Friday, April 13, 2012
Thursday, April 12, 2012
தமிழகம் முழுவதும் நிலநடுக்கம்
சென்னை : இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பத்தை அடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நேற்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால், பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. சென்னையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கின. பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. மொபைல் போன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், ஊட்டி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாநிலத்தின் பல இடங்களிலும் நேற்று பிற்பகலில் 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டது. பகலில் அனை வரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்தை உணர்ந்த மக்கள் செய்து கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு வீதிக்கு வந்தனர்.
பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. ஒரே நேரத்தில் அனைவரும் வீதிக்கு வந்ததாலும், வாகனங்களில் வீடுகளுக்கு புறப்பட்டதாலும், நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செல்போன்களில் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் தொடர்பு கொண்டதால் செல்போன் சேவை முற்றிலும் ஸ்தம்பித்தது.
மருத்துவமனைகளில் இருந்த நேயாளிகளும் வெளியே வந்தனர். இங்குபெட்டரில் வைக்கப்பட்ட குழந்தைகளைக் கூட பெற்றோர் பாதுகாப்புடன் வெளியே எடுத்து வந்தனர்.
அதேநேரத்தில் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. கடற்கரையோரங்களில் இருக்கும் பொதுமக்கள், அச்சத்துடன் தாங்கள் சில பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் பீதி ஏற்பட்டது.
போலீசாரும் மைக்கில் எச்சரித்தனர். கடற்கரை ஓரங்களில் போலீசாரும், தமிழக அரசு அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டனர். அதேபோல ஊட்டி, திருச்சி, மதுரையில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. கன்னியாகுமரியில் மழை பெய்யத் தொடங்கியது. மாநிலம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று தடுக்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக கடற்கரை பகுதியில் இருந்து வெளியேறினர். மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் நில நடுக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வளாகத்தில் உள்ள நிலநடுக்க ஆய்வு மைய இயக்குநர் கோபால் கூறியதாவது: சுமத்ரா தீவுக்கு வடக்கே கடலில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 1.40 மணியளவில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 8.7 ஆக அளவிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் தான் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இது தமிழகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தை பதிவு செய்யும் அளவுக்கு என்று பார்த்தால் 3 முறை பதிவாகியுள்ளது. மதியம் 1.40 மணிக்கு 8.7 ரிக்டரும், 2.08 மணிக்கு ஏற்பட்டது 8.5 ரிக்டர் அளவும், மாலை 4.16 மணி அளவில் 8.1 ரிக்டர் அளவும் பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மூன்று முறை அதிர்வு காணப்பட்டது.
Wednesday, April 11, 2012
தாஜ்மஹால் பற்றி ஒரு ஆய்வு
அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ்.
1631ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் திகதி அகமத் நகர், பீஜப்பூர் சுல்தான்களையும் வழிக்குக் கொண்டுவருவதற்காக மத்திய இந்தியாவுக்குப் படையோடு ஷாஜஹான் சென்றிருந்தபோது, மும்தாஜ் பதினாலாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். பிரசவம் முடிந்த கையோடு மும்தாஜுக்குத் திடீரென்று ஜன்னி பிறந்தது.ஷாஜகானுக்கு தகவல் சொல்லப்பட் டது. பதறிப்போய் ஓடிவந்தார் ஷாஜகான். அருமை மனைவியை அழுதபடி வாரி மடியில் இருந்திக்கொண்டார்.சில நிமிடங்கள் கணவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்டிருந்த மும்தாஜின் தலை சாய்ந்தது. அன்பு மனைவியின் பிரிவைத் தாக்கமுடியாமல் துவண்டுபோனார் மன்னர். அந்த அன்புக்காக உளிச்சத்தங்களால் அறிவிக்கப்பட்ட வெள்ளை மௌனம்தான் அந்த தாஜ்மஹால்.
உலக வரலாற்றில் தாஜ்மஹாலைப் போல் ஒரு இனிய கல்லறை இன்னும் எத்தனை ஜென்மங்களிலும் உதயமாகப் போவதில்லை. மும்தாஜ் எனும் அழகிய மனைவியின் மீது ஷாஜகான் வைத்திருந்த நேசத்தின் கலை வடிவம் அது.வாழ்வில் ஒரு முறையாவது காண வேண்டிய அந்த கலை மிகு கட்டிடம் எழுந்த கதை பெருங்கதை. தட்சிணப் பிரதேசம் பர்ஹான்பூர் என்ற ஊரில்தான் முதன் முதலாக மும்தாஜின் உடல் புதைக்கப்பட்டது. இதற்குப் பின் ஆறு மாதம் கழித்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆக்ராவில் இப்போது தாஜ்மஹால் உள்ள இடத்தில் புதைக்கப்பட்டது.மும்தாஜ் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து ஷாஜஹான் களத்தில் இறங்கினார்.
வெனிஸ் நகரத்து வெரோனியா, துருக்கி நாட்டு உஸ்தாக் இசா அபாண்டி, லாகூரைச் சேர்ந்த அகமத் எனப் பலரும் வந்திருந்து ஷாஜகானும், கூட்டுச் சேர்ந்து அமைத்த மொத்த வடிவமே இன்றைய தாஜ்மஹால்.அடுத்த கட்டமாக கட்டிடக் கலைஞர்கள், சிற்பிகள், கொத்தனார்கள் என இருபதாயிரம் பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு மள மளவென பணிகளைத் தொடங்கினார் ஷாஜஹான்.1632- ம் ஆண்டு வேலைத் தொடங்கி 1652 வரை சுமார் 20 ஆண்டு கால உழைப்பின் சின்னம்தான் இந்த தாஜ்மஹால்ஸ. அதற்குப் பிறகு கூட ஒரு ஆண்டுக்கு வெளியேயுள்ள சுற்றுப் புறத்தில் மிக நுண்ணிய வேலைகள் நடந்தன. தாஜ்மஹாலைச் சுற்றி 42 மீட்டர் உயரத்திற்கு நிற்கும் 4 மினார்களும் (தூண்) லேசாக வெளிப்புறம் சாய்த்து வைத்து கட்டியிரிக்கிரார்கள். காரணம் ஏதேனும் அசம்பாவிதத்தில் அந்த தூண்கள் விழுந்தால் கூட தாஜ்மஹால் மீது பட்டுவிடக் கூடாதே என்ற காரணுத்துக்காகத்தான்.
‘நான் எந்த வேலைச் செய்தாலும் அதில் என் கையெழுத்தைப் போடுவேன் என்று அடம்பிடித்த அவரை ‘சரிஸகையெழுத்து போட்டுக்கொள்ளுங்கள்’ என்று அனுமதிக் கொடுத்து வரவழைத்தார் ஷாஜஹான். இன்றைக்கும் அந்தச் சிற்பியின் கையழுத்தைக் காணலாம். தாஜ்மகாலில் இவரது கையழுத்தைத் தவிர வேறு எவரின் பெயரும் கிடையாது.
பல ஆங்கில அதிகாரிகள் சுவர்களில் பதிக்கப் பட்ட வைர, வைடூரியங்களை சுரண்டி எடுத்துக் கொண்டு போனார்கள். லார்டு வில்லியம் பெண்டிங் என்பவர் இடித்து விடலாம் என்று ஐடியா கொடுத்தார். இன்னும் பல ஆங்கிலேய அதிகாரிகள் தாஜ்மகாலை ஒவ்வொரு கல்லாக பெயெர்தெடுத்து, கப்பலில் ஏற்றிக் கொண்டு போய், இங்கிலாந்தில் இறக்கி மீண்டும் செட்டப் செய்து விடலாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இறைவனின் கருணையால்ஸ இன்றைக்கும் இப்படியொரு அற்புதக் கட்டிடம் இந்தியாவில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் அப்போது வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுஸகலைஞர்களின்பால் மிகுந்த ஆர்வமும், ஆசையும் கொண்டிருந்த அவர் மற்றவர்களின் யோசனையை தூரத் தூக்கி எறிந்துவிட்டு தாஜ்மஹாலை நல்ல முறையில் பராமரிக்க ஒரு சட்டமே இயற்றினார். அதோடு மட்டுமல்ல.. இப்போது நீங்கள் தாஜ்மஹாலுக்குப் போனால் மும்தாஜ் – ஷாஜஹான் கல்லறைகளுக்கு மத்தியில் மேலே ஸ ஒரு அழகான பித்தளை விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும்.
இதனைக் கொய்ரோவிலுருந்து வாங்கி, இங்கு தொங்கவிட்டவரே இந்த கர்சன் பிரபுதான்.இந்த தாஜ்மஹால் கட்டுவதற்கு 1000 யானைகளும், 40000 பணியாளர்களும் வேலை செய்யப்பட்டனர்.
மும்தாஜின் கடைசி நாள்:
மும்தாஜுக்கு மொத்தம் 13 குழந்தைகள் (1613- 1631) க் குள் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இதில் 7 குழந்தைகள் மிக சிறுவயதிலேயே இறந்து போனது. உயிருடன் தாரா, சூசா, அவுரங்கசீப், மூரத் ஆகிய 4 ஆண் குழந்தைகளும் சாகனார, ரோனார, கவுஷனாரா ஆகிய 3 பெண் குழந்தைகளும் இருந்தார்கள். இதில கடைசிப் பெண்ணான கவுஷனாராவைப் பெற்றுடுக்கும்போதுதான் பிரசவ வலி தாள மாட்டாமல் 07-06-1631 ல் மும்தாஜ் இறந்துபோனாள்.
தாஜ் மஹால் ஷாஜஹானால் கட்டப் பட்டது கிடையாது. அது அவர் ஒரு ராஜ்புட் அரசரிடமிருந்து (ஜெய் சிங்) பிடுங்கியது. மும்தாஜுக்காக ஷாஜஹான் தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.
இப்ப விஷயத்துக்கு வருவோம்.
தாஜ் மஹால்ல் விஷயத்தில் உலகம் முழுவது ஏமாற்றப் பட்டுள்ளது. தாஜ் மஹால் மும்தாஜின் சமாதி அல்ல அது ஒரு புராதான சிவன் கோயில் என்று பேராசிரியர் பி. என். ஓக் குறிப்பிடுகிறார். முன் காலத்தில் தாஜ் மஹால் “தேஜோ மஹாலயா” என்ற பெயரால் அழைக்கப் பெற்றது என்கிறார். நம்ம ஷாஜஹான் ராஜ்புட் அரசர் ஜெய் சிங் கிட்டேர்ந்து இந்த பெரிய பில்டிங்கை ஆட்டைய போட்டதா சொல்றார். அது மட்டுமின்றி ஷாஜஹான் தன் சொந்த குறிப்புகளில் (பாத்ஷாநாமா) “ஆக்ராவில் மிகவும் அழகான ஒரு மாளிகை தனை ஆட்டையைப் போட்ட விவரத்தைக் குறித்து வைத்துள்ளார்”. எனினும் அது தான் தாஜ் மஹால் என அவர் எழுதவில்லை.
முன்னால் ஜெய்பூர் மஹா ராஜாவின் குறிப்புகளில் ஷாஜஹான் ராஜ்புட் மன்னன் ஜெய் சிங்கிற்கு இது குறித்து அனுப்பிய இரண்டு ஆணைகள் இன்னும் பத்திரமாய் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
முகலாயர்கள் ஆண்ட காலத்தில் கோயில்களைலும் பெரிய மாளிகைகளைலும் இறந்த முகலாய மன்னர்களையும் ராணிகளையும் புதைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தனர் என்பது எல்லோரும் அறிந்ததே. உதாரணம். ஹுமாயுன், அக்பர், எத்மத் உத் தவுலா, சப்தர்ஜங் இவர்கள் அனைவரும் புதைக்கப் பட்டுள்ள இடங்கள் பெரிய மாளிகைகளே என்பது குறிப்பிடத் தக்கது.
பேராசிரியர் ஓக் தன் விசாரணை தனை “தாஜ் மஹால்” எனும் பெயரிலிருந்து துவக்கினார். இது பற்றி அவர் “மஹால்” எனும் வார்த்தை அப்கானிஸ்தான் முதல் அல்ஜீரியா வரை எந்த ஒரு நாட்டிலும் வழக்கத்தில் இல்லை என்று குறிப்பிடுகிறார். வழக்கத்துக்கு மாறான இந்த “மஹால்” எனும் சொல் நிச்சயம் மும்தாஜ் மஹால் எனும் பெயரிலிருந்து வரவில்லை என்று உறுதியாய்க் கூறுகிறார். முதலாவதாய் மும்தாஜின் முழுப் பெயர் மும்தாஜ் உல் ஜமானி என்பதாகும். இரண்டாவதாய், “மும்தாஜ் என்ற பெயரின் முதல் மூன்று எழுத்துக்களை நீக்கி விட்டு “தாஜ்” என்ற பெயரைப் பெற்றிருப்பது சற்றே விசித்திரமானது என்றும் அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். மேலும் ஷாஜஹான் மும்தாஜின் காதல் கதை தாஜ் மஹால் விவகாரத்தை மறைக்க உருவாக்கப் பெற்ற ஒரு அம்புலிமாமா கதை என்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் நியுயார்க்கை சேர்ந்த பேராசிரியர் மார்வின் மில்லர் தாஜ் மஹாலின் சில மாதிரிகளை எடுத்து கார்பன் டேட்டிங் முறைப் படி தாஜ் மஹாலின் ஆயுளை கணித்தார். அவர் கருத்துப் படி தாஜ் மஹாலின் வயது 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆல்பர்ட் மாண்டேஸ்லோ என்பவர் 1638ஆம் ஆண்டு (மும்தாஜ் இறந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு), ஆக்ரா வந்த்துள்ளார். அவருடைய குறிப்புகளில் தாஜ் மஹால் கட்டப் படுவதற்கான எந்த ஒரு குறிப்பும் இல்லை. மேலும் பீட்டர் மண்டி என்ற ஒரு ஆங்கிலேயர் மும்தாஜ் இறந்து ஒரு ஆண்டுக்குள் ஆக்ரா வந்த போது தன் குறிப்புகளில் இன்றைய தாஜ் மஹாலின் கலை நயம் பற்றி மிகவும் புகழ்ந்து எழுதியுள்ளார். வரலாறின் படி தாஜ் மஹால் மும்தாஜ் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டி முடிக்கப் பட்டது என்பது நினைவிருக்கட்டும்.
மேலும் பேராசிரியர் ஓக் அவர்கள் ஏகப்பட்ட கட்டிட நுணுக்கங்களை மையமாகக் கொண்டு அது ஒரு இந்துக் கோயில் என்று அடித்துக் கூறுகிறார். இன்றும் தாஜ் மஹாலின் பெரும் பகுதி பொது மக்களின் பார்வைக்கு திறந்து விடப்படுவதில்லை. அதன் காரணம் என்னவென்று கேட்ட எவருக்கும் கிடைக்கும் பதில் – “பாதுகாப்பு” எனும் ஒற்றை வார்த்தை தான். அது மட்டுமின்றி தாஜ் மஹாலினுள் தலையில்லாது ஒரு சிவன் சிலையும் இந்துக்கள் பூஜைக்குப் பயன் படுத்தும் பல பொருட்களும் உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
அரசியல் காரணங்களார் திரு ஓக் அவர்களின் புத்தகம் இந்தியாவில் இந்திரா காந்தியால் தடை செய்யப்பட்டது. அவர் கூறுவதை உறுதிப் படுத்திக்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் ஒரு தொல் பொருள் ஆய்வுக் குழு ஒன்றை உருவாக்கி அவர்கள் தாஜ் மஹாலை ஆய்வு செய்ய வகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.
Tuesday, April 10, 2012
ஒரு திருடனை பிடிச்ச கதை
எனது மைத்துனன் வீட்டில் நடந்த உண்மை சம்பவம். நடந்தது என்னவோ ஒரு களவு ஆனா அதுக்கு கொடுத்த பில்டப்பு தான் றெம்ப றெம்ப பெரிசு, சரி நடந்த விசயத்துக்கு வாறன் எனக்கு இரண்டு மச்சான்மார் ஒருத்தன் பேரு சட்டி மற்றவன் பேரு அண்டங் காக்கா. ஒருத்தன் றெம்ப நல்லவன் மற்றவன் றெம்ப பீற்றரு. அவன் பீற்றர் மாத்திரமல்ல ஒரு body builder ம் கூட உயரம் 6 அடிக்கு மேல, இப்பிடி சொல்லப்படும் அண்டங் காக்கா ஒரு திருடனை பிடிச்ச கதை தான் இது.
இவர்கள் தந்த பேப்பர் ரிப்போட்.....
ரிப்போட்டர்:-கள்ளன் வந்த போது நீங்க என்ன செஞ்சீங்க?
அண்டங் காக்கா:- நானு கொறட்டவிட்டு தூங்கிட்டிருந்தன்.
சட்டி:- நானு TV பாத்துகிட்டிருந்தன்.
ரிப்போட்டர்:- எத்தனை மணிக்கு தூங்கினீங்க சட்டி?
சட்டி:- நானு 11.30 க்கு படுக்க போனன் நாய் குலைக்கல, குலைச்சிருந்தா "கள்ளன் செத்தான்", அவன் விடியப்புறம் தான் வந்திருப்பான்.
ரிப்போட்டர்:-பக்கத்து வீட்டுகாறர் சொன்னாங்க நாய் 11 மணிக்கு விடாம குலைச்சதெண்டு!
சட்டி:- நான் 11 க்கு படுக்க போனன் நாய் குலைக்கல குலைச்சிருந்தா கேட்டிருக்குமே!!!!!
அண்டங் காக்கா:-இவன் எப்பவும் இப்புடி தான் என்ன நடந்தாலும் அவனுக்கு தெரியாது அவன் இருந்தபடியே தூங்குவான்.
சட்டி:- நீதானே சின்ன சத்தம் கேட்டாலும் எளும்பிடுவ என்டுவ ஆனா நீ தூங்கினீ தானே?
அண்டங் காக்கா:- நான் முழிச்சிருந்தன் ஒரு கள்ளனை எண்டாலும் வெட்டி இருப்பன் "அவன் 10 அடி அடிச்சா நான் 2 அடி அடிக்கமாட்டன்"
நாய்க்கு கல்லால எறிஞ்சு தலையில காயம் இருக்கு “நாய் முழிப்பாகத்தான் இருந்திருக்கு” இவன் தான் தூங்கிட்டான்.
சட்டி:- இது என்ர பிழையில்ல சத்தம் கேட்டு நீங்க எழும்பாம இருந்தது உங்கட பிழை!
மொத்தத்தில சட்டியும் body builder ம் கள்ளனை கோட்டை விட்டது தான் நடந்தது ஆனா வீராப்பில யாரும் சளைச்சவங்க இல்ல.
அனுஷ்கா வைச்ச ஆப்பு
நேரில் சிக்கினால் அநேகமாக அனுஷ்காவை கைமா செய்து விடுவார், த்ரிஷா. காரணம், ரொம்ப சிம்பிள். தெலுங்குப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். விக்ரமுடன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக்ஸ் பாண்டியன்’, செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இதை கூட த்ரிஷா பொறுத்துக் கொள்வார்.
ஆனால், தான் நடித்து வந்த விளம்பரப் படங்களை அடுத்தடுத்து அனுஷ்கா கைப்பற்றியதைதான் த்ரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்று தமிழகத்தில் த்ரிஷா, ஜீரோ.
மழைக் குடை
இனி மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க தோளில் பொருத்தப்பட்ட வித்தியாசமான ஒரு குடையை அணிந்திருக்கிறார்கள் இவர்கள்.
இந்தக் குடையின் விலை £40 பவுன்கள் மட்டுமே. 50mph வேகத்தில் வீசுகின்ற காற்றையும் எதிர்க்கிறதாம் இந்தக் குடை.
இதிலுள்ள விசேடம் என்னவென்றால் மழையில் அல்லது வெய்யிலில் சைக்கிளில் செல்லும் போது இலகுவாகப் பிடிக்கலாம் என்பது தான்.
Monday, April 9, 2012
ஒரு வார்த்தை சொன்னா
ஈரான் அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்
வாஷிங்டன் : ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை நிரூபித்தால், அதன் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அணுஆயுதங்கள் தயாரிப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இதை ஏற்க மறுத்துவரும் ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, ஈரான் மீது போர்தொடுக்கப் போவதாகவும் இஸ்ரேல் எச்சரித்தது.
அதேநேரம், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரானும் மிரட்டல் விடுத்தது. இந்நிலையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ''அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், அதன் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம். மேலும் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்'' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலை துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனிடம் கூறி, அதை ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனியிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, கமேனியிடம் தயிப் கடந்த வாரம் தகவலை தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
Saturday, April 7, 2012
கங்குலி தான் பெஸ்ட் கேப்டன்
Friday, April 6, 2012
சென்னையில் வேகமாக பரவுது பன்றிக் காய்ச்சல்
சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரே வாரத்தில் 2 சிறுமிகள் உள்பட 10 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சலுக்கு திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் பலியானார். கோவையில் 4 வயது குழந்தை, சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த பள்ளி சிறுமிகள் 2 பேர் உள்பட 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 2 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படித்த பள்ளிகளிலும் சுகாதார துறையினர் பரிசோதனை நடத்தினர். காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமி புளூ மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பேரை இந்நோய் தாக்கியுள்ளது. அவர்களில் 10 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்காக அங்கு நவீன கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில்தான் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அம்பத்தூர், வேளச்சேரி, தரமணி, சைதாப்பேட்டை பகுதியில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று தி.நகர், தரமணி பகுதியில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. ஏற்கனவே கொருக்குப்பேட்டை பள்ளி சிறுமிகள் 2 பேர் உள்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் டாமி புளூ மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகிறது. 25 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசி மற்றும் டாமி புளூ மாத்திரைகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரிடமிருந்துதான் தமிழக மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யும் வகையிலும் ரயில் மற்றும் விமான நிலையங்களில் நோய் தடுப்பு மையம், மருத்துவ குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை, கோவை, திருப்பூரை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் இருமல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுவரை 26 பேர் பலி
இந்தியாவில் 2009-ம் ஆண்டுதான் முதன்முதலாக பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அப்போது பலர் இந்த நோய்க்கு பலியாயினர். அடுத்த 2 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைந்தது. கடந்த ஆண்டு ஒருவர் மட்டும் இந்நோய்க்கு பலியானார். இந்த ஆண்டு தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழகத்தில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று பன்றி காய்ச்சல் பாதிப்பால் 48 வயது பெண் ஒருவர் இறந்தார். இவருடன் சேர்த்து மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 350 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Thursday, April 5, 2012
ஷங்கரின் அடுத்த படத்தில் தீபிகா படுகோன்?
‘நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.
மின் கட்டண உயர்வை ரத்து செய்
மாநில இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் மின்வெட்டு இருக்காது என தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு சரியாக 6 மாதம் ஆகும் என்றும், பின்னர் ஒரு ஆண்டு என்றும், தற்போது மின்வெட்டு பிரச்னை தீர இரண்டு ஆண்டுகள் தேவை என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மதிப்பு கூட்டு வரி ரூ.4 ஆயிரம் கோடி உயர்த்தினார். உள்ளாட்சி தேர்தல் முடிந்து ரூ.3 ஆயிரம் கோடி பஸ், பால் கட்டணத்தை உயர்தினார்.
தொடர்ந்து பத்திரப் பதிவையும் உயர்த்தினார். தற்போது நடந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.6,500 கோடி வரி போட்டுள்ளார். தற்போது ரூ.7872 கோடி மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் மொத்தம் ரூ.40 அளவில் வரி, கட்டணத்தை உயர்த்தி அரசின் வருமானத்தை அதிகரித்துள்ளார். இவ்வளவு உயர்த்தியும் மின்கட்டண உயர்வு தேவையா? தமிழக சரித்தரத்தில் இப்படியொரு கட்டண உயர்வு நடந்ததில்லை. ஜெயலலிதா 2013ல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறி உள்ளார். ஆனால் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு கூட திட்டத்தை அறிவிக்கவில்லை.
தமிழகத்துக்கு மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. 4500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு மத்திய, மாநில ஆட்சிகள் தான் காரணம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் புதிய திட்டங்களை கொடுப்போம். தமிழக அரசு மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பேசினார்.
கும்ப ராசி 2012ம் ஆண்டு பலன்
மகர ராசி 2012ம் ஆண்டு பலன்
மீன ராசி 2012ம் ஆண்டு பலன்
விருச்சிக ராசி 2012ம் ஆண்டு பலன்
தனுசு ராசி 2012ம் ஆண்டு பலன்
துலா ராசி 2012ம் ஆண்டு பலன்
.jpg)




















