Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, June 22, 2012

சகுனி திரைவிமர்சனம்

சகுனி திரை விமர்சனம் (5)ட்ரீம் வாரியர்ஸ் & ஞானசேகரன் தயாரிப்பில் கார்த்தி-சந்தானம் காம்பினேசனில் இன்று வெளியாகியிருக்கும் படம் சகுனி. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வரும் அரசியல் படம் என்பதாலும் கமல்-ரஜினி-ஸ்ரீதேவி காம்பினேசன் என ட்ரெய்லரே கலக்கியதாலும் கார்த்தி மாஸ் ஹீரோவாக ஆகிக் கொண்டிருக்கும் வேளையில் வெளியாகும் படம் என்பதாலும் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படம் இது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால்...

காரைக்குடி கார்த்தியின் ஒரே சொத்தான செட்டிநாட்டு பெரிய பங்களாவை ரயில்வே புராஜக்ட்டுக்காக அரசு எடுத்துக்கொள்ளப்போவதாக அறிவிப்பு வருகிறது. தன் பங்களாவைக் காப்பாற்றிக்கொள்ள, ரயிவே அமைச்சர்-முதல்வர் என அரசியல்வாதிகளைப் பார்த்து முறையிட சென்னை வருகிறார் முதல்வர். அப்பாவி பொதுஜனமாக முறையிட்டால், எந்த மரியாதையும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டு, கார்த்தி எடுக்கும் அவதாரமே ‘சகுனி’.

சகுனி திரை விமர்சனம் (3)கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் ஸ்டோரி செலக்சன் தான். எப்போதும் காமெடி கலந்த கதாபாத்திரத்தையே தேர்வு செய்வது மற்றொரு ப்ளஸ் பாயிண்ட். இதிலும் சமீபகாலமாக யாருமே தொடாத அரசியல் கதையை தேர்வு செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க ஜாலியான இளைஞனாக, சந்தானத்தை கடுப்பேற்றுபவராக, ப்ரணீதாவை காதலிப்பவராக, அரசியல்வாதிகளின் ஆலோசகராக கலக்குகிறார் கார்த்தி.

சந்தானம் வழக்கம்போல் ஒன் லைனரில் கலக்குகிறார். ரஜினி (அப்பாத்துரை)_ஆக சந்தானமும் ’கமல’(க்கண்ணன்)-ஆக கார்த்தியும் அறிமுகமாகி பேசிக்கொள்ளும் காட்சிகள் செம ரகளை.

சகுனி திரை விமர்சனம் (8)ட்ரெய்லரின் ரஜினி-கமல்-ஸ்ரீதேவி என பெரிய பில்டப் கொடுத்துவிட்டதால், அதை வைத்து இன்னும் நல்ல காமெடியைக் கொடுத்திருக்கலாம். அதில் ஏமாற்றமே! ஆனாலும் சந்தானம் வரும் காட்சிகளில் கலகலப்புகுப் பஞ்சமில்லை.

ப்ரணீதா.... பெரிதாக நடிக்க சான்ஸ் இல்லாவிட்டாலும் டூயட்களில் கல்ர்ஃபுல்லாக ஆடுகிறார், ஹீரோவைக் காதலிக்கிறார். இடைவேளைக்கு அப்புறம் காணாமல் போகிறார். படம் முடியும்போது கட்டிப் பிடிக்கிறார்(ஆடியன்ஸை இல்லீங்க..ஹீரோவைத் தான்!). தமிழில் இருக்கும் ஹீரோயின்கள் எல்லாம் (ஹி..ஹி..ஹன்சி தவிர) பழசாகி விட்ட நிலையில் ப்ரணீதாவுக்கு வளமான எதிர்காலம் உண்டு. அழகான கண்களுடன் ப்ரணீதா பளபளப்பாக வலம்வருகிறார். ஆளும் ‘வளமாகவே’ இருக்கிறார் என்பது மேலும் சிறப்பு!

சகுனி திரை விமர்சனம் (1)வில்லன் முதல்வராக பிரகாஷ்ராஜ். நீண்ட நாளைக்கு அப்புறம் படம் முழுக்க வரும் கதாபாத்திரம். வழக்கம்போல் கேஷுவலாக கலக்கிச் செல்கிறார் மனிதர். கவுன்சிலர்-மேயராக ராதிகா, சாமியாராக நாசர், எதிர்க்கட்சித் தலைவராக கோட்டா ஸ்ரீனிவாசராவ் என பொருத்தமான பாத்திரத் தேர்வுகள். படத்தின் பலமாக வசனங்களைச் சொல்லலாம். முடிந்தவரை திரைக்கதையை காமெடியாக அமைத்ததும் படத்தை ரசிக்க வைக்கிறது.

கந்துவட்டி ராதிகாவை மேயராக ஆக்கும் கார்த்தியின் சகுனி வேலைகள் அட்டகாசம். ஆனால் அதே போன்றே கோட்டா ஸ்ரீனிவாசராவை கார்த்தி முதல்வர் ஆக்குவது ஒரு ரிப்பீட்னெஸைத் தருகிறது. பார்த்த காட்சிகளையே வேறு வடிவில் பார்க்கிறோம் என்ற சலிப்பு வரவே செய்கிறது. அதனாலேயே கடைசிக் காட்சிகளில் திரைக்கதையில் ஒரு தொய்வு விழுந்து விடுகிறது.

முதல்பாதியில் அனுஷ்கா வரும் காட்சிகள் எவ்வித காமெடியைவும் உண்டாக்கவில்லை. அதைவிட ப்ரணீதா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை அதிகமாக்கியிருக்கலாம். ’சந்தானத்திடம் கதை சொல்லும்’ திரைக்கதை உத்தி அருமை. அது இல்லையென்றால் முதல்பாதி மொக்கையாகவே ஆகியிருக்கும்.

வீடு மேல் கார்த்தி கொண்டிருக்கும் செண்டிமெண்ட்டைப் பற்றி விரிவான காட்சிகள் இல்லை. அரசியல் ஆலோசகராக ஆகும் கார்த்திக்கு அதற்குரிய பின்புலம் ஏதாவது இருப்பதுபோல் காட்டியிருக்கலாம். அதனாலேயே படத்தை முழுக்க ரசிக்க முடியவில்லை.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அருமை. முத்தையாவின் ஒளிப்பதிவும் ஸ்ரீஇதர் பிரசாத்தின் எடிட்டிங்கும் படத்துக்கு பக்க பலம். அனல் அரசுவின் சண்டைக்காட்சிகளில் அதிகம் எதிர்பார்த்தேன். தேவையில்லாத சண்டைக்காட்சிகள் என்பதால் படத்தோடும் ஒட்டவில்லை.

இருப்பினும் வித்தியாசமான கதைக்களனுடன், அரசியல் கதையை காமெடி கலந்து சொல்லியிருப்பதால் ஒரு முறை பார்க்கலாம்.சகுனி திரை விமர்சனம் (2)சகுனி திரை விமர்சனம் (6)சகுனி திரை விமர்சனம் (9)சகுனி திரை விமர்சனம் (10)சகுனி திரை விமர்சனம் (11)சகுனி திரை விமர்சனம் (4)சகுனி திரை விமர்சனம் (7)

By Anonymous with 1 comment

கலகலப்பு திரைவிமர்சனம்

கதாநாயகி குஷ்புவே மாஜி கதாநாயகி ஆன பின்பு, அவரை காதலித்து கரம்பிடித்த சுந்தர்.சி, இனியும் கதாநாயகராக காலம் தள்ள முடியாது எனும் நிலையில் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் "கலகலப்பு". சுந்தர்.சி படம் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது! இந்தப்படத்திற்கு டைட்டிலேயே கலகலப்பு என வைத்தவர் காமெடிக்கு பஞ்சம் வைப்பாரா என்ன...? படம் மொத்தமும் சிரிப்பும், களிப்புமாய் கலக்குதப்பு! என சொல்ல வைக்கும் விதத்தில் இருக்கிறது! பேஷ், பேஷ்!!

கலகலப்பு திரைவிமர்சனம் (3)கதைப்படி பரம்பரை பரம்பரையாக தங்கள் வசம் இருந்து வரும் ஹோட்டலை இந்தகாலத்திலும் காப்பாற்றி கரை சேர்க்க போராடும் அண்ணன் - தம்பிகள் "களவாணி" விமலும், "தமிழ்படம்" சிவாவும்! அண்ணன் விமலுக்கு சுகாதார அதிகாரி அஞ்சலியுடன் காதல். தம்பி சிவாவுக்கு, விமல் படிக்க வைத்து காப்பாற்றி வரும் ஓவியா மீது காதல்! அஞ்சலி மீதான காதலால் விமல் ஒரு கட்டத்தில் ஹோட்டலை விட்டு தூர தேசம் செல்ல வேண்டிய சூழல்! அந்த சூழலில் ஹோட்டலை அபகரிக்க நினைக்கும் நயவஞ்சகர்களிடம் சிவா, ஹோட்டலை வைத்து சூதாடுகிறார்! தோற்றுபோகிறார்! அஞ்சலியின் தாய்மாமன் சந்தானத்திடமிருந்து அஞ்சலியையும், தம்பியை ஏமாற்றி சூதாட்டத்தில் ஹோட்டலை அபகரித்தவர்களிடமிருந்து ஹோட்டலையும் விமல் எவ்வாறு மீட்கிறார்? சிவா அதற்கு எப்படி துணை நிற்கிறார்? என்பது தான் கலகலப்பு படத்தின் மொத்த கதையும். இந்த கதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் சொல்ல முடியுமோ அத்தனைக்கு அத்தனை கலக்கலாக, கம்ர்ஷியலாக சொல்லி இருக்கும் சுந்தர்.சிக்கு சொல்லியே ஆக வேண்டும் ஒரு பெரிய ஹேட்ஸ் ஆப்!

ஹோட்டலை டெவெலப் பண்ணுகிறேன் பேர்வழி, என அங்கே இங்கே வட்டிக்கு வாங்கி, ஒவ்வொரு முறையும் பெரிய நஷ்டமாகி கடன்காரர்க‌ளை கண்டு ஓடி ஓளியும் அப்பாவி பாத்திரத்தில் விமல் வெளுத்து வாங்கியிருக்கிறார். சுகாதார அதிகாரி அஞ்சலிதான் என தெரியாமல் அவரிடம் எக்குதப்பாய் மாட்டிக் கொண்டு பின் எஸ்கேப் ஆகும் இடங்களில் விமல் பிரமாதம்!

கலகலப்பு திரைவிமர்சனம் (1)சிவா திருடனாக ஜெயிலுக்கு போனதை மறைக்க துபாய்க்கு போய் திரும்பியதாக ஓவியாவுக்கு ரூட் விடுவதும், உண்மை தெரிந்ததும் அசடு வழிவதுமாக அலட்டி கொள்ளாத நடிப்பில் ஆங்காங்கே விமலையே தூக்கி சாப்பிட்டு விடுகிறார். சிவா, அண்ணன் காதலி அஞ்சலிக்காக ஹேண்ட்பேக்கும், தன் காதலி ஓவியாவிற்காக பலவிதமான பொருட்களையும் ஒரு ஷாப்பிங் காம்பளக்ஸீக்குள் மாறுவேடத்தில் புகுந்து திருடி கொண்டு வரும் இடங்களில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

அஞ்சலி, ஓவியா என இரண்டு கதாநாயகிகள் இருவருமே தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். நடிப்பில் மட்டுமல்ல, கவர்ச்சி விருந்து படைப்பதிலும் இருவரும் போட்டிபோட்டு கலகலப்பை கவர்ச்சியாய் ஆக்கியிருப்பது படத்தின் பெரும்பலம்!

அஞ்சலியின் முறைமாப்பிள்ளை வெட்டுப்புலியாக வரும் சந்தானம், கிட்டத்தட்ட படத்தின் மூன்று நாயகர்களில் ஒருவர் எனும் அளவிற்கு காமெடி ப்ளஸ் காமநெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

கலகலப்பு திரைவிமர்சனம் (2)பஞ்சு சுப்பு பத்துகோடி வைரத்தை செல்போனில் மறைத்து வைத்து தெரிந்தவரிடம் கொடுத்து வைத்து இன்சூரன்ஸ் பெற முயற்சிப்பது, அந்த வைரங்கள் விபச்சார அழகிகள், புரோக்கர், போலீஸ், ரவுடி என கைமாறி விமல் - சிவா கைகளில் சிக்குவது, அதை திரும்பபெற விமலின் நண்பர் கம் வில்லன் போலீஸ் ஜான் விஜய்யும் பஞ்சு சுப்புவும் பண்ணும் காமெடி கலாட்டக்கள், அஞ்சுவட்டி அழகேசனாக வரும் இளவரசு, காமெடி போலீஸ் ஜார்ஜ் உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பங்கிற்கு ரசிகர்களே தரையில் விழுந்து, எழுந்து, தவழ்ந்து சிரிக்க வைக்கிறார்கள்.

அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஒரு சில குறைகள் இருந்தாலும் யு.கே.செந்தில்குமாரின் இயற்கை எழில் கொஞ்சும் ஒளிப்பதிவும், விஜய் எபினேசரின் இதமான இசை, சுந்தர்.சியின் காமெடி கலாட்டாவான எழுத்து - இயக்கம் உள்ளிட்டவைகள் கலகலப்பு படத்தை லாஜிக் பார்க்காமல் ரசிக்க வரும் ரசிகர்களுக்கு ‌காமெடி மேஜிக் எனலாம்.

By Anonymous with No comments

Wednesday, June 20, 2012

முரட்டுக்காளை திரைவிமர்சனம்

நடிகர்கள்: சுந்தர் சி, சினேகா, விவேக், சுமன், சிந்து துலானி, செல்முருகன்
இசை:ஸ்ரீகாந்த் தேவா
தயாரிப்பு: சூர்யா புரொடக்ஷன்ஸ்
இயக்கம்: கே செல்வபாரதிமுரட்டுக்காளை திரைவிமர்சனம் (5)எண்பதுகளில் ரஜினி நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற முரட்டுக் காளை படத்தை, ஒரு காட்சி கூட மாற்றாமல் அப்படியே ரீமேக் செய்திருக்கிறார்கள்.
ஆனால் ரஜினி படம் நிகழ்த்திய மாஜிக்கை, சுந்தர் சி காளையனாக வரும் இந்த மாடர்ன் முரட்டுக்காளை நிகழ்த்தியதா? பார்க்கலாம்...
முரட்டுக்காளை கதை ரொம்ப சிம்பிள். பாசமும் வீரமும் நிறைந்த அண்ணன் காளையனுக்கு (சுந்தர் சி), 4 தம்பிகள். ஒருவருக்கொருவர் அத்தனை பாசம். தானுண்டு தன் தம்பிகளுண்டு என போய்க்கொண்டிருக்கும் காளையன் மீது, ஊர் ஜமீன் சுமனின் தங்கை சிந்து துலானிக்கு காதல்.

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (7)சுமனின் தோட்டத்தில் வேலை செய்பவரின் கொழுந்தியாளான சிநேகாவை பார்த்த மாத்திரத்தில் திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் சுமன்.  சிநேகா இதற்கு மறுப்புத் தெரிவிக்க.. சிநேகாவின் அக்கா கொல்லப்படுகிறாள். தன்னைத் தேடி வரும் சுமனின் அடியாட்களிடம் இருந்து தப்பிக்க காளையனின் வீட்டில் அடைக்கலமாகிறார் சிநேகா.

இதற்கிடையில் காளையன் சும்மாவே வைத்திருக்கும் நிலத்தில் கனிமம் இருப்பதை அறிந்து அதனை விலைக்கு கேட்கிறார் சுமன். காளையன் தர மறுக்கிறார். இடையில் தனது தங்கை காளையனை காதலிப்பதை அறிந்து, மச்சான் உறவுக்குள் வந்துவிட்டால் சொத்துக்களை ஆட்டைய போட்டுவிடலாம் என்று நினைத்து சிந்துவுக்கும், காளையனுக்கும் திருமண ஏற்பாடு செய்கிறார் சுமன். நிச்சயத்தார்த்த தினத்தன்று இந்த உண்மை தெரிந்து காளையன் திருமணத்திற்கு மறுத்துவிடுகிறார்.

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (4)சில, பல மோதல்கள், சவால்களுக்குப் பிறகு சிநேகாவை சுந்தர் திருமணம் நடக்கும் தினத்தன்று சுமனின் அடியாளை கொலை செய்த்தாகச் சொல்லி சுந்தரை கைது செய்கிறது போலீஸ். சுமனே கொலை செய்து தன்னை மாட்ட வைத்திருப்பது அறிந்து பாதி வழியிலேயே சுந்தர் போலீஸிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். அவரைத் தேடி மாவட்ட எஸ்.பி.யே காட்டுக்குள் வருகிறார். அங்கு எஸ்.பி.யை இன்ஸ்பெக்டர் சுட்டுவிட்டு சுந்தர் எஸ்.பி.யை போட்டுத் தள்ளிவிட்டதாகச் சொல்லி போலீஸ் படையை காட்டுக்குள் அனுப்புகிறார். காயமடைந்த எஸ்.பி.யை சுந்தர் காப்பாற்றி அழைத்துச் செல்ல.. சுமன் தனது அடியாட்களுடன் வந்து இவர்களைக் கொலை செய்ய முயல.. முடிவு முன்பே பார்த்ததுதான்..!

முதலில் இந்தப் படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்ததே தவறு.. ஏ சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும்..! அத்தனை டபுள், டிரிபுள் மீனிங் டயலாக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார் விவேக். கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால்தான் புரியும் என்றாலும், இதெல்லாம் பெரிசுகளுக்கு ஓகே.. சிறிசுகளுக்கு மனக்குழப்பத்தைத்தான் கொடுக்கும். அதுவும் விவேக் ஏற்றுள்ள திருநங்கை கேரக்டர் அவ்வப்போது அவர்களது கஷ்டங்களை வெளிப்படுத்தினாலும், திருநங்கைகள் என்றாலே இப்படித்தான் பேசுவார்களோ என்ற எண்ணத்தையும் தோற்றுவிக்கிறது. இது எதிர்மறை விபத்தாக போய்விட்டது என்பதை அண்ணன் விவேக் உணர வேண்டும்..!

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (6)சுந்தர் சி. வழக்கம்போலத்தான். அவர் ஒரு நல்ல இயக்குநர்.. நடிப்பு இனிமேல் வேண்டாம் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துவிட்டார்..! சிந்து துலானி பாவம்.. இந்தப் படம் 2009-லேயே வெளிவந்திருந்தால் ஒரு ரவுண்டு வந்திருக்கலாம்.. அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கிறார். இவருக்குச் சற்றும் குறைவில்லாமல் சிநேகாவும் அப்படியே. நல்லவேளை.. இந்தப் படத்திற்கு பிரஸ் மீட் எதையும் ஏற்பாடு செய்யாமல் விட்டுவிட்டார்கள். தப்பித்தார் சிநேகா. வந்திருந்தால் தர்மசங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும்..!

அப்படி, இப்படியெல்லாம் இல்லாமல் ஸ்ட்ரெயிட்டாக போல்டாக சரோஜா கேரக்டரில் சுருளிராஜன் வேடத்தில், வாய்ஸில் கலாய்த்திருக்கிறார் விவேக். தனது கமெண்ட்ஸ்களை கொஞ்சம் குறைத்து, காட்சியின் விரசங்களையும் நீக்கச் செய்திருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும். இவருக்கும் செல் முருகனுக்கும் இடையில் நடக்கும் அந்த 16 வயதினிலே காதலும். அதைத் தொடர்ந்த காட்சிகளும் கலகலப்பு என்றாலும், ஆத்து சீன் ரொம்ப டூ மச்சுதான்..! அதேபோல் வைக்கோல்போரில் சிநேகா ஒழிந்திருக்கும் நிலையில் சுந்தரும், அவர் தம்பிகளும் செய்யும் லூட்டியும் கண்றாவி.. எப்படி சிநேகா இதற்கு ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.. நல்ல இயக்குநர் செல்வபாரதி.. ஒரு கமர்ஷியல் வெற்றிக்காக இந்த அளவிற்கு இறங்கிப் போகணுமா என்ன..?

முரட்டுக்காளை திரைவிமர்சனம் (1)என்னதான் ஹீரோ, ஹீரோயின்களுக்கு மாற்று ஆட்கள் கிடைத்தாலும் இசைக்கு..???????????? ம்.. நோ சான்ஸ்.. ஒன்லி இசைஞானி  இசைஞானிதான்..! பொதுவாக எம் மனசு தங்கம் பாடலை மட்டும் ரீமிக்ஸ் செய்து கொலை செய்திருக்கிறார்கள். மற்றபடி சுந்தரபுருஷா பாடலும் கொஞ்சம் கேட்க வைக்கிறது. பாடல் காட்சியில் சிநேகா காட்டியிருக்கும் கவர்ச்சி பார்க்கவும் வைக்கிறது..! ஜோர்..!

ஏற்கெனவே பல முறை பார்த்து, பார்த்து திளைத்துப் போன படம் ரஜினியின் முரட்டுக்காளை என்பதால் இதனை ஒப்பீட்டு பார்ப்பதை தவிர்க்கவே முடியவில்லை. இதனாலேயே படத்தில் பெரும்பாலான நேரங்களில் ஒன்றியிருக்க முடியவில்லை..!

ரஜினி வேடத்தை ரஜினி மட்டுமே செய்ய முடியும் என்பதை எப்போதுதான் கோடம்பாக்கத்தின் சில்லுண்டுகள் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை..! இப்போது என்னுடைய கவலையெல்லாம், ரஜினி இந்தப் படத்தை பார்க்காமல் இருக்கணும் என்பதுதான்..!

சிநேகாவை பார்க்கணும்னா போயிட்டு வாங்க...!

By Anonymous with No comments

Wednesday, June 13, 2012

தடையறத்தாக்க திரைவிமர்சனம்

உதயம்,சத்யா வரிசைல ரொம்ப நாளுக்குப்பிறகு தமிழுக்கு வந்திருக்கும் ஆக்‌ஷன் படம் தான் இது. அருண்க்கு ஜாக்பாட் அடிச்சிருக்கு.. படத்தோட விமர்சனத்துக்கு போறதுக்கு முன்னால மென்மையான மனம் கொண்ட பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள் இந்தப்படத்தை பார்க்க முடியாத அளவு அதிக பட்ச வன்முறைக்காட்சிகளும், அந்த வன்முறைக்காகவே ஏ சர்ட்டிஃபிகேட் வாங்குன படம் என்ற எச்சரிக்கையோடு......

தடையறத்தாக்க திரைவிமர்சனம் (3)அண்ணன் , தம்பி 2 பேரு வில்லன்க..இவங்க பூர்வீகக்கதையே கொடூரம்,அம்மா நடத்தைல சந்தேகப்பட்டு அப்பாவே அம்மிக்கல்லால கொலை செய்ய மகனே அப்பாவை கொலை செய்யறார். அப்படி சின்ன வயசுலயே ரத்தம் பார்த்தவங்க பெரிய ஆள் ஆனா காந்தி கொள்கையா வளர்ப்பாங்க..? தாதா கம் ரவுடிங்க ஆகறாங்க..

இந்தியாவுலயே பெரிய கோடீஸ்வரரோட பெண்ணை கிட்நாப் பண்ணி பணம் பறிக்க செய்யும் முயற்சில அண்ணன் அந்த பெண்ணை ரேப் பண்ணிடறான்..அப்போ தம்பியோட அட்வைஸ் “அண்ணே, போதும் அவளை கொன்னுடலாம்”.. அண்ணனோட பதில்..”ஒரு டைம் பத்தாது, இவளை ஒரு பங்களாவுல வெச்சிருந்து அப்பப்ப யூஸ் பண்ணிக்கறேன்..

இப்போ ஹீரோ.. அறிமுகம்.. அவர் தன் லவ்வரோட ரொமான்டிக்கா  இருந்தது பத்தாதுன்னு தன் ஏரியா லேடிக்கு ஒரு கந்து வட்டி தகறாருல உதவறாரு.. வில்லன் குரூப்க்கும் அவருக்கும் ஆகலை.. விஷால், விஜய் படங்கள்ல பார்த்த மாதிரி  தனி ஆளா 67 பேரை அடிக்கறாரு..

தடையறத்தாக்க திரைவிமர்சனம் (2)ஆரம்பத்துல அண்ணன்கார வில்லன் ஒரு ஃபிகரை ரேப்புனானே அவன்  யாரோலோ படு பயங்கரமா தாக்கப்பட்டு கோமா ஸ்டேஜ்ல ஹாஸ்பிடல்ல இருக்கான், தம்பிக்காரன் ஹீரோ மேல டவுட் பட்டு சேஸ் பண்றான். பரபரப்பான ஆக்‌ஷன் சீக்குவன்ஸ்ல  உலகத்துக்கே 3 வது ரீலில் தெரிஞ்ச சஸ்பென்சான கொலையை செஞ்சது ரேப் செய்யப்பட்ட ஃபிகர் தான் என்பது க்ளைமாக்ஸ்ல இயக்குநர் நமக்கு சொல்றார்..  அவ்ளவ் தான் கதை.

ஆரண்ய காண்டம்க்குப்பிறகு ஆண்களால் அதிகம் ரசிக்கும் ஒரு விறுவிறுப்பான ஆக்‌ஷன் படம் கொடுத்தத்தற்கும், திறமை இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாத காரணத்தால் சூப்பர் ஹிட்டே கொடுக்காத  அருண்விஜய்க்கு இது நிச்சயம் ஒரு  ஹிட் படம் ஆக்கிய இயக்குநருக்கு வாழ்த்துகள். ( பாண்டவர் பூமி நல்ல படம் தான் ஆனால் வசூல் ரீதியா பெரிய அளவில் ஹிட் இல்லை)

ஹீரோ அருண் விஜய்க்கு ஆகிருதியான  உடம்பு என்பதாலும், அவர் முகமே இறுகிய நிலையில் இருப்பதாலும் ரொம்ப  ஈசியா கேரக்டர்;ல  ஃபிட் ஆகிடறார்.. ரொமான்ஸ், ஆக்‌ஷன், ஃபைட் , சேசிங்க் என படம் பூரா இவருக்கு வேலை அதிகம்.. நிறைவான நடிப்பு.. வெல்டன் அருண்..

தடையறத்தாக்க திரைவிமர்சனம் (4)ஹீரோயின் மம்தா மோஹன் தாஸ். பொட்டு வைக்காத ஃபிகர்ல ஒருவர். இந்தியாவுல பிறந்த பெண் இண்ட்டர்நேஷனல் ஃபிகரா ஆனாலும் நெற்றில ஒரு குங்குமப்பொட்டு வெச்சாத்தான் மங்களகரமா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து என்பதால் அதை விடுங்க.. ,மற்றபடி பாப்பாவுக்கு கொடுக்கப்பட்ட கவர்ச்சி காட்டும் பணியில் இயக்குநர் சொன்னபடி செய்து காஆஆட்டி இருக்கிறார்.. அவர் வரும் காட்சிகளில் எல்லாம் காட்சி ரீதியாகவோ, வசன ரீதியாகவோ கிளு கிளு நிச்சயம்.. ( இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா./)

ரேப் செய்யப்பட்ட பெண்ணாக வரும் ரகுல் ப்ரீத்தியும் பொட்டு வைக்காத ஃபிகர் தான், ஆனா அவருக்கு அதிகம் காட்சிகள் இல்லை என்பதாலும், பெரும்பாலும் அவர் வரும் காட்சிகள் எல்லாம் இருட்டாவே இருப்பதாலும் அவர் பொட்டு வெச்சா என்ன? வைக்காட்டி என்ன என்ற எண்ணமே ஏற்படுது..

படத்தில் காமெடி மருந்துக்குக்கூட இல்லை. சீட்டின் நுனியில் அமர வைக்கும் அதிரடிகள்.  இருப்பதால் அது தேவையும் இல்லை

இயக்குநர் பாராட்டு பெறும் காட்சிகள்

1. ஹீரோ, ஹீரோயின்  2 பேரும் ஹோட்டல்ல சாப்பிட வர்றாங்க.. ஹீரோ ஆர்டர் பண்ணிட்டு ஹீரோயின் கிட்டே பாத்ரூம்  போறேன்னு சொல்லிட்டு பாத்ரூம் வந்து அங்கே இருந்து  ஜம்ப் பண்ணி பின்பக்கம் வந்து முகத்தை மறைச்சு வில்லன் ஆள்ங்களை அடிச்சு துவம்சம் பண்ணி பின் நல்ல பிள்ளை மாதிரி ஹீரோயின் கூட உக்காந்து பேசுவது செம சீன்.. தீனா படத்தில் தல ஆக்‌ஷன் நினைவு படுத்துத்து

2. ஹீரோயினை அல்ட்ரா மாடர்ன் கேர்ளாக காட்டவோ, அல்லது வித்தியாசமான பெண்ணாக காட்டவோ இயக்குநர் அவரை வெட்கத்தை கேட்டால் கவர்ச்சியைத்தருவேன் என்று சொல்வது மாதிரி கேரக்டராக பயன்படுத்திட்டார்.. ஹீரோ படம் பூரா கம்முன்னு இருந்தாலும் ஹீரோயின் அப்பப்ப ஹீரோவை கில்மாக்கு  தூண்டி விட்டுட்டே இருப்பது புதுசு.. சொகுசு ரவுசு..

3. ஹீரோயினுக்கு ஹீரோ அழகிய கலர் கலரான பட்டர்ஃபிளை டிசைடு பாண்ட்டீஸ் கிஃப்ட் பார்சல் வாங்கித்தருவதும், ஊடலான பொழுதுகளில் ஃபோன் பண்ணி இன்னைக்கு என்ன கலர் பட்டர்ஃபிளை எனக்கேட்டு கிளுகிளுக்க வைப்பதும் செம. ( காதலிக்கு ரோஸ், வாட்ச், கர்ச்சீஃப் வாங்கித்தர்ற காலம் மலை ஏறிப்போச்சுங்கோவ்)தடையறத்தாக்க திரைவிமர்சனம் (1)4. காதலிக்கு முன் ஃபிரண்ட்சை விட்டுத்தராத ஹீரோவின் குணமும், அதைக்கண்டும் காணாமல் இருப்பது போன்ற ஹீரோயினின் அனுசரிப்புத்தனமும், அண்டர்ஸ்டேண்டிங்கும் கவிதை.. அது சம்பந்தமான காட்சிகளில் இயக்குநரின் தொடுகை.. ( அதான்பா டைரக்‌ஷன் டச்)

5. பல காட்சிகளில் விறுவிறுப்பான பதை பதைப்பு .. டெம்போ கூட்டுவதில் இயக்குநர் கை தேர்ந்தவரா இருக்கார்..

6. பூந்த,மல்லி புஷ்ப வல்லி டப்பாங்குத்து பாட்டு செம கலக்கல் டேன்ஸ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1. வில்லன்க தண்ணி அடிக்கற சீன்ல லாங்க் ஷாட் யூஸ் பண்ணக்கூடாதா? க்ளோசப்ல சரக்கை காட்றதும், மிக்சிங்கை விலாவாரியா காட்றதும் உவ்வே..

2. படத்துல எதுக்கு அதிக பட்ச இருட்டும், வலிய திணிக்கப்பட்ட மணிரத்னம் டைப் உள்வாங்கும் வசனங்களும்,.. சராசரி ரசிகனுக்கு புரியாது ( அந்த சராசரி ரசிகன் நான் தான் )

3. ஹீரோயின் வீட்ல யாரும் இல்லை, அம்மா மார்க்கெட் போயிருக்காங்க.. ஹீரோயின் ஹால், வாசல் கதவை பெப்பெரப்பேன்னு திறந்து போட்டுட்டு பாத்ரூம்ல குளிக்குது./. எந்த ஊர்ல அப்படி குளிக்கறாங்க? ( ஒரு ஜெனரல் நாலெட்ஜ்க்காக கேட்கறோம் ஏட்டய்யா )ஹீரோ நேரா உள்ளே வந்துடறாரு
( காட்சி கிளுகிளுப்பா இருந்தாலும் தமிழன் லாஜிக் பார்ப்பான் ஹி ஹி )

4. ஹீரோ 2 சீன்ல ஹோட்டல்ல ஒரு இங்க்லீஷ் ஃபார்ம் ஃபில்லப் பண்றாரு.. அவர் சாஃப்ட் வேர் கம்பெனி  டீலிங்க் எல்லாம் பண்றாரு. அப்படிப்பட்டவர்க்கு சாதாரண இங்க்லீஷ் வார்த்தையான சாரி (SORRY) என்பதற்குக்கூட ஸ்பெல்லிங்க் தெரியாதா? ஒரு சீன்ல தன் ஃபிரண்ட்ஸ் 5 பேர்ட்ட சாரிக்கு ஸ்பெல்லிங்க் என்ன?னு கேனத்தனமா கேட்கறார். அந்த லூசுங்களும் தெரியாதுன்னு சொல்லுது.. ஹய்யோ அய்யோ ( காமெடி சீன்னு நினச்சுட்டார் போல )

5. இடது கைப்பழக்கம் உள்ள ஹீரோ படத்துல பல காட்சிகளில் அதை மெயிண்டெயின் பண்றார்.. அவர் வாட்ச் கட்டறது கூட வலது கைல தான். ஆனா ஒரு சீன்ல அதாவது படம் போட்ட 57 வது நிமிஷத்துல அந்த போலீஸ் ஸ்டேஷன் சீன்ல , அப்புறம் ஒரு ஃபைட் சீன்ல  எல்லாரையும் போல இடது கைல தான் கட்டி இருக்கார்

6. வில்லன்க ஆள்ங்க ஒரு பாருக்கு வர்றாங்க, அங்கே ஒருத்தனை அடையாளம் காட்டனும்.. அதோ அந்த தாடி வெச்சவன் தான்னு சொன்னா வேலை முடிஞ்சது.. அவன் ஏன் கை நீட்டி காட்டிக்கொடுக்கனும்? அவன் பார்த்தா எஸ் ஆக மாட்டானா?

7. ஒரு கிரிட்டிகலான சிச்சுவேஷன், ஹீரோ ஆட்டோல ஹீரோயின் கூட மிட் நைட்ல போறார்.. அவனுங்க வில்லன்க இருக்கற இடத்துல ஆட்டோவை ஓட்டி ஒரு சந்துல ஆட்டோவை நிறுத்தி ஓடுறாங்க.. இப்போ 24 பேர் வர்றாங்க .. ஆல்ரெடி ஹீரோ ஃபைட் எல்லாம் போட்டு வீரன்னு நிரூபிச்சாச்சு, இப்போ கூட காதலி. இந்த டைம்ல அவர் எவ்ளவ் முன் ஜாக்கிரதையா , வேகமா ஜாக்கிசான் மாதிரி சுறுசுறுப்பா ஃபைட் போடனும்? அதை விட்டுட்டு வில்லன் அடியாளுங்க கிட்டே வந்து 12 தடவை அடிச்சு பின் எம் ஜி ஆர் மாதிரி உதட்டுல ரத்தம் பார்த்த பின் ஃபைட் போடுவது ஓவர்

8. ஒரு சீன்ல ஹீரோ, ஹீரோயின் கார்னர் பண்ணப்படறாங்க, வில்லன் ஆளுங்க 64 பேர் இருக்காங்க , எல்லாரும் அரிவாளோட , தனி ஆளா ஹீரோ எந்த பாதிப்பும் இல்லாம ஃபைட் போட்டு ஜெயிக்கிறார், ஓக்கே ஹீரோயிஷம் தான். ஆனா வில்லன் ஆளூங்க அவ்ளவ் தத்தியா? ஹீரோயின் தேமேன்னு நிக்குது. 64 பேர்ல 4 பேரு ஹீரோயினை பணயப்பொண்ணா பிடிச்சா ஹீரோவை அடக்கலாமே? ரமணா டயலாக் மாதிரி இங்கே அடிச்சா அங்கே வலிக்கும் பாலிஸி.. அதை ஏன் யாரும் ட்ரை பண்ணலை?

9. கொலை செய்ய உபயோகப்படுத்துன கிரிக்கெட் பேட்டை  ஓடும் காரில் பார்க்கும் அந்த பெண் சாதாரணமா ஜன்னல் வழியா வெளில வீசினா மேட்டர் ஓவர்.. அவர் ஏன் மெனக்கெட்டு கார் பேனட்டுக்குள்ள வைக்கனும்? ஹீரோவை மாட்டி விடனும்கற எண்ணம் எல்லாம் இல்லை. ஏன் ரிஸ்க் எடுக்கறார்?

10. க்ளைமாக்ஸ்ல எல்லாம் சுபம்கற வேளைல அந்த பொண்ணு ஏன் தற்கொலை பண்ணிக்குது?  வில்லனை கொலை செய்யும் துணிவு உள்ள பெண், கோடீஸ்வரி  ஏன் அந்த முடிவை எடுக்கனும்? கதைக்கு அந்த முடிவு எந்த அளவில் யூஸ்?

By Anonymous with No comments

Tuesday, April 10, 2012

அனுஷ்கா வைச்ச ஆப்பு

அனுஷ்கா (1)நேரில் சிக்கினால் அநேகமாக அனுஷ்காவை கைமா செய்து விடுவார், த்ரிஷா. காரணம், ரொம்ப சிம்பிள். தெலுங்குப் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அனுஷ்கா, தமிழ்ப் படங்களில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். விக்ரமுடன், ‘தாண்டவம்’, கார்த்தியுடன், ‘அலெக்ஸ் பாண்டியன்’, செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘இரண்டாம் உலகம்’ என இந்த ஆண்டு முழுக்க அவர் பிசி. இதை கூட த்ரிஷா பொறுத்துக் கொள்வார். அனுஷ்கா (2)ஆனால், தான் நடித்து வந்த விளம்பரப் படங்களை அடுத்தடுத்து அனுஷ்கா கைப்பற்றியதைதான் த்ரிஷாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தால், இன்று தமிழகத்தில் த்ரிஷா, ஜீரோ.

கரீனா கபூரின் படங்களை பார்க்க...

By Anonymous with No comments

Thursday, April 5, 2012

ஷங்கரின் அடுத்த படத்தில் தீபிகா படுகோன்?

ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் ‘ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி ‘கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது.


‘நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.

By Anonymous with No comments

Wednesday, April 4, 2012

மூன்று பட விமா்சனம்

நடிப்பு: தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, ரோகிணி, சிவகார்த்திகேயன். இயக்கம்: ஐஸ்வர்யா
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ் இசை: அனிருத் தயாரிப்பு: ஆர்.கே புரொடக்ஷன்ஸ், வுண்டர் பார் பிலிம்ஸ்

பிளஸ் டூ படிக்கும் தனுஷூக்கும் ஸ்ருதிக்கும் காதல். ஸ்ருதியின் குடும்பம் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்கிறது. தனுஷைப் பிரிய முடியாத ஸ்ருதி, பெற்றோரிடம் விஷயத்தை சொல்கிறார். வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதீத கோபம், அதீத வெறுப்பு என ஒருவிதமான மனநோயில் (Bipolar disorder) சிக்கிய தனுஷ், தன்னால் ஸ்ருதிக்கு அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என பயந்து தனது சொத்துக்களை அவர் பெயரில் எழுதி வைத்துவிட்டு திடீரென இறந்துபோகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

ஷார்ப்பான கதையை ஷார்பாக இயக்கியுள்ள ஐஸ்வர்யா, நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். பிளஸ் டூ மாணவ, மாணவியாக தனுஷ், ஸ்ருதி ஜோடி அவ்வளவு பொருத்தம். ஒரு மழைநாளில் ஸ்ருதியின் சைக்கிளில் கழன்றுபோன செயினை மாட்டிக் கொடுத்ததுமே தனுஷ் மனதில் அப்பிக்கொள்கிறது காதல் தீ. ஸ்ருதியும் மனதைப் பறிகொடுக்க, பிறகு தொடர்கிறது இளமையும், கிளுகிளுப்புமான காதல் விளையாட்டு. ஸ்ருதியைக் கவர்வதற்காகவே தனுஷ், டியூஷன் சென்டரில் சேர்வதும், அங்கு சிவகார்த்திகேயனுடன் அடிக்கும் லூட்டியும் காமெடி மேளா.
தனக்கு வந்த மனநோயின் பாதிப்பை அறிந்து துடிக்கும் போதும், தன் நண்பன் சுந்தரை அடித்துவிட்டு புலம்பும்போதும், தன்னால் ஸ்ருதிக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று நடுங்கும்போதும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போதும் தனுஷ் நடிப்பில் தகதக மினுப்பு. ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மெருகேறி வருவதற்கு இதுவும் சாட்சி.

எதற்கெடுத்தாலும் தனுஷ் மடியில் அமர்ந்துகொள்ளும் ஸ்ருதி, இளசுகளின் லேட்டஸ்ட் ஹாட் ஆகியிருக்கிறார்.  காதலுக்காக பெற்றோரை எதிர்க்கும் ஸ்ருதி, ‘சரி நீ போ. இனிமே உன்னை பார்க்க வர மாட்டோம்‘ என்று அவர்கள் சொன்ன பிறகு தவிக்கிறாரே, முதிர்ச்சியான நடிப்பு. தனுஷின் மரணத்துக்குப் பிறகு நிலைகுலையும் அவர், உருக வைக்கிறார். கதறியழும் காட்சிகளிலும், டப்பிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தனுஷின் பெற்றோர்களாக வரும் பிரபு, பானுப்பிரியா ஜோடி மனதில் நிற்கிறார்கள். ஸ்ருதியின் அம்மா ரோகிணி, அவரது கணவர், கை சைகைகளின் மூலம் அனைவருடைய கவனத்தையும் கவரும் தங்கை கேரக்டர், டைமிங் காமெடிக்கு உத்தரவாதம் தரும் சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும், தங்கள் கேரக்டருடன் ஒன்றியிருக்கிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு, பளிச். தனுஷ், ஸ்ருதியின் பள்ளிப் பருவம், பிறகு திருமணம், மனநோய் காலம் என, மூணு கட்ட வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். அனிருத், பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார்.

தனுஷுக்கு ஏற்பட்டிருந்த மனநோய், அவரது பெற்றோர்களுக்கும், தனுஷுடன் வாழ்க்கை நடத்தும் ஸ்ருதிக்கும் தெரியாமல் போனது எப்படி? மனநோய்க்கு தற்கொலைதான் தீர்வா? சட்டென முடியும் கிளைமாக்ஸ் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதது ஏன்? என்பது உட்பட ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. சூப்பர் ஹிட் பாடலான, ‘ஒய் திஸ் கொலவெறி’யை இவ்வளவு சாதாரணமாகவா படமாக்கியிருப்பார்கள்?

மூன்று பட உயா் ரக படங்களை பார்க்க.............

By Anonymous with No comments

Sunday, April 1, 2012

ஏப்ரல் 13 - விஜயின் துப்பாக்கி?

விஜய் ரசிகர்கள் இப்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது துப்பாக்கி படத்தின் FIRST LOOK எப்போது என்பது தான்!ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.

விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது.

சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன்.

பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஏப்ரல் 13ம் தேதி படத்தின் FIRST LOOK வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது.

By Anonymous with No comments

காதலில் சொதப்புவது எப்படி?

அடிக்கடி முட்டிக்கொள்ளும் லட்சோப லட்ச காதலர்களின் சொதப்பல்களை எட்டு நிமிட குறும்படமாக எடுத்த இயக்குனர், அதை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் இழுத்து அடைத்திருக்கிறார் கலகலப்பாக. அமலா பாலும் சித்தார்த்தும் லவ்வர்ஸ். ‘தங்கள் லவ் எப்படி ஸ்டார்ட் ஆச்சு?’ என்று கொடுக்கிற பேட்டியில் ஆரம்பிக்கிறது படம்.

'கேன்டீன்ல சந்திச்சோம். அப்ப இவங்க ரொம்ப சப்பியா இருப்பாங்க?'
'நான் அப்ப சப்பியா இல்ல'
'இல்ல இருந்தே. அதான் அப்ப உனக்கு அழகே'
'இப்ப நான் அழகா இல்லையா?'
'இல்லை, அது...'

தொடர்கிற சண்டையில் சித்தார்த்தின் நெற்றியில் விழுந்து உடைகிறது கண்ணாடி கிளாஸ். இப்படி போகிற கதையில் ஏராளமான ஈகோவையும் நண்பர்களின் டமார் காதலையும் மிக்ஸ் பண்ணி, திகட்ட திகட்ட இளமை கதை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலாஜி மோகன். இறுதியில், 'சொதப்பாத காதல், காதலே இல்லைப்பா' என்கிற மெசேஜும். துறுதுறு மாணவன் கேரக்டருக்கு அம்சமாய் பொருந்துகிறார் சித்தார்த். ஆடியன்ஸிடம் சொல்லிக்கொண்டு கதையை நகர்ந்தும் அவர், அமலாவிடம் வழிவதாகட்டும், போனை வீட்டுக்குள் வைத்துவிட்டு அமலாவின் போன் காலுக்காகத் தவிப்பதாகட்டும் கிளைமாக்ஸில் உருகுவதாகட்டும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

மாணவி கேரக்டரில் அமலா. ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென்று சீரியஸாகி, சித்தார்த்துடன் சண்டைபோடும் இடங்கள் க்யூட். ஈகோவில் இருவரும் பேசாமல் இருக்க, தோழி சொன்னாள் என்று போன் பண்ணி, 'ஸாரி, அன்னைக்கு உன்னை சரியா புரிஞ்சுக்காம...' என்று சித்தார்த் சொல்ல, 'பரவாயில்ல. இப்பவாவது உன் தப்பை உணர்ந்தியே' என்று அமலா பேச, 'தப்பா...நான் என்ன தப்பு பண்ணினேன் உணர்றதுக்கு...' என்று சித்து சிடுசிடுக்க, தொடரும் சண்டையில் தியேட்டரில் அள்ளுகிறது அப்ளாஸ். அப்பாவும் அம்மாவும் டைவர்ஸுக்கு அப்ளை பண்ண, 'இங்க நான் ஒருத்தி இருக்கிறதையே மறந்துடுவீங்களா?' என்று கொதிக்கும்போது கலங்கவும் வைக்கிறார்.

அமலாவின் அப்பா சுரேஷ். மகளிடமே, அம்மா சுரேகா வாணிக்கான காதல் கடிதத்தை கொடுப்பது, பிறகு மனைவியுடன் டேட்டிங் செல்வது, கோயில் பின்னணியில் வரும் கமல்ஹாசனின் 'வளையோசை கல கலகலவென' பாடல்காட்சி என இதையும் காதல் எபிசோடாக்கியிருப்பது சுவாரஸ்யம். ஆனாலும் திணிக்கப்பட்ட காட்சியாகவே இருக்கிறது. சித்தார்த்தின் அப்பாவாக ரவி ராகவேந்தர். 'டேய், பேஸ்புக்ல யார்ரா, உங்கூட ஒரு பொண்ணு போட்டோ இருக்கு' என்று கேட்க, 'பிரண்ட்பா' என சொல்லும் சித்தார்த்திடம், 'பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கேன். அக்சப்ட் பண்ணு' என்பதும், துணிக்கடையில் விவகாரமான இடத்தில் அமலாவைப் பார்த்து பேச, அவரை சித்தார்த்தின் அம்மா சிவரஞ்சனி தள்ளிக்கொண்டு வருவதும் கலவர காமெடி. நண்பர்களாக வரும் விக்னேஷின் 'அண்ணா' காதலும் அடிக்கடி அட்வைஸ் பண்ணும் அர்ஜுனனின் அடிவாங்கும் லவ்வும் காமெடி ஏரியாவை அதிகப்படுத்துகின்றன.

'பாசத்தையும் சரி வெறுப்பையும் சரி, ஒரு பொண்ணுகாட்டுற மாதிரி வேற யாரும் காட்ட முடியாது', 'பொண்ணுங்க பெயின்டிங் மாதிரி. ஒரு ரூம்ல எங்கயிருந்து பார்த்தாலும் அந்த பெயின்டிங் நம்மை பார்க்கிற மாதிரிதான் இருக்கும். அதுமாதிரிதான் பொண்ணுங்களும். ஏன்னா, நமக்கு அதுதான் வேணும்' என்கிற ரீதியில் படம் முழுக்க வரும் வசனங்கள் நச் ப்ளஸ் டச். தமனின் இசையில், 'பார்வதி...' பாடல் ஒகே. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் படம் முழுவதும் லவ் துள்ளல்.

கேமராவை அடிக்கடி பார்த்து, 'இந்த பொண்ணுங்க இருக்காங்களே...' என்று சித்தார்த் அடிக்கும் லெக்சர் சலிப்பு. படம் முழுவதும் எல்லோரும் பேசிக்கொண்டே இருப்பதும் எந்தக் காட்சியும் மனதில் நிற்காததும் சொதப்பலாக இருந்தாலும் இந்த ரசனையான சொதப்பலை ரசிக்கலாம்.

By Anonymous with No comments

Share me on facebook