Monday, April 9, 2012

ஈரான் அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும்

அமெரிக்காவாஷிங்டன் : ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை நிரூபித்தால், அதன் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அணுஆயுதங்கள் தயாரிப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. இதை ஏற்க மறுத்துவரும் ஈரான் மீது பொருளாதார தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, ஈரான் மீது போர்தொடுக்கப் போவதாகவும் இஸ்ரேல் எச்சரித்தது.

அதேநேரம், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் பயங்கர பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஈரானும் மிரட்டல் விடுத்தது. இந்நிலையில், ஈரானில் செயல்படுத்தப்படும் அணுசக்தி திட்டங்களை பார்வையிட ஐ.நா. குழுவை அனுமதிக்க வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் துருக்கி உள்பட சில நாடுகள் சமரச முயற்சியிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ''அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்பதை ஈரான் நிரூபித்தால், அதன் மக்கள் நலனுக்கான அணுசக்தி திட்டங்களை ஏற்றுக் கொள்வோம். மேலும் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும்'' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இந்த தகவலை துருக்கி பிரதமர் தயிப் எர்டோகனிடம் கூறி, அதை ஈரான் சுப்ரீம் தலைவர் அலி கமேனியிடம் தெரிவிக்கும்படி ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, கமேனியிடம் தயிப் கடந்த வாரம் தகவலை தெரிவித்து விட்டார் என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

By Anonymous with No comments

Saturday, April 7, 2012

கங்குலி தான் பெஸ்ட் கேப்டன்

மும்பை: மும்பையில் நேற்று நடந்த ஆட்டத்தில் புனே - மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த புனே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் எடுத்தது. உத்தப்பா 36, ஸ்மித் 39 ரன் எடுத்தனர். அதன் பின் விளையாடிய மும்பை அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 101 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் புனே அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராங்கிளின், கார்த்திக் தலா 32, ஹர்பஜன் 16 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். புனே அணியில் அசோக் டிண்டா 4, முரளி கார்த்திக் 2, சாமுவேல், பர்னல், ராகுல் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
ஹர்பஜன்இந்த போட்டியில் தோல்வியடைந்தது குறித்து மும்பை கேப்டன் ஹர்பஜன் சிங் கூறும்போது, இந்தியாவுக்கு கிடைத்த சிறப்புமிக்க கேப்டன் கங்குலி. அதை இன்றைய ஆட்டத்திலும் அவர் நிரூபித்தார். அதனால் தான் அவர் எப்போதுமே மிகச்சிறந்த கேப்டனாக இருக்கிறார். அவரது அணி பல ஆட்டங்களில் வெற்றி பெறாவிட்டாலும் திறமைசாலிகளை அவர் கண்டுகொள்வார். அப்படிப்பட்ட வீரர்களுக்கு அவர் மதிப்பு அளிப்பார். அந்த வீரர்களை அவர் பயன்படுத்தும் விதம் பிரமிக்கத்தக்கதாக இருக்கும். 129 ரன் என்பது எளிதில் எடுக்கக்கூடிய ஒன்று. ஆனால் நாங்கள் சரியாக தொடங்க வில்லை. 2 ஓவர்களிலேயே தொடக்க வீரர்களை இழந்து விட்டதால் வெற்றி எங்கள் வசம் இல்லாமல் போய்விட் டது. இவ் வாறு அவர் கூறினார்.

By Anonymous with No comments

Friday, April 6, 2012

சென்னையில் வேகமாக பரவுது பன்றிக் காய்ச்சல்

சென்னை: சென்னையில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஒரே வாரத்தில் 2 சிறுமிகள் உள்பட 10 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதால் மாவட்ட நிர்வாகங்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் உள்பட பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
பன்றிக் காய்ச்சலுக்கு திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் பலியானார். கோவையில் 4 வயது குழந்தை, சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த பள்ளி சிறுமிகள் 2 பேர் உள்பட 13 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 2 சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் படித்த பள்ளிகளிலும் சுகாதார துறையினர் பரிசோதனை நடத்தினர். காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாமி புளூ மாத்திரைகளை சுகாதாரத்துறையினர் கொடுத்து வருகின்றனர்.
சென்னையில் வேகமாக பரவுது பன்றிக் காய்ச்சல்தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் பன்றிக் காய்ச்சலால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 பேரை இந்நோய் தாக்கியுள்ளது. அவர்களில் 10 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நோயை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்பாக்கம் மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பரிசோதனைக்காக அங்கு நவீன கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில்தான் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு அம்பத்தூர், வேளச்சேரி, தரமணி, சைதாப்பேட்டை பகுதியில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று தி.நகர், தரமணி பகுதியில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. ஏற்கனவே கொருக்குப்பேட்டை பள்ளி சிறுமிகள் 2 பேர் உள்பட 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் டாமி புளூ மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகிறது. 25 ஆயிரம் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசி மற்றும் டாமி புளூ மாத்திரைகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பன்றிக்காய்ச்சலுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும். பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போடப்படும்.
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரிடமிருந்துதான் தமிழக மக்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் பரவுகிறது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யும் வகையிலும் ரயில் மற்றும் விமான நிலையங்களில் நோய் தடுப்பு மையம், மருத்துவ குழுக்களை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சென்னை, கோவை, திருப்பூரை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. அதனால் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர் இருமல், சளி உள்ளிட்ட நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுவரை 26 பேர் பலி
இந்தியாவில் 2009-ம் ஆண்டுதான் முதன்முதலாக பன்றிக் காய்ச்சல் பரவத் தொடங்கியது. அப்போது பலர் இந்த நோய்க்கு பலியாயினர். அடுத்த 2 ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் குறைந்தது. கடந்த ஆண்டு ஒருவர் மட்டும் இந்நோய்க்கு பலியானார். இந்த ஆண்டு தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, ஆந்திரா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழகத்தில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நேற்று பன்றி காய்ச்சல் பாதிப்பால் 48 வயது பெண் ஒருவர் இறந்தார். இவருடன் சேர்த்து மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். 350 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

By Anonymous with No comments

Thursday, April 5, 2012

ஷங்கரின் அடுத்த படத்தில் தீபிகா படுகோன்?

ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் ‘ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி ‘கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது.


‘நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.

By Anonymous with No comments

மின் கட்டண உயர்வை ரத்து செய்

விழுப்புரம்: மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட பாமக சார்பில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ கலியவரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பழனிவேல் வரவேற்றார்.
மாநில இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்த இரண்டு மாதத்தில் மின்வெட்டு இருக்காது என தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தவுடன் மின்வெட்டு சரியாக 6 மாதம் ஆகும் என்றும், பின்னர் ஒரு ஆண்டு என்றும், தற்போது மின்வெட்டு பிரச்னை தீர இரண்டு ஆண்டுகள் தேவை என்றும் கூறியுள்ளார். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் மதிப்பு கூட்டு வரி ரூ.4 ஆயிரம் கோடி உயர்த்தினார். உள்ளாட்சி தேர்தல் முடிந்து ரூ.3 ஆயிரம் கோடி பஸ், பால் கட்டணத்தை உயர்தினார்.
தொடர்ந்து பத்திரப் பதிவையும் உயர்த்தினார். தற்போது நடந்த நிதி நிலை அறிக்கையில் ரூ.6,500 கோடி வரி போட்டுள்ளார். தற்போது ரூ.7872 கோடி மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார்.

ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டு காலத்தில் மொத்தம் ரூ.40 அளவில் வரி, கட்டணத்தை உயர்த்தி அரசின் வருமானத்தை அதிகரித்துள்ளார். இவ்வளவு உயர்த்தியும் மின்கட்டண உயர்வு தேவையா? தமிழக சரித்தரத்தில் இப்படியொரு கட்டண உயர்வு நடந்ததில்லை. ஜெயலலிதா 2013ல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறி உள்ளார். ஆனால் ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கு கூட திட்டத்தை அறிவிக்கவில்லை.

தமிழகத்துக்கு மொத்தம் 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. 4500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளது. இதற்கு மத்திய, மாநில ஆட்சிகள் தான் காரணம். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் புதிய திட்டங்களை கொடுப்போம். தமிழக அரசு மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இவ்வாறு பேசினார்.

By Anonymous with No comments

கும்ப ராசி 2012ம் ஆண்டு பலன்

கும்பம்
அவிட்டம்(3&4); சதயம்;பூரட்டாதி(1,2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
கும்ப ராசி
இந்த வருடம் சனியின் சஞ்சாரம் உங்களுக்கு சாத்கமாக இருக்கிறது. அஷ்டமசனியின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட்டது ஒன்றே போதும். சொல்லவொண்ணா வேதனைகளை அனுபவித்துவந்த நீங்கள், இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். ஆனால் குருவின் சஞ்சாரமும் ராகு கேதுக்களின் சஞ்சாரங்களும் சரியாக இல்லை. எனவே இனி பலன்களைப் பார்க்கலாம்.
தொழில் சம்பந்தமான மாற்றம் ஏற்படும். சிலர் பழைய தொழிலைக் கைவிட்டு புதிய தொழிலை மேற்கொள்வார்கள். சிலர் தற்சமயம் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய புதிய யுக்திகளையும் புதிய டெக்னிக்குகளையும் பயன்படுத்துவார்கள். தொழில் சம்பந்தமாக இருக்கும் இடம்விட்டு வேறு இடத்துக்கு செல்வார்கள். என்னதான் நீங்கள் முயபன்றாலும்,தொழிலில் முன்னேற்றம் இருக்காது. தொழில் காரணமாக சிலர் பயணங்களை மேற்கொள்வார்கள். அதன் காரணமாக அதிகமான அலைச்சலால், உங்கள் உடல்நிலை மோசமடையும். சுகக்குறைவு, உடல் அசதி, காலம் தாழ்த்தி உண்ணுதல், உறங்குதல் போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். சிலர் கடன் வாங்கித் தொழிலை மேம்படுத்த முயல்வார்கள். இருப்பினும் வருமானம் குறையும். பொருளாதாரச் சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் அடுத்தவர் தலையீடு இருந்துகொண்டிருக்கும். இது உங்களுக்கு எரிச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தும். எவ்வளவுதான் புத்திக்கூர்மையுடனும் திறமையுடனும் செயல்பட்டாலும்,முன்னேற்றம் என்பது உங்கள் உழைப்புக்கு ஏற்ற அளவு இல்லாமல் போகும். சகோதரர்களுடன் கருத்துவேற்பாடுகளும் விரோதங்களும் உண்டாகும். சண்டையும், வம்பு வழக்குகளும் ஏற்படும். நிலம் வீடு இவற்றால் விரயச் செலவுகள் ஏற்படும். ரசாயனம், உரம்,ரியல் எஸ்டேட் மற்றும் மருந்துப் பொருள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இது சோதனையான காலம். இந்த ராசிக்காரர்கள் தற்சமயம் போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டால் நிச்சயம் மாட்டிக்கொள்வார்கள்.  உங்கள் மனோபலம் குறையும். எந்தப் பிரச்சினையையும் எதிர்கொள்வதில் மனதிற்குள் தயக்கம் ஏற்படும். சிலரது குடும்பத்தில் வயதான ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போகும். துக்க நிகழ்ச்சிகள் ஏற்படவும் வாய்ப்புண்டு. தேவையற்ற வம்பு வழக்குகள், சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடிவரும். சிலர் கோர்ட், கேஸ், வழக்குகள் என்று அலைந்து திரிந்து சண்டை சச்சரவுகளுக்கு ஆளாவார்கள். சிலருக்கு தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் கருத்தொற்றுமை ஏற்படாமல் விவகாரங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். வேலைப்பளு அதிகமாகும். மேலதிகாரிகள் கடிந்துகொள்வார்கள். குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். தற்போது வழக்குகளிலிருந்து தீர்ப்பு வருமானால், அது உங்களுக்கு சாதகமாக இருக்காது. விரயச் செலவுகள் அதிகமாகும். மருத்துவச் செலவுகள் அதிகமாகும். அலைச்சல் அதிகரிக்கும். தூக்கம் கெடும். அதனால் ஆதாயம் கிடைக்காது. புத்திர-புத்திரிகளால் மனக்கவலை அதிகரிக்கும். அவர்களின் போக்கு உங்களுக்கு வேதனை தரும். புதல்வர்களின் காரணமாக சிலர் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு சிரமப்படுவார்கள். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை உண்டாகும். தாய் மற்றும் தாய் மாமனால் தொல்லை ஏற்படும். குலதெய்வ வழிபாடு தவறிப்போகும்.தெய்வ காரியங்களில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். நீங்கள் சும்மா இருந்தாலும் வேண்டாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். உங்கள் முகத்தில் பொலிவு குறையும். எந்தக் காரியத்தையும் முடிக்க முடியாமல் தள்ளிப்போகும்.
வேலைக்காரர்கள், தொழிலாளர்களால், தொல்லை துயரங்கள் எற்படும். மனதில் சோம்பலும் குழப்பமும் தேவையில்லாத கவலையும் பயமும் இருந்துகொண்டே இருக்கும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் குறையும். வருமானக் குறைவினால், குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் போகும். எனவே குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும். வேலை வாய்ப்புகளிலும் தடை ஏற்படும். கல்வியில் கவனம் குறையும். பெரியோர்கள், ஞானிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். சிலருக்கு பணம் ,பொருள் தொலைந்துபோகும். தாயாரின் உடல்நலம் கெடும். தாய்வழி உறவுகளால்பிரச்சினை ஏற்படும். பெரியோர், ஞானிகளின் கோபத்துக்கு ஆளாவதுடன் அவர்களுடைய விரோதத்துக்கும் காரணமாவ்ர்கள். குடும்பத்தாரிடம் உங்கள் கோபதாபங்களைக் காட்டுவதால், குடும்பத்தார் உங்களிடம் கோபப்பட்டு எரிச்சலைடைவார்கள். உங்களிடம் வேலை பார்த்து உங்களிடம் தொழில் கற்றுக்கொண்ட ஒரு தொழிலாளியே இப்போது உங்களுக்குப்  போட்டியாக தொழில் தொடங்கி உங்களுக்கு பிரச்சினையாவார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு ஃபைலைத் தொலைத்துவிட்டு திண்டாடுவீர்கள். அரசுக்கு சொந்தமான செக்,பணம் இவற்றை தொலைத்துவிட்டு அல்லாட வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். இதனால், மேலதிகாரிகளிடம் தண்டனை பெறவேண்டிய நிலை ஏற்படும். வெளியூர் செல்லும்போது வீட்டில் திருட்டுப்போக வாய்ப்புண்டு. உங்கள் உடல்நலம் கெட்டு மருத்துவச் செலவு வைக்கும். சிலர் குடும்பத்தாருடனும் உறவினருடனும் கோபதாபம் ஏற்பட்டு வீட்டை விட்டுச் செல்லும் நிலை வரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடனும் பிர்ச்சினை ஏற்பட்டு நிம்மதி கெடும். சிலருக்கு வண்டி வாகனங்களில் ரிப்பேர் ஏற்பட்டு விரயச் செலவு ஏற்படும். கட்டடத் தொழிலில் ஈடுபட்டவர்களும், வீடு கட்டிக்கொண்டிருப்பவர்களுக்கும் அந்த வேலை பாதியில் நின்று விடும். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நஷ்டம் ஏற்படும். இதயம், நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்படும். சிலர் சொத்து சுகங்களை இழந்துவிட்டு வேறு ஊருக்கு செல்வார்கள். சிலர் தீய பழக்கங்களைக் கற்றுக்கொண்டு அதற்கு அடிமையாகிவிடுவார்கள்.
குருவின் சஞ்சாரத்தால் சில நன்மைகளும் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைத்து அவர்களால் உதவி கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை நலம் ஆரோக்கியம் பெறுவார். தந்தை மேன்மை அடைவார். சனியுடன் சேர்ந்து குரு சில நன்மைகளைச் செய்தாலும், பெரும்பாலும் மேலே சொன்ன சில கஷ்டங்களும் வந்து சேரும். இனி, சனி சஞ்சாரத்தைப் பார்க்கலாம்.
சனியின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்றாக இருக்கும் என்று ஏற்கெனவே கூறியிருந்தோம். இந்தவருடம் சாதகமான சனிப் பெயர்ச்சியினால், வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். மாலை கிடைக்காத்வர்களுக்கு மாலை கிடைக்கும். மழலை கிடைக்காதவர்களுக்கும் மழலை கிடைக்கும். சகோதரர்கள் அடிக்கடி உங்களுக்கு பிரச்சினை கொடுத்தாலும், முடிவில் உங்கள் கருத்துக்கு ஒத்துவருவார்கள். தொழில்ரீதியாக உடன்பிறப்புடன் சேர்ந்து செய்து வந்த கூட்டு வியாபாரம் இப்போது உங்கள் உடன்பிறப்பு உங்களை விட்டுப் பிரிவதால் பின்னடைவை சந்திக்க விடாமல் தக்க ஒருவரின் துணையோடு எடுத்து நடத்தி செயல்படக்கூடிய நிலை உருவாகும். எதிரிகள் சரணடைவர். இல்லம் தேடி நல்ல செய்தி வரும். உத்தியோக மாற்றம், இலாகா மாற்றம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு குறிப்பிட்டபடி வந்து சேரும். வங்கிக் கடன் பெற்று சுய தொழில் செய்வீர்கள். பொருளாதாரப் பிரச்சினை அகலும். பொருள் வளர்ச்சி கூடும். மாற்று மருத்துவம் உடல்நலத்தைச் சீராக்கும். அரசுவழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம், உத்தியோகத்தில் உயர்வுகள், வியாபாரத்தில் நல்ல பணவரவு ,தொழிலுக்காக வெளியூர்- வெளிநாடு செல்லுதல் என்று நல்ல பலன்கள் கூடிவரும். படித்து முடித்துவிட்டு வேலை தேடி வருபவர்களுக்கு ந்ல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். பிரச்சினையால் பிரிந்து வாழும் தமப்தியரை அவர்களது குடும்பத்திலுள்ள பெரியவர்கள் சேர்த்து வைப்பார்கள். மகன்-மகள் திருமணம் சிறப்பாக நடைபெறும் யோகம் வந்துவிட்டது. பூர்வீகச் சொத்து குடும்ப உறவுகள் போன்ற பிரச்சினைகளில் இருந்துவந்த வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வந்து கோர்ட் கேஸ்கள் ஒரு முடிவுக்கு வரும். மூட்டு வலி , மூச்சிறைப்பு ,சர்க்கரை நோய் , நெஞ்சுவலி , ரத்த அழுத்தம் சம்பந்தமான நோய்களிலிருந்து மீண்டு ஆரோக்கியம் பெறுவீர்கள். விவசாயம் செய்பவர்கள் பெருத்த லாபத்தை ஈட்டுவார்கள். எந்தத் தொழில் செய்தாலும் அதில் சிறந்த விருத்தி வந்து சேரும்.ஆரோக்கியம் பெறுவார்கள். மிகப் பெரிய நல்ல மாற்றங்கள், அதிர்ஷ்ட திருப்பங்கள் மீண்டிம் தலையெடுக்கப்போகிறது. விட்ட கோட்டையை மீண்டும் பிடித்தே தீருவீர்கள். தோல்விமேல் தோல்வி ஏற்பட்டு மிகுந்த கவலையில் இருந்த நீங்கள் இப்போது வெற்றிமேல் வெற்றியைக் குவிக்கப் போகிறீர்கள். கவலை ஏற்படுத்திய கடன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். சொத்துக்கள் குவியும். இப்படிப்பட்ட நல்ல நேரத்தை உபயோகித்துக்கொள்வீர்கள். நீங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். வராமல் நின்றுபோன பணம் தற்போது வந்து சேரும். கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மறையும். தொழிலில் இருந்துவரும் பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் இருந்துவரும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணத்தால் நன்மை கிடைக்கும்.  இப்படியாக சனிபகவானின் 9-ம் இடத்து சஞ்சாரம் நன்மைகளைக் கொடுக்கும். குருவின் சஞ்சாரம் சரியில்லாவிட்டாலும், சனி குரு பார்வை பெறுவதால் நல்ல பலன்களையே கொடுப்பார்
இந்தப் புத்தாண்டு நல்லதும் கெட்டதும் கலந்ததாகவே இருக்கும்.  அஷ்டமச்சனியின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட்டது நல்ல ஆரம்பத்தின் அறிகுறியாகும்.
பரிகாரம்:
குருவின் 3 மற்றும் 4-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லாததால், வியாழக்கிழமைகளில் தட்சிணாமுர்த்தி கோவிலுக்குச் செல்லவும். கொண்டக்கடலை மாலையும் மஞ்சள்பூ மாலையும் சாத்தி வழிபட்வும். ராகுவின் சஞ்சாரம் சரியில்லை. எனவே துர்க்கையம்மனை வழிபடவும். கேதுவின் சஞ்சாரமும் சரியில்லை. அதனால், வினாயகர் கோவிலுக்குச் சென்று கோவிலைச் சுத்தம் செய்து சேவை புரியவும்.

By Anonymous with No comments

மகர ராசி 2012ம் ஆண்டு பலன்

மகரம்
உத்திராடம்(2,3&4) திருவோணம்; அவிட்டம்(2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
மகர ராசி
இந்த ஆண்டு உங்களுக்கு ஒரு நல்ல ஆண்டாகவே இருக்கும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குரு உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் மே மாதம் 16-ம் தேதிவரையும்,  மே மாதம் 17-ம் தேதி முதல் 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார். சனி உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும்,.கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள் .இனி பலன்களைப் பார்க்கலாம்.
கேது உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது நல்லதல்ல. அதுபோல குரு உங்கள் ராசிக்கு மே மாதம் 16-ம் தேதிவரை 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதும் சரியில்லை. இதனால், புத்திர புத்திரிகள் வகையில் பலவித மனக் கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருடைய புத்திர புத்திரிகள் வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம். உங்கள் புதல்வர்களின் விஷயத்தில் செலவினங்கள் அதிகரிக்கும். நீங்கள் போதைப்பொருள் உபயோகியத்து அதிலிருந்து விடுபட முடியாமல், அதிலேயே அமிழ்ந்துபோய்விட நேரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சினைகளும் வில்லங்கங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட வழியுண்டு. சூதாட்டத்தில் மயங்கி அதில் வரும் சொற்ப லாபத்தை நம்பி, மீண்டும் மீண்டும் அதிலேயே மயங்கிஈடுபட்டு கைப்பொருளை இழப்பீர்கள். லாகிரி வஸ்துக்களை விட்டுவிடாமல் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக்கொள்வீர்கள். அரசு சம்பந்தமான விஷயங்களில் இழுபறி ஏற்படும். சிலருக்கு மந்திர தந்திரங்களில் ஆர்வமேற்படும். மாணவர்கள் கல்வியில் நாட்டம் குறைந்து காதல் விஷயங்களில் மாட்டிக்கொண்டு படிப்பை கெடுத்துக்கொள்வார்கள். கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படக்கூடும். உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு தலைவலி, தலையில் கட்டி, காய்ச்சல் போன்ற தலை சம்பந்தமான நோய்கள் உண்டாகும். சிலரது குடும்பத்தில் பாகப் பிரவினை ஏற்படும். உங்கள் பங்கு சொதப்பப்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலம் பாதிக்கப்படும். குடும்பத்துக்குள் தேவையற்ற பிரச்சினைகள் வரும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தாலும், அரசு அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் பாதிப்புகள் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினை ஏற்படும். உங்கள் தந்தையே பிரச்சினைக்கு காரணமாகக்கூட இருக்கும். சொத்து சம்பந்தமாக பிரச்சினை ஏற்படும். சொத்து சம்பந்தமாக வம்பு வழக்குகள் வந்து சேரும். உறவுகள் பகையாகலாம். தேவையான சமயத்தில் பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால், சிரமங்கள் தலை விரித்தாடும். உங்கள் சொந்த பந்தங்களிடம் உங்கள் கோப தாபங்களைக் காட்ட்டினீர்கள் என்றால் , அவர்கள் உங்களைவிட்டுப் பிரிந்துபோய்விடுவார்கள். எவ்வளவுதான் கட்டுப்பாடாக இருந்தாலும் விரயச் செலவுகள் அளவுக்கு அதிகமாகவே இருக்கும்.கல்வியில் மந்த நிலை ஏற்படுவது மட்டுமின்றி கிடைக்கக்கூடும் என்று நம்பிக்கையுடன் இருந்த வேலை வாய்ப்புகூட தவறிப்போகும். இதன் காரணமாக உங்கள் மனதில் துக்கம் மேலோங்கும். இதைக் காரணமாக வைத்துக்கொண்டு, உங்கள் குடும்பத்தினர் உங்கள் மனம் புண்படும்படி , உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசி உங்களை நோக அடிப்பார்கள். சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் தள்ளிப்போகும். இந்தக் காலக் கட்டத்தில் நீங்கள் யாருக்கும் பண விஷயத்தில் வாக்கு கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும். யாருக்காவது ஜாமீன் கையெழுத்துப்போட்டால் அவர்களுக்காக சிறை செல்லக்கூட நேரும்.அல்லது அவர்கள் கடனை நீங்களே அடைக்க வேண்டியிருக்கும். இந்த ராசியில் உள்ள தாய்மார்கள் நகைகளைப் போட்டுக்கொண்டு கூட்டத்தில் போனால், நகைகளைத் திருட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சிலர் தங்களுடைய பணக் கஷ்டத்திற்காக நகைகளை விற்க வேண்டியிருக்கும். சிலருக்கு அவர்களுடைய வண்டி அடிக்கடி பழுதுபட்டு ரிப்பேர் செலவு வைக்கும். சிலருக்கு கால்நடைகளால் செலவு ஏற்படும். சிலர் தங்கள் நிலம் , வீடு இவைகளை விற்கவேண்டிய சூழ்நிலை வரும். சிலருடைய தந்தைக்கு சில பிரச்சினைகளும் வில்லங்க விவகாரங்களும் ஏற்படும். உள்ளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் சில பிரச்சினைகள் இப்போது வெளியே வரும். தாயாருக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய் வழி உறவினர்களுடன் பகையும் கருத்துவேறுபாடுகளும் ஏற்பட்டு கலகத்தில் முடியும். சிலருக்கு குல தெய்வ வழிபாடுகளும் தெய்வகாரியங்களும் தட்டிப்போகும். சிலர் கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்து அது பாதியில் நின்று போகும். வீடு கட்டும் கட்டுமானப் பணிகளும் தடைப்படும்.  குருமார்கள், சாதுக்களின் தரிசனம்கூட தட்டிப்போகும். உங்களுடைய புத்திசாலித்தனம் இப்போது பயன்படாது. சகோதரர்களால் விரயமும் துன்பமும் ஏற்படும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அந்தப் பிரயாணங்களால் பைசா பிரயோசனம் இருக்காது. தேவையற்ற வம்பு வழக்குகள் , வீணான சண்டை சச்சரவுகள் உங்களைத் தேடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு மன நலம் ,உடல்நலம் பாதிக்கப்படும். நீதிமன்றத் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது.
இனி நற்பலன்களைத் தரக்கூடிய கிரகங்களான சனியும், ராகுவும் மே மாதம் 17-ம் தேதிக்குப்பின் சஞ்சாரம் புரியக்கூடிய குருவும் என்னென்ன நற்பலங்களை வழங்குவார்கள் என்று பார்க்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். அதன் காரணமாக தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். இந்த சமயத்தில் உங்களுக்கு பல வ்ழிகளிலிருந்தும் வருமானம் வரக்கூடும். இதன் மூலம் கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்பட்டு நாணயமானவர் என்று பெயரெடுப்பீர்கள். பணியாட்கள் விசுவாசமாக இருப்பார்கள். பெண்களால் நன்மையும் ,புத்திரர்களால், மனதுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். அலுவலகத்த்ல் பணிபுரிபவர்களுக்கு து சிறப்பான காலமாகும். விரும்பிய இடமாற்றம், பணிஉயர்வு, ஊதிய உயர்வு முதலியவை கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவதோடு உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்து அரிய வெகுமதிகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் பெறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.புதிய வாகனமும், கால்நடைகளும் அமையும். ஆடை ஆபரணங்கள் விலை உயர்ந்த பொருள்கள் யாவையும் வாங்கிக் குவிக்கும் நேரம் இது. விவசாயிகள் கால்நடை வளர்ப்பினால் நல்ல லாபம் அடைவார்கள். சிலர் வீடு கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்வார்கள். சிலருக்கு நிலங்கள்,வீட்டு மனைகள் தேடி வரும்.
தாயார் மேன்மை அடைவார். சிலருக்கு தாயார் மூலமாக பல நன்மைகள் கிடைப்பதற்கான யோகம் உண்டு. கல்வியில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். சிலருக்கு பொருளாதார ரீதியாக தடைப்பட்ட கல்வி தற்போது தொடர்வதற்கான வாய்ப்பு உண்டு. கல்வி ஸ்தாபனங்களில் வேலை பார்ப்பவர்கள் இப்போது மேன்மை பெறுவார்கள். குலதெய்வ வழிபாடு, கோவில் குளங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லுதல் முதலியவற்றை மேற்கொள்வார்கள் .சிலர் இஷ்ட தெய்வங்களுக்கு கோவில் கட்டுவார்கள். இதுவரை குடத்துக்குள் விளக்காக இருந்துவந்த உங்களது பெருமை இப்போது உங்களது தெவீகத் திருப்பணிகள் மூலமும், சமூக சேவைகள் மூலமும் வெளி உலகுக்குத் தெரியவந்து குன்றின் மேலிட்ட விளக்காக ஜொலிப்பீர்கள். இதுவரை உங்களைவிட்டு விலகி இருந்த உற்றார் உறவினர்கள் இனி உங்களைத் தேடி வருவார்கள். இதன் காரணமாக வீட்டில் விருந்தினர் வருகை அதிகமாகி மகிழ்ச்சி பொங்கும். கடந்த காலத்தில் பணக்கஷ்டத்தை அனுபவித்து வந்ததால் குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் இருந்தீர்கள். இப்போது பல வழிகளிலிருந்தும் வருமானம் வந்து செழிப்பாக இருப்பதால், குடும்பத்தினரின் தேவைகளை காலமறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதனால், குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் மீது மிகவும் பிரியம் காட்டுவார்கள். இதனால் குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிலவும். உங்கள் முகத்தில் ஒரு பொலிவு இருக்கும். உங்கள் அந்தஸ்து செல்வாக்கு இவை உயரும். சகலவித சௌகரியங்களும் பெருகும். இதுவரை தொல்ல செய்துவந்த உடல் நோய்களும் நீங்கும். வேலை கிடைக்காமல் வேதனைப்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அவர்கள் படிப்பிற்கேற்ற நல்ல சன்பளத்தில் வேலை கிடக்கும்,. ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்துவந்த வில்லங்கம் தீர்ந்து ,சொத்து உங்கள் கைக்கு வரும். சாதுக்கள், ஞானிகள், குருமார்கள் இவர்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும். புதல்வர்களின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை சிறப்படையும். சகோதரர்களால் உதவி கிடைக்கும். சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். தந்தை மேன்மை அடைவார்.  உங்களுக்கு தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். இந்தக் காலத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் ஆககூடிய வேலைகள் மளமளவென முடிவடயும். கடன் சுமை குறையும். நீங்கள் கொடுத்திருந்த கடன் வசூலாகும்.  திரும்ப கைக்கு வராது என்று இழுபறியாக இருந்த கடன்கள் இப்போது வசூலாகிவிடும். கடந்த காலத்தில் கோர்ட் ,கேஸ் என்று அலைந்து பல தொல்லைகளுக்கு ஆளானவர்கள் இப்போது அவற்றிலிருந்து விடுபடுவது மட்டுமின்றி தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக வரும். சிலர் ஆடம்பப் பொருள்களை வாங்கி மகிழ்வர். விருந்து கேளிக்கை என்று உல்லாசம் பொங்கும் நேரம் இது. பிரபலமான பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடந்தேறும். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். அனுகூலமான செய்திகள் வரும்.
தொழில் இல்லாதவர்களுக்கு ந்ல்ல தொழிலும், ஏற்கெனவே செய்துவரும் தொழிலில் நல்ல விருத்தியும் உண்டாகும். கூடுதல் வருமானத்துக்காக மற்றொரு தொழிலும் புதிதாக தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அதுபோல தற்போது செய்துவரும் வியாபாரத்தோடு மேலும் ஓர் வியாபாரத்தையும் இணைத்துச் செய்வதற்கான வாய்ப்பும் அமையும். வெளிநாடு சென்று, தொழில், உத்தியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் நினைத்தது நடக்கும். சிலருக்கு ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் ஈடுபாடு உண்டாவதால், அத்தொழிலில் ஈடுபட்டு ஏற்றம் பெறுவர். வாடகை வீட்டில் இருப்போர் சொந்த வீடுகட்டி குடியேறுவர். அதிக ரிப்பேர் செலவு கொடுத்துவந்த பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் பெருகும்.  நீங்கள் எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் கூடும்.
இப்படியாக ராஜ கிரகங்களான சனியும், குருவும் காத்து அருள் புரியும்போது, நீங்கள் இந்தப் புத்தாண்டில் ஏற்றம் பெறலாம். இது ஒரு மகிழ்ச்சியூட்டும் புத்தாண்டு என்பதில் சந்தகமில்லை.
பரிகாரம்::
கேதுவின் 5-ம் இடத்து சஞ்சாரம் சரியில்லை. அதனால் நீங்கள் ஒரு வினாயகர் கோவிலுக்குச் சென்று செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோவிலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரம் ஆண்டின் முன்பாதியில் சரில்லாமல் உள்ளதால் நீங்கள் வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று, கொண்டக்கடலை மாலையும மஞ்சள் மாலையும் சாத்தி வழிபடவும்.

By Anonymous with No comments

Share me on facebook