ராமநகரம்: நித்தியானந்தாவிற்கு ரத்த பரிசோதனை மற்றும் குரல் பரிசோதனை செய்ய கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரஞ்சிதா சி.டி வழக்கில் கர்நாடகவின் ராமநகரம் நீதிமன்றம் பரி சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.
பரிசோதனைக்கு ஆஜராகும்படி 6 முறை அழைத்தும் நித்தியானந்தா வரவில்லை. இதனை அடுத்து சிஐடி போலீஸ் நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக நித்தியானந்தா தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்தது தொடர்பான சிடியை நித்தியின் உதவியாளர் லெனின் கருப்பன் வெளியிட்டதைத் தொடர்ந்து, நித்தி மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

0 comments:
Share your opinion