்ற இவர்களை மற்றவர்கள் கண்டு கொள்வதே இல்லை.

இவர்கள் 8, 17, 26 தேதிகளில் பிறந்திருந்தால், கடும் மன உளைச்சலையும், இளவயதில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாமல் போவதும், தொழிலில் இருப்போருக்கு நிர்வாக தொந்தரவுகளுக்கு வழக்குகளும், கல்வித் தடைகளும் ஏற்படலாம். இந்த தேதிகளில் பிறந்த மகான்களுக்கு இது பொருந்தாது.

‘P’ எழுத்தை முதல் எழுத்தாக பெற்றவர்கள்
பிரணாப் முகர்ஜி
பிரியங்கா
பத்மினி
பிரபு
பிரசாந்த்

By Anonymous with 1 comment

Friday, June 22, 2012

சகுனி திரைவிமர்சனம்

சகுனி திரை விமர்சனம் (5)ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...

காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.

சகுனி திரை விமர்சனம் (3)கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி.

சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை.

சகுனி திரை விமர்சனம் (8)ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை.

ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். ஆளும் ‘வளமாகவே’ இருக்கிறார் என்பது மேலும் சிறப்பு!

சகுனி திரை விமர்சனம் (1)வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது.

கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது.

முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.

வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.

இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.சகுனி திரை விமர்சனம் (2)சகுனி திரை விமர்சனம் (6)சகுனி திரை விமர்சனம் (9)சகுனி திரை விமர்சனம் (10)சகுனி திரை விமர்சனம் (11)சகுனி திரை விமர்சனம் (4)சகுனி திரை விமர்சனம் (7)

By Anonymous with 1 comment

கலகலப்பு திரைவிமர்சனம்

கதாநாயகி குஷ்புவே மாஜி கதாநாயகி ஆன பின்பு, அவரை காதலித்து கரம்பிடித்த சுந்தர்.சி, இனியும் கதாநாயகராக காலம் தள்ள முடியாது எனும் நிலையில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் "கலகலப்பு". சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது! இந்தப்படத்திற்கு டைட்டிலேயே கலகலப்பு என வைத்தவர் காமெடிக்கு பஞ்சம் வைப்பாரா என்ன...? படம் மொத்தமும் சிரிப்பும், களிப்புமாய் கலக்குதப்பு! என சொல்ல வைக்கும் விதத்தில் இருக்கிறது! பேஷ், பேஷ்!!

கலகலப்பு திரைவிமர்சனம் (3)கதைப்படி பரம்பரை பரம்பரையாக தங்கள் வசம் இருந்து வரும் ஹோட்டலை இந்தகாலத்திலும் காப்பாற்றி கரை சேர்க்க போராடும் அண்ணன் - தம்பிகள் "களவாணி" விமலும், "தமிழ்படம்" சிவாவும்! அண்ணன் விமலுக்கு சுகாதார அதிகாரி அஞ்சலியுடன் காதல். தம்பி சிவாவுக்கு, விமல் படிக்க வைத்து காப்பாற்றி வரும் ஓவியா மீது காதல்! அஞ்சலி மீதான காதலால் விமல் ஒரு கட்டத்தில் ஹோட்டலை விட்டு தூர தேசம் செல்ல வேண்டிய சூழல்! அந்த சூழலில் ஹோட்டலை அபகரிக்க நினைக்கும் நயவஞ்சகர்களிடம் சிவா, ஹோட்டலை வைத்து சூதாடுகிறார்! தோற்றுபோகிறார்! அஞ்சலியின் தாய்மாமன் சந்தானத்திடமிருந்து அஞ்சலியையும், தம்பியை ஏமாற்றி சூதாட்டத்தில் ஹோட்டலை அபகரித்தவர்களிடமிருந்து ஹோட்டலையும் விமல் எவ்வாறு மீட்கிறார்? சிவா அதற்கு எப்படி துணை நிற்கிறார்? என்பது தான் கலகலப்பு படத்தின் மொத்த கதையும். இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை கலக்கலாக, கம்ர்ஷியலாக சொல்லி இருக்கும் சுந்தர்.சிக்கு சொல்லியே ஆக வேண்டும் ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்!

ஹோட்டலை டெவெலப் பண்ணுகிறேன் பேர்வழி, என அங்கே இங்கே வட்டிக்கு வாங்கி, ஒவ்வொரு முறையும் பெரிய நஷ்டமாகி கடன்காரர்க‌ளை கண்டு ஓடி ஓளியும் அப்பாவி பாத்திரத்தில் விமல் வெளுத்து வாங்கியிருக்கிறார். சுகாதார அதிகாரி அஞ்சலிதான் என தெரியாமல் அவரிடம் எக்குதப்பாய் மாட்டிக் கொண்டு பின் எஸ்கேப் ஆகும் இடங்களில் விமல் பிரமாதம்!

கலகலப்பு திரைவிமர்சனம் (1)சிவா திருடனாக ஜெயிலுக்கு போனதை மறைக்க துபாய்க்கு போய் திரும்பியதாக ஓவியாவுக்கு ரூட் விடுவதும், உண்மை தெரிந்ததும் அசடு வழிவதுமாக அலட்டி கொள்ளாத நடிப்பில் ஆங்காங்கே விமலையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சிவா, அண்ணன் காதலி அஞ்சலிக்காக ஹேண்ட்பேக்கும், தன் காதலி ஓவியாவிற்காக பலவிதமான பொருட்களையும் ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸீக்குள் மாறுவேடத்தில் புகுந்து திருடி கொண்டு வரும் இடங்களில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

அஞ்சலி, ஓவியா என இரண்டு கதாநாயகிகள் இருவருமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். நடிப்பில் மட்டுமல்ல, கவர்ச்சி விருந்து படைப்பதிலும் இருவரும் போட்டிபோட்டு கலகலப்பை கவர்ச்சியாய் ஆக்கியிருப்பது படத்தின் பெரும்பலம்!

அஞ்சலியின் முறைமாப்பிள்ளை வெட்டுப்புலியாக வரும் சந்தானம், கிட்டத்தட்ட படத்தின் மூன்று நாயகர்களில் ஒருவர் எனும் அளவிற்கு காமெடி ப்ளஸ் காமநெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

கலகலப்பு திரைவிமர்சனம் (2)பஞ்சு சுப்பு பத்துகோடி வைரத்தை செல்போனில் மறைத்து வைத்து தெரிந்தவரிடம் கொடுத்து வைத்து இன்சூரன்ஸ் பெற முயற்சிப்பது, அந்த வைரங்கள் விபச்சார அழகிகள், புரோக்கர், போலீஸ், ரவுடி என கைமாறி விமல் - சிவா கைகளில் சிக்குவது, அதை திரும்பபெற விமலின் நண்பர் கம் வில்லன் போலீஸ் ஜான் விஜய்யும் பஞ்சு சுப்புவும் பண்ணும் காமெடி கலாட்டக்கள், அஞ்சுவட்டி அழகேசனாக வரும் இளவரசு, காமெடி போலீஸ் ஜார்ஜ் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களே தரையில் விழுந்து, எழுந்து, தவழ்ந்து சிரிக்க வைக்கிறார்கள்.

அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில குறைகள் இருந்தாலும் யு.கே.செந்தில்குமாரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும், விஜய் எபினேசரின் இதமான இசை, சுந்தர்.சியின் காமெடி கலாட்டாவான எழுத்து - இயக்கம் உள்ளிட்டவைகள் கலகலப்பு படத்தை லாஜிக் பார்க்காமல் ரசிக்க வரும் ரசிகர்களுக்கு ‌காமெடி மேஜிக் எனலாம்.

By Anonymous with No comments

Wednesday, June 20, 2012

முரட்டுக்காளை திரைவிமர்சனம்

நடிகர்கள்: சுந்தர் சி, சினேகா, விவேக், சுமன், சிந்து துலானி, செல்முருகன்
இசை:ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: சூர்யா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: கே செல்வபாரதிமுரட்டுக்காளை திரைவிமர்சனம் (5)எண்பதுகளில் ரஜினி நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முரட்டுக் காளை படத்தை, ஒரு காட்சி கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.
ஆனால் ரஜினி படம் நிகழ்த்திய மாஜிக்கை, சுந்தர் சி காளையனாக வரும் இந்த மாடர்ன் முரட்டுக்காளை நிகழ்த்தியதா? பார்க்கலாம்...
முரட்டுக்காளை கதை ரொம்ப சிம்பிள். பாசமும் வீரமும் நிறைந்த அண்ணன் காளையனுக்கு (சுந்தர் சி), 4 தம்பிகள். ஒருவருக்கொருவர் அத்தனை பாசம். தானுண்டு தன் தம்பிகளுண்டு என போய்க்கொண்டிருக்கும் காளையன் மீது, ஊர் ஜமீன் சுமனின் தங்கை சிந்து துலானிக்கு காதல்.

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (7)சுமனின் தோட்டத்தில் வேலை செய்பவரின் கொழுந்தியாளான சிநேகாவை பார்த்த மாத்திரத்தில் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சுமன்.  சிநேகா இதற்கு மறுப்புத் தெரிவிக்க.. சிநேகாவின் அக்கா கொல்லப்படுகிறாள். தன்னைத் தேடி வரும் சுமனின் அடியாட்களிடம் இருந்து தப்பிக்க காளையனின் வீட்டில் அடைக்கலமாகிறார் சிநேகா.

இதற்கிடையில் காளையன் சும்மாவே வைத்திருக்கும் நிலத்தில் கனிமம் இருப்பதை அறிந்து அதனை விலைக்கு கேட்கிறார் சுமன். காளையன் தர மறுக்கிறார். இடையில் தனது தங்கை காளையனை காதலிப்பதை அறிந்து, மச்சான் உறவுக்குள் வந்துவிட்டால் சொத்துக்களை ஆட்டைய போட்டுவிடலாம் என்று நினைத்து சிந்துவுக்கும், காளையனுக்கும் திருமண ஏற்பாடு செய்கிறார் சுமன். நிச்சயத்தார்த்த தினத்தன்று இந்த உண்மை தெரிந்து காளையன் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (4)சில, பல மோதல்கள், சவால்களுக்குப் பிறகு சிநேகாவை சுந்தர் திருமணம் நடக்கும் தினத்தன்று சுமனின் அடியாளை கொலை செய்த்தாகச் சொல்லி சுந்தரை கைது செய்கிறது போலீஸ். சுமனே கொலை செய்து தன்னை மாட்ட வைத்திருப்பது அறிந்து பாதி வழியிலேயே சுந்தர் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். அவரைத் தேடி மாவட்ட எஸ்.பி.யே காட்டுக்குள் வருகிறார். அங்கு எஸ்.பி.யை இன்ஸ்பெக்டர் சுட்டுவிட்டு சுந்தர் எஸ்.பி.யை போட்டுத் தள்ளிவிட்டதாகச் சொல்லி போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார். காயமடைந்த எஸ்.பி.யை சுந்தர் காப்பாற்றி அழைத்துச் செல்ல.. சுமன் தனது அடியாட்களுடன் வந்து இவர்களைக் கொலை செய்ய முயல.. முடிவு முன்பே பார்த்ததுதான்..!

முதலில் இந்தப் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்ததே தவறு.. ஏ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்..! அத்தனை டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால்தான் புரியும் என்றாலும், இதெல்லாம் பெரிசுகளுக்கு ஓகே.. சிறிசுகளுக்கு மனக்குழப்பத்தைத்தான் கொடுக்கும். அதுவும் விவேக் ஏற்றுள்ள திருநங்கை கேரக்டர் அவ்வப்போது அவர்களது கஷ்டங்களை வெளிப்படுத்தினாலும், திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் பேசுவார்களோ என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இது எதிர்மறை விபத்தாக போய்விட்டது என்பதை அண்ணன் விவேக் உணர வேண்டும்..!

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (6)சுந்தர் சி. வழக்கம்போலத்தான். அவர் ஒரு நல்ல இயக்குநர்.. நடிப்பு இனிமேல் வேண்டாம் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார்..! சிந்து துலானி பாவம்.. இந்தப் படம் 2009-லேயே வெளிவந்திருந்தால் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்.. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார். இவருக்குச் சற்றும் குறைவில்லாமல் சிநேகாவும் அப்படியே. நல்லவேளை.. இந்தப் படத்திற்கு பிரஸ் மீட் எதையும் ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்கள். தப்பித்தார் சிநேகா. வந்திருந்தால் தர்மசங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்..!

அப்படி, இப்படியெல்லாம் இல்லாமல் ஸ்ட்ரெயிட்டாக போல்டாக சரோஜா கேரக்டரில் சுருளிராஜன் வேடத்தில், வாய்ஸில் கலாய்த்திருக்கிறார் விவேக். தனது கமெண்ட்ஸ்களை கொஞ்சம் குறைத்து, காட்சியின் விரசங்களையும் நீக்கச் செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இவருக்கும் செல் முருகனுக்கும் இடையில் நடக்கும் அந்த 16 வயதினிலே காதலும். அதைத் தொடர்ந்த காட்சிகளும் கலகலப்பு என்றாலும், ஆத்து சீன் ரொம்ப டூ மச்சுதான்..! அதேபோல் வைக்கோல்போரில் சிநேகா ஒழிந்திருக்கும் நிலையில் சுந்தரும், அவர் தம்பிகளும் செய்யும் லூட்டியும் கண்றாவி.. எப்படி சிநேகா இதற்கு ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.. நல்ல இயக்குநர் செல்வபாரதி.. ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக இந்த அளவிற்கு இறங்கிப் போகணுமா என்ன..?

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (1)என்னதான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மாற்று ஆட்கள் கிடைத்தாலும் இசைக்கு..???????????? ம்.. நோ சான்ஸ்.. ஒன்லி இசைஞானி  இசைஞானிதான்..! பொதுவாக எம் மனசு தங்கம் பாடலை மட்டும் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றபடி சுந்தரபுருஷா பாடலும் கொஞ்சம் கேட்க வைக்கிறது. பாடல் காட்சியில் சிநேகா காட்டியிருக்கும் கவர்ச்சி பார்க்கவும் வைக்கிறது..! ஜோர்..!

ஏற்கெனவே பல முறை பார்த்து, பார்த்து திளைத்துப் போன படம் ரஜினியின் முரட்டுக்காளை என்பதால் இதனை ஒப்பீட்டு பார்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை. இதனாலேயே படத்தில் பெரும்பாலான நேரங்களில் ஒன்றியிருக்க முடியவில்லை..!

ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான் கோடம்பாக்கத்தின் சில்லுண்டுகள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..! இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!

சிநேகாவை பார்க்கணும்னா போயிட்டு வாங்க...!

By Anonymous with No comments

நித்திக்கு பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு

ராமநகரம்: நித்தியானந்தாவிற்கு ரத்த பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஞ்சிதா சி.டி வழக்கில் கர்நாடகவின் ராமநகரம் நீதிமன்றம் பரி சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.நித்தியானந்தா (2)பரிசோதனைக்கு ஆஜராகும்படி 6 முறை அழைத்தும் நித்தியானந்தா வரவில்லை. இதனை அடுத்து சிஐடி போலீஸ் நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. நித்தியானந்தா (1)முன்னதாக நித்தியானந்தா தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான சிடியை நித்தியின் உதவியாளர் லெனின் கருப்பன் வெளியிட்டதைத் தொடர்ந்து, நித்தி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

By Anonymous with No comments

Thursday, June 14, 2012

ஜாமீனில் வெளியே வந்த நித்யானந்தா மறுபடியும் கைது!

நித்யானந்தா (2)நித்தியின் பெண் சீடர் கூறிய பாலியல் புகார், மற்றும் பத்திரிகையாளர்களைத் தாக்கியது போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டு கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார் .

இதனை தொடர்ந்து பெங்களூரில் உள்ள அவரது பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்த முதல்- மந்திரி சதானந்த கவுடா உத்தரவிட்டார்.

இந்நிலையில் நித்யானந்தா தலைமறைவானார். அவரை கைது செய்யும் முயற்சியில் கர்நாடக போலீசார் தீவிர முயற்சியில் இறங்கினர். இதனை தொடர்ந்து போலீசில் பிடிபடாமல் நேற்று ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கோமளா முன் சரணடைந்தார்.

அப்போது தனக்கு ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.சரணடைந்த அவரை ஒரு நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, கர்நாடகா போலீசார் அவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நித்யானந்தா (3)நித்யானந்தா (1)விசாரணைக்காக இன்று ராமநகரம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இவரது ஜாமீன் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி கோமளா அவருக்கு நிபந்தனையின் பேரின் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் அவர் பிடதி ஆசிரமத்துக்கு செல்லவும் தடை விதித்தார்.

இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்தநித்யானந்தா மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நித்யானந்தாவை ராமநகரம் மாவட்ட ஆட்சியர் முன் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

நித்யானந்தா (1)

By Anonymous with No comments

Wednesday, June 13, 2012

தடையறத்தாக்க திரைவிமர்சனம்

உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு......

தடையறத்தாக்க திரைவிமர்சனம் (3)அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார். அப்படி சின்ன வயசுலயே ரத்தம் பார்த்தவங்க பெரிய ஆள் ஆனா காந்தி கொள்கையா வளர்ப்பாங்க..? தாதா கம் ரவுடிங்க ஆகறாங்க..

இந்தியாவுலயே பெரிய கோடீஸ்வரரோட பெண்ணை கிட்நாப் பண்ணி பணம் பறிக்க செய்யும் முயற்சில அண்ணன் அந்த பெண்ணை ரேப் பண்ணிடறான்..அப்போ தம்பியோட அட்வைஸ் “அண்ணே, போதும் அவளை கொன்னுடலாம்”.. அண்ணனோட பதில்..”ஒரு டைம் பத்தாது, இவளை ஒரு பங்களாவுல வெச்சிருந்து அப்பப்ப யூஸ் பண்ணிக்கறேன்..

இப்போ ஹீரோ.. அறிமுகம்.. அவர் தன் லவ்வரோட ரொமான்டிக்கா  இருந்தது பத்தாதுன்னு தன் ஏரியா லேடிக்கு ஒரு கந்து வட்டி தகறாருல உதவறாரு.. வில்லன் குரூப்க்கும் அவருக்கும் ஆகலை.. விஷால், விஜய் படங்கள்ல பார்த்த மாதிரி  தனி ஆளா 67 பேரை அடிக்கறாரு..

தடையறத்தாக்க திரைவிமர்சனம் (2)ஆரம்பத்துல அண்ணன்கார வில்லன் ஒரு ஃபிகரை ரேப்புனானே அவன்  யாரோலோ படு பயங்கரமா தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல இருக்கான், தம்பிக்காரன் ஹீரோ மேல டவுட் பட்டு சேஸ் பண்றான். பரபரப்பான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்ல  உலகத்துக்கே 3 வது ரீலில் தெரிஞ்ச சஸ்பென்சான கொலையை செஞ்சது ரேப் செய்யப்பட்ட ஃபிகர் தான் என்பது க்ளைமாக்ஸ்ல இயக்குநர் நமக்கு சொல்றார்..  அவ்ளவ் தான் கதை.

ஆரண்ய காண்டம்க்குப்பிறகு ஆண்களால் அதிகம் ரசிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் கொடுத்தத்தற்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஹிட்டே கொடுக்காத  அருண்விஜய்க்கு இது நிச்சயம் ஒரு  ஹிட் படம் ஆக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். ( பாண்டவர் பூமி நல்ல படம் தான் ஆனால் வசூல் ரீதியா பெரிய அளவில் ஹிட் இல்லை)

ஹீரோ அருண் விஜய்க்கு ஆகிருதியான  உடம்பு என்பதாலும், அவர் முகமே இறுகிய நிலையில் இருப்பதாலும் ரொம்ப  ஈசியா கேரக்டர்;ல  ஃபிட் ஆகிடறார்.. ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஃபைட் , சேசிங்க் என படம் பூரா இவருக்கு வேலை அதிகம்.. நிறைவான நடிப்பு.. வெல்டன் அருண்..

தடையறத்தாக்க திரைவிமர்சனம் (4)ஹீரோயின் மம்தா மோஹன் தாஸ். பொட்டு வைக்காத ஃபிகர்ல ஒருவர். இந்தியாவுல பிறந்த பெண் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா ஆனாலும் நெற்றில ஒரு குங்குமப்பொட்டு வெச்சாத்தான் மங்களகரமா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை விடுங்க.. ,மற்றபடி பாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட கவர்ச்சி காட்டும் பணியில் இயக்குநர் சொன்னபடி செய்து காஆஆட்டி இருக்கிறார்.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காட்சி ரீதியாகவோ, வசன ரீதியாகவோ கிளு கிளு நிச்சயம்.. ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா./)

ரேப் செய்யப்பட்ட பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத்தியும் பொட்டு வைக்காத ஃபிகர் தான், ஆனா அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் இருட்டாவே இருப்பதாலும் அவர் பொட்டு வெச்சா என்ன? வைக்காட்டி என்ன என்ற எண்ணமே ஏற்படுது..

படத்தில் காமெடி மருந்துக்குக்கூட இல்லை. சீட்டின் நுனியில் அமர வைக்கும் அதிரடிகள்.  இருப்பதால் அது தேவையும் இல்லை

இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்

1. ஹீரோ, ஹீரோயின்  2 பேரும் ஹோட்டல்ல சாப்பிட வர்றாங்க.. ஹீரோ ஆர்டர் பண்ணிட்டு ஹீரோயின் கிட்டே பாத்ரூம்  போறேன்னு சொல்லிட்டு பாத்ரூம் வந்து அங்கே இருந்து  ஜம்ப் பண்ணி பின்பக்கம் வந்து முகத்தை மறைச்சு வில்லன் ஆள்ங்களை அடிச்சு துவம்சம் பண்ணி பின் நல்ல பிள்ளை மாதிரி ஹீரோயின் கூட உக்காந்து பேசுவது செம சீன்.. தீனா படத்தில் தல ஆக்‌ஷன் நினைவு படுத்துத்து

2. ஹீரோயினை அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக காட்டவோ, அல்லது வித்தியாசமான பெண்ணாக காட்டவோ இயக்குநர் அவரை வெட்கத்தை கேட்டால் கவர்ச்சியைத்தருவேன் என்று சொல்வது மாதிரி கேரக்டராக பயன்படுத்திட்டார்.. ஹீரோ படம் பூரா கம்முன்னு இருந்தாலும் ஹீரோயின் அப்பப்ப ஹீரோவை கில்மாக்கு  தூண்டி விட்டுட்டே இருப்பது புதுசு.. சொகுசு ரவுசு..

3. ஹீரோயினுக்கு ஹீரோ அழகிய கலர் கலரான பட்டர்ஃபிளை டிசைடு பாண்ட்டீஸ் கிஃப்ட் பார்சல் வாங்கித்தருவதும், ஊடலான பொழுதுகளில் ஃபோன் பண்ணி இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃபிளை எனக்கேட்டு கிளுகிளுக்க வைப்பதும் செம. ( காதலிக்கு ரோஸ், வாட்ச், கர்ச்சீஃப் வாங்கித்தர்ற காலம் மலை ஏறிப்போச்சுங்கோவ்)தடையறத்தாக்க திரைவிமர்சனம் (1)4. காதலிக்கு முன் ஃபிரண்ட்சை விட்டுத்தராத ஹீரோவின் குணமும், அதைக்கண்டும் காணாமல் இருப்பது போன்ற ஹீரோயினின் அனுசரிப்புத்தனமும், அண்டர்ஸ்டேண்டிங்கும் கவிதை.. அது சம்பந்தமான காட்சிகளில் இயக்குநரின் தொடுகை.. ( அதான்பா டைரக்‌ஷன் டச்)

5. பல காட்சிகளில் விறுவிறுப்பான பதை பதைப்பு .. டெம்போ கூட்டுவதில் இயக்குநர் கை தேர்ந்தவரா இருக்கார்..

6. பூந்த,மல்லி புஷ்ப வல்லி டப்பாங்குத்து பாட்டு செம கலக்கல் டேன்ஸ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. வில்லன்க தண்ணி அடிக்கற சீன்ல லாங்க் ஷாட் யூஸ் பண்ணக்கூடாதா? க்ளோசப்ல சரக்கை காட்றதும், மிக்சிங்கை விலாவாரியா காட்றதும் உவ்வே..

2. படத்துல எதுக்கு அதிக பட்ச இருட்டும், வலிய திணிக்கப்பட்ட மணிரத்னம் டைப் உள்வாங்கும் வசனங்களும்,.. சராசரி ரசிகனுக்கு புரியாது ( அந்த சராசரி ரசிகன் நான் தான் )

3. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை, அம்மா மார்க்கெட் போயிருக்காங்க.. ஹீரோயின் ஹால், வாசல் கதவை பெப்பெரப்பேன்னு திறந்து போட்டுட்டு பாத்ரூம்ல குளிக்குது./. எந்த ஊர்ல அப்படி குளிக்கறாங்க? ( ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்கறோம் ஏட்டய்யா )ஹீரோ நேரா உள்ளே வந்துடறாரு
( காட்சி கிளுகிளுப்பா இருந்தாலும் தமிழன் லாஜிக் பார்ப்பான் ஹி ஹி )

4. ஹீரோ 2 சீன்ல ஹோட்டல்ல ஒரு இங்க்லீஷ் ஃபார்ம் ஃபில்லப் பண்றாரு.. அவர் சாஃப்ட் வேர் கம்பெனி  டீலிங்க் எல்லாம் பண்றாரு. அப்படிப்பட்டவர்க்கு சாதாரண இங்க்லீஷ் வார்த்தையான சாரி (SORRY) என்பதற்குக்கூட ஸ்பெல்லிங்க் தெரியாதா? ஒரு சீன்ல தன் ஃபிரண்ட்ஸ் 5 பேர்ட்ட சாரிக்கு ஸ்பெல்லிங்க் என்ன?னு கேனத்தனமா கேட்கறார். அந்த லூசுங்களும் தெரியாதுன்னு சொல்லுது.. ஹய்யோ அய்யோ ( காமெடி சீன்னு நினச்சுட்டார் போல )

5. இடது கைப்பழக்கம் உள்ள ஹீரோ படத்துல பல காட்சிகளில் அதை மெயிண்டெயின் பண்றார்.. அவர் வாட்ச் கட்டறது கூட வலது கைல தான். ஆனா ஒரு சீன்ல அதாவது படம் போட்ட 57 வது நிமிஷத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல , அப்புறம் ஒரு ஃபைட் சீன்ல  எல்லாரையும் போல இடது கைல தான் கட்டி இருக்கார்

6. வில்லன்க ஆள்ங்க ஒரு பாருக்கு வர்றாங்க, அங்கே ஒருத்தனை அடையாளம் காட்டனும்.. அதோ அந்த தாடி வெச்சவன் தான்னு சொன்னா வேலை முடிஞ்சது.. அவன் ஏன் கை நீட்டி காட்டிக்கொடுக்கனும்? அவன் பார்த்தா எஸ் ஆக மாட்டானா?

7. ஒரு கிரிட்டிகலான சிச்சுவேஷன், ஹீரோ ஆட்டோல ஹீரோயின் கூட மிட் நைட்ல போறார்.. அவனுங்க வில்லன்க இருக்கற இடத்துல ஆட்டோவை ஓட்டி ஒரு சந்துல ஆட்டோவை நிறுத்தி ஓடுறாங்க.. இப்போ 24 பேர் வர்றாங்க .. ஆல்ரெடி ஹீரோ ஃபைட் எல்லாம் போட்டு வீரன்னு நிரூபிச்சாச்சு, இப்போ கூட காதலி. இந்த டைம்ல அவர் எவ்ளவ் முன் ஜாக்கிரதையா , வேகமா ஜாக்கிசான் மாதிரி சுறுசுறுப்பா ஃபைட் போடனும்? அதை விட்டுட்டு வில்லன் அடியாளுங்க கிட்டே வந்து 12 தடவை அடிச்சு பின் எம் ஜி ஆர் மாதிரி உதட்டுல ரத்தம் பார்த்த பின் ஃபைட் போடுவது ஓவர்

8. ஒரு சீன்ல ஹீரோ, ஹீரோயின் கார்னர் பண்ணப்படறாங்க, வில்லன் ஆளுங்க 64 பேர் இருக்காங்க , எல்லாரும் அரிவாளோட , தனி ஆளா ஹீரோ எந்த பாதிப்பும் இல்லாம ஃபைட் போட்டு ஜெயிக்கிறார், ஓக்கே ஹீரோயிஷம் தான். ஆனா வில்லன் ஆளூங்க அவ்ளவ் தத்தியா? ஹீரோயின் தேமேன்னு நிக்குது. 64 பேர்ல 4 பேரு ஹீரோயினை பணயப்பொண்ணா பிடிச்சா ஹீரோவை அடக்கலாமே? ரமணா டயலாக் மாதிரி இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் பாலிஸி.. அதை ஏன் யாரும் ட்ரை பண்ணலை?

9. கொலை செய்ய உபயோகப்படுத்துன கிரிக்கெட் பேட்டை  ஓடும் காரில் பார்க்கும் அந்த பெண் சாதாரணமா ஜன்னல் வழியா வெளில வீசினா மேட்டர் ஓவர்.. அவர் ஏன் மெனக்கெட்டு கார் பேனட்டுக்குள்ள வைக்கனும்? ஹீரோவை மாட்டி விடனும்கற எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் ரிஸ்க் எடுக்கறார்?

10. க்ளைமாக்ஸ்ல எல்லாம் சுபம்கற வேளைல அந்த பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குது?  வில்லனை கொலை செய்யும் துணிவு உள்ள பெண், கோடீஸ்வரி  ஏன் அந்த முடிவை எடுக்கனும்? கதைக்கு அந்த முடிவு எந்த அளவில் யூஸ்?

By Anonymous with No comments

நீதிமன்றத்தில் சரணடைந்த நித்தியானந்தா

கடந்த சில நாட்களாக ஆசிரம்த்திற்கு சீல் வைத்ததோடு நித்தியானந்தாவையும் தீவிரமாக தேடி வந்தனர் காவல்துறையினர். அனால் எதிர்பாராத விதமாக இன்று பெங்களூரை அடுத்துள்ள ராம்நகர் மாவட்ட மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் சரணடைந்த நித்தியானந்தாகர்நாடக மாநிலம் ராம்நகர் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அவர் மீது அமெரிக்காவில் வசித்து வரும் ஆர்த்தி ராவ் என்ற பெண் சீடர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னை மயக்கி பலமுறை நித்தியானந்தா உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் பல பெண்களை அவர் சீரழித்து வருகிறார் என்றும், ஹிப்நாட்டிசம் மூலம் பெண்களை அவர் அடிமையாக வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் பிடதி ஆசிரமத்தில் செய்தியாளர்கள் நித்தியானந்தாவை சந்தித்தபோது ஆர்த்தி ராவ் விவகாரம் வெடித்தது. நித்தியானந்தா ஆதரவாளர்களால் கன்னட சுவர்ணா டிவி செய்தியாளர் அஜீத் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்கு ஆதரவாக கன்னட நவநிர்மான் சேனே அமைப்பினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து இரு தரப்பினர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இரு தரப்பிலும் பலர் கைதானார்கள். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டார். அவரை ராம்நகர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். அவரது ஆசிரமும் தற்போது அரசின் கைகுக்குப் போய் விட்டது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தா மனு செய்தார். ஆனால் அந்தக் கோரிக்கையை ஏற்க கோர்ட் இன்று மறுத்து விட்டது. இதையடுத்து எந்த நேரத்திலும் அவர் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராம்நகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நித்தியானந்தா சரணடைந்துள்ளார்.

சரணடைந்த நித்யானந்தாவை ஒரு நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் ராம்நகர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

By Anonymous with 1 comment

Friday, April 13, 2012

அனைவருக்கும் சித்தரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Agniputhra

By Anonymous with No comments

Thursday, April 12, 2012

தமிழகம் முழுவதும் நிலநடுக்கம்

சென்னை : இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பத்தை அடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று  லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால்,  பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.  சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடுக்குமாடி  குடியிருப்புகள் குலுங்கின. பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மொபைல் போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

நிலநடுக்கம்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், ஊட்டி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் நேற்று பிற்பகலில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. பகலில் அனை வரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.  நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு வீதிக்கு வந்தனர்.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் வீதிக்கு வந்ததாலும், வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டதாலும், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்போன்களில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் தொடர்பு கொண்டதால் செல்போன் சேவை முற்றிலும் ஸ்தம்பித்தது.

மருத்துவமனைகளில் இருந்த நேயாளிகளும் வெளியே வந்தனர். இங்குபெட்டரில் வைக்கப்பட்ட குழந்தைகளைக் கூட பெற்றோர் பாதுகாப்புடன் வெளியே எடுத்து வந்தனர்.
அதேநேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. கடற்கரையோரங்களில் இருக்கும் பொதுமக்கள், அச்சத்துடன் தாங்கள் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் பீதி ஏற்பட்டது.

போலீசாரும் மைக்கில் எச்சரித்தனர். கடற்கரை ஓரங்களில் போலீசாரும், தமிழக அரசு அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதேபோல ஊட்டி, திருச்சி, மதுரையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் மழை பெய்யத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தடுக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கடற்கரை பகுதியில் இருந்து வெளியேறினர். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வளாகத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய இயக்குநர் கோபால் கூறியதாவது: சுமத்ரா தீவுக்கு வடக்கே கடலில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 1.40 மணியளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 8.7 ஆக அளவிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது.  இது தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தை பதிவு செய்யும் அளவுக்கு என்று பார்த்தால் 3 முறை பதிவாகியுள்ளது. மதியம் 1.40 மணிக்கு 8.7 ரிக்டரும், 2.08 மணிக்கு ஏற்பட்டது 8.5 ரிக்டர் அளவும், மாலை 4.16 மணி அளவில் 8.1 ரிக்டர் அளவும் பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மூன்று முறை அதிர்வு காணப்பட்டது.

By Anonymous with No comments

Wednesday, April 11, 2012

தாஜ்மஹால் பற்றி ஒரு ஆய்வு

ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு வரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.
அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ்.
taj-mahal (3)சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி மும்தாஜ் எவ்வாறு இறந்தார்?மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.
1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது.ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது. பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார்.சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால்.
 
உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
taj-mahal (1)தாஜ்மஹாலின் வெளிப்புறக் கதவுகள், சுவர்களில் பதிக்க இந்தியாவைத் தவிர ரஷியா, திபெத், பாரசீகம் என பல இடங்களில் இருந்தும் வைரம், வைடூரியம், முத்து, பவளம் என பல விதம் விதமாக வரவழைத்து பயன்படுத்தி அழகு பார்த்தார் ஷாஜஹான்.புனித குரானிலிருந்து குறிப்பிட்ட வாசகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கல்லறையைச் சுற்றிலும் உள்ள சுவர்களில் பொறிப்பது என்று முடிவு செய்தார். இதற்காக உலகிலேயே மிகத் திறமையான பாரசீக கலைஞர் ‘அமானாத்கான்’ பெயர் சிபாரிசுச் செய்யப்பட்டது.
‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
taj-mahal (2)இப்படி அங்குலம் அங்குலமாக பொன் நகையை உருவாக்குவது போல் கட்டினார் ஷாஜஹான். தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டு கொஞ்சம் காலம் முஸ்லீம்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.பிற்பாடு உலகெங்கிலும் இருந்து பலர் வர வர அந்தத் தடை தானாகவே நீங்கிப் போனது. இத்தகைய அழகான தாஜ்மகால் அதன்பிறகு வந்த ஆங்கிலேயெர்களின் கண்களை பறிக்காமல் இருக்குமா?
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுஸகலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.
மும்தாஜின் கடைசி நாள்:
மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.
taj-mahal (4)தாஜ்மஹால் உண்மை ரகசியம்: (காதலின் சின்னம்)
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம்.
தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் பி. என். ஓக் குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.
மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

By Anonymous with No comments

Tuesday, April 10, 2012

ஒரு திருடனை பிடிச்ச கதை

எனது மைத்துனன் வீட்டில் நடந்த உண்மை சம்பவம். நடந்தது என்னவோ ஒரு களவு ஆனா அதுக்கு கொடுத்த பில்டப்பு தான் றெம்ப றெம்ப பெரிசு, சரி நடந்த விசயத்துக்கு வாறன் எனக்கு இரண்டு மச்சான்மார் ஒருத்தன் பேரு சட்டி மற்றவன் பேரு அண்டங் காக்கா. ஒருத்தன் றெம்ப நல்லவன் மற்றவன் றெம்ப பீற்றரு. அவன் பீற்றர் மாத்திரமல்ல ஒரு body builder ம் கூட உயரம் 6 அடிக்கு மேல, இப்பிடி சொல்லப்படும் அண்டங் காக்கா ஒரு திருடனை பிடிச்ச கதை தான் இது.
இவர்கள் தந்த பேப்பர் ரிப்போட்.....

கள்ளன்ரிப்போட்டர்:-கள்ளன் வந்த போது நீங்க என்ன செஞ்சீங்க?

அண்டங் காக்கா:- நானு கொறட்டவிட்டு தூங்கிட்டிருந்தன்.

சட்டி:- நானு TV பாத்துகிட்டிருந்தன்.
 
ரிப்போட்டர்:- எத்தனை மணிக்கு தூங்கினீங்க சட்டி?

சட்டி:- நானு 11.30 க்கு படுக்க போனன் நாய் குலைக்கல, குலைச்சிருந்தா "கள்ளன் செத்தான்", அவன் விடியப்புறம் தான் வந்திருப்பான்.

ரிப்போட்டர்:-பக்கத்து வீட்டுகாறர் சொன்னாங்க நாய் 11 மணிக்கு விடாம குலைச்சதெண்டு!
 
சட்டி:- நான் 11 க்கு படுக்க போனன் நாய் குலைக்கல குலைச்சிருந்தா கேட்டிருக்குமே!!!!!

அண்டங் காக்கா:-இவன் எப்பவும் இப்புடி தான் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியாது அவன் இருந்தபடியே தூங்குவான்.
 
சட்டி:- நீதானே சின்ன சத்தம் கேட்டாலும் எளும்பிடுவ என்டுவ ஆனா நீ தூங்கினீ தானே?


body builderஅண்டங் காக்கா:- நான் முழிச்சிருந்தன் ஒரு கள்ளனை எண்டாலும் வெட்டி இருப்பன் "அவன் 10 அடி அடிச்சா நான் 2 அடி அடிக்கமாட்டன்"
நாய்க்கு கல்லால எறிஞ்சு தலையில காயம் இருக்குநாய் முழிப்பாகத்தான் இருந்திருக்கு” இவன் தான் தூங்கிட்டான்.


சட்டி:- இது என்ர பிழையில்ல சத்தம் கேட்டு நீங்க எழும்பாம இருந்தது உங்கட பிழை!
மொத்தத்தில சட்டியும் body builder ம் கள்ளனை கோட்டை விட்டது தான் நடந்தது ஆனா வீராப்பில யாரும் சளைச்சவங்க இல்ல.

By Anonymous with 1 comment

அனுஷ்கா வைச்ச ஆப்பு

அனுஷ்கா (1)நேரில் சிக்கினால் அநேகமாக அனுஷ்காவை கைமா செய்து விடுவார், த்ரிஷா. காரணம், ரொம்ப சிம்பிள். தெலுங்குப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். விக்ரமுடன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக்ஸ் பாண்டியன்’, செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இதை கூட த்ரிஷா பொறுத்துக் கொள்வார். அனுஷ்கா (2)ஆனால், தான் நடித்து வந்த விளம்பரப் படங்களை அடுத்தடுத்து அனுஷ்கா கைப்பற்றியதைதான் த்ரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்று தமிழகத்தில் த்ரிஷா, ஜீரோ.

கரீனா கபூரின் படங்களை பார்க்க...

By Anonymous with No comments

மழைக் குடை

மழையிலிருந்து தப்பிக்க குடை பிடிப்பது தான் வழமை. ஆனால் பிரித்தானியர்களுக்கு கையால் குடை பிடிப்பது கஷ்டமாக இருந்திருக்கிறது.
 குடை (2)அதைப் போக்க அவர்கள் கை பிடிக்கத் தேவையில்லாத குடையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
இனி மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தோளில் பொருத்தப்பட்ட வித்தியாசமான ஒரு குடையை அணிந்திருக்கிறார்கள் இவர்கள்.
இந்தக் குடையின் விலை £40 பவுன்கள் மட்டுமே. 50mph வேகத்தில் வீசுகின்ற காற்றையும் எதிர்க்கிறதாம் இந்தக் குடை.
இதிலுள்ள விசேடம் என்னவென்றால் மழையில் அல்லது வெய்யிலில் சைக்கிளில் செல்லும் போது இலகுவாகப் பிடிக்கலாம் என்பது தான்.
 குடை (1)

By Anonymous with No comments

Monday, April 9, 2012

ஒரு வார்த்தை சொன்னா

one side love (1)எல்லோருடைய வாழ்கையிலும் ஒரு one side love வரும் அது சொல்லப்போனால் ஒரு தல ராகம் மாதிரி,,,,,,
என் life லயும் அப்படி ஒருத்தி வந்தா.1st ஆ அவ என் கனவுலயும் வரவில்லை, நேரிலும் வரவில்லை, ஆனால் online ல வந்தா.
நா hi... சொன்னன் அவளும் hi.... சொன்னா.அவளால சாப்பிட முடியவில்ல,துாங்க முடியவில்ல,படிக்க முடியவில்ல என்டா.
நா அவகிட்ட நா உங்கல love பண்ணுரன்னு சொன்னன்.அவ கடசியா எல்லா பெண்ணுகள மாதிரி ஒரு வார்த்தை சொன்னா.
one side love (3)“நாம ஏன் friends ஆ இருக்கக் கூடாது”
one side love (2)காதல்னா உண்மை.இப்ப அதை சொய்பவர்கள் எல்லாம் பொய் ஆகி விட்டது
”வாய் பேச வாய்ப்பில்லையே வலி தீர வழி என்னவோ!!!!!!”

By Anonymous with 1 comment

Share me on facebook

  • Popular
  • Categories
  • Archives