Wednesday, April 4, 2012

ரிஷப ராசி 2012ம் ஆண்டு பலன்

ரிஷபம்
கிருத்திகை(2,3&4);ரோகினி; மிருகசிரீஷம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
ரிஷப ராசி
இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆண்டு கோளான குருபகவான் உங்கள் ராசிக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிதத்தபடி இருக்கிறார். இந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதியன்று வரப்போகும் குருப்பெயர்ச்சியின்போது குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தான சஞ்சாரத்தின்போது நிறைய பொருள் நஷ்டங்களை சந்தித்திருப்பீர்கள். மே மாதம் வரப் போகும் ஜென்ம ராசியின் சஞ்சாரத்தின் போதும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதுபோலத்தான் இருக்கும். இனி ராகு- கேது சஞ்சாரங்களைப் பார்த்தோமானால், ராகு உங்கள் ராசிக்கு 7-மிடத்திலும், கேது உங்கள் ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதும் அவ்வளவு நல்ல சஞ்சாரமல்ல. ஆனால், டிசம்பர் 2011-ல் வந்த சனிப் பெயர்ச்சி உங்களுக்கும் முற்றிலும் ராசியான 6-மிடத்தில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய சஞ்சாரமாகும். இனி பலன்களை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
12-மிடத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களிடமுள்ள ஊக்கத்தைக் குறைப்பார். அடிக்கடி அலுப்பும் சலிப்புமாக இருக்கும். உடல்பலம் குறைந்து பலவீனமாயிருக்கும். உடல்நலத்தில் சின்னச் சின்ன குறைகள் தென்படும். சிலருக்கு ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் இருக்கும். குரு சர்க்கரை வியாதிக்கு சம்பந்தப்பட்ட கிரகம் என்பதால், கவனப் பிசகாக இருந்துவிட்டால், டயபெடிக் லெவலுக்கு கொண்டுவிட்டுவிடும். கொலாஸ்ட்ரால் சம்பந்தமான தாக்கமும் ஏற்படும். .
இனி குருவின் ஜென்ம சஞ்சாரமும் பெரிய வித்தியாசத்திக் காட்டப் போவதில்லை. நடை,உடை, பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். விரக்தியும் சோர்வும் சலிப்பும் உங்களிடம் சொந்தம் கொண்டாடும். அடிக்கடி உங்கல் மனம் துவண்டுபோகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. ஒருமாதிரியாயிருக்கு அசத்துது; கிறுகிறுப்பாயிருக்கு என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பீர்கலள். பித்தமயக்கம், தலைச் சுற்றல், சர்க்கரை, கொலாஸ்ட்ரல் ஈரல் கோளாறு, செரிமானப் பிரச்சினை என்றபடி அசௌகரியங்கள் மேலோங்கியிருக்கும்.
ஜென்ம குருவும் பொருளாதார வசதியைக் கொடுப்பார் என்று சொல்லமுடியாது. வரவேண்டிய பணம் தடைப்படும். வந்து சேர்வதும் அரையும் குறையுமாக வரும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டி, தவணை என்று வருமானத்தில் பெரும்பகுதி கடனுக்கே போய் வவிடும். பற்றாக்குறைப் பிரச்சினை அவ்வப்போது ஏற்படுவதும் சமாளித்து சரிக்கட்டுவதும், வழக்கமான பிரச்சினையாகிவிடும். இதுமட்டுமல்லாமல் பணத்தை முன்னிட்ட கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் என்று ஒன்று மாற்றி ஒன்று படுத்தும். வீண்தகறாறும் அவப்பெயரும் ஏற்படும்.
ஜென்ம குரு சுப காரியங்களையும் நடக்கவிடாது. காரணம் சட்டுப்புட்டென்று, பணம் புரட்ட முடியாது. தகுந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. ஏற்கெனவே கல்யாணமான தம்பதியரிடையே அடிக்கடி பிரச்சினை இருந்தவண்ணம் இருக்கும். மேலும் அலுப்பு, சலிப்பு, அலைக்கழிப்பு என்று தம்பதியரிடையே இணக்கம் குறையும். பிள்ளைகளைப்பற்றிய பொறுப்பும் கவலையளிக்கும்.
அதுபோலவே ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் சஞ்சரிப்ப்து நல்லதல்ல. ராகு உங்கள் 5-மிடத்தையும் 9-மிடத்தையும் பார்வையிடுகிறார். அதேசமயம், உங்கள் ஜென்ம ராசியில் அமைந்துள்ள கேதுபகவான், உங்கள் ராசிக்கு 3-மிடத்தையும் 11-மிடத்தையும் பார்க்கிறார். இதன்மூலம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அதுவும் அவர்கள் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களது உதவிகள் உங்களுக்கு அவ்வப்போது கிடைக்கும். சிலர் அவர்களுடன் சேர்ந்து கூட்டுத் தொழில் தொடஙகுவார்கள். ஆனால் இந்த இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தையும் நட்பையும் சேர்த்து குழப்பிக்கொள்ளாமல், இரணடையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இரண்டையுமே கெடுத்துக்கொள்வார்கள். சிலர் தங்கள் தொழிலை மாற்றிக்கொள்வார்கள். சிலர் இடம்விட்டு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை தேவை. அவருடைய உடல்நலத்தில் ரத்தம் சம்பந்தமான வியாதிகள், மற்றும் விஷம் சம்பந்தமான வியாதிகளும் ஏற்படும்.
சிலருக்கு ஒழுக்கக் குறைவான பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டு உடல்நலத்தையும் ,கௌரவத்தையும் மரியாதையையும் கெடுத்துக்கொள்வர்.
கேதுபகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படும். வீண்பயம் மனதில் இருக்கும்.. சதா சர்வ காலமும், ஏதோ ஒரு சோகம் மனதில் இருக்கும். மனதில் தோன்றும் சிந்தனைகள், எண்ணங்கள் யாவும் அப்போதைய சூழ்நிலைக்கு தேவையற்றதாகவே இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. உடலில் உஷ்ண சம்பந்தமான கட்டிகள், காயங்கள், அலர்ஜி மற்றும் தோல்நோய்கள் தோன்றும்.
மனதைப் பக்குவப்படுத்தி தியானம் , இறைவழிபாடு என்ற பாதையில் சென்றால், ஆன்மீக குருமார்களின் தரிசனம், சாதுக்களின் நட்பு, பெரியோர்களின் தொடர்புகள் அவர்களின் ஆசீர்வாதங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினருடன் கருத்துவேறுபாடு ஏற்படும். சிலர் தனது பெற்றோரைப் பிரிந்து வாழவேண்டிவரும்.
தொழில், வியாபாரத்தில் தடை ஏற்படும். மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக கடின உழப்பை மேற்கொள்ளவேண்டியிருக்கும். நீங்கள் என்னதான், படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், உங்கள் திறமைகள் எல்லாம் இப்போது உங்களுக்கு பயன்படாமல் போகும். எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் தடங்கல்கள் வரும். தொழிலாளர்கள் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
மின்சாரம், நெருப்பு, விஷம், ஆயுதம் இவை சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எச்சரிக்கை அவசியம்.
கேதுபகவான் மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தைப் பார்ப்பதால், மனதைரியம், மன பலம் குறைய வாய்ப்புண்டு.சகோதர சகோதரர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எச்சரிக்கையோடிருந்தாலும் , கடவுள் பக்தியோடிருந்தாலும், இந்த கஷ்டங்களிலிருந்து விடுபடலாம். தேவையற்ற காரியங்களில் உங்கள் முகத்தைக் காட்டாமல் இருப்பது நல்லது. கேது 11-ம் பார்வயாக உங்கள் ராசிக்கு 11-மிடத்தைப் பார்ப்பதால், உங்கள் வருமானம் குறையலாம். தேவையில்லாத பழக்கவழக்கங்கள் ஏற்படலாம்.
இனி இத்தனை கஷ்டங்களுக்கும் மருந்தாக, சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சஞ்சாரம் செய்வது மிகவும் ஆறுதலான விஷயமாக இருக்கும். இவர் துலா ராசியில் இருந்துகொண்டு உங்கள் ராசிக்கு 3,8 12-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். சகோதரி ஸ்தானம் பலப்பட்டு, சகோதர சகோதரிகளின் உறவு வலுப்படும். வழக்கில் வெற்றிகளும் நிர்ணயமாகும் நேரம். வேண்டிய அளவு சுகங்களும் சந்தோஷங்களும் வந்து சேரும். மூன்றாமிடத்தை சனி பார்ப்பதால், உடன்பிறப்புகளின் முன்னேற்றம்கருதி பெரும் தொகையை நீங்கள் செலவிடலாம்.நீங்கள் தொழில் தொடங்குவதற்கு உடன்பிறப்புகள் கை கொடுத்து உதவுவார்கள். எட்டாமிடத்தை சனி பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். பாயில் படுத்திருந்தவர்கள் பம்பரமாக சுழல்வார்கள். எதையும் சமாளித்து ஏற்றம் பெறும் வழியை சனி காட்டுவார். குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சியில் இருந்துவந்த தடை நீஙகும். உற்றார் உறவினரின் ஆதரவு மன நிறைவைத் தரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புத்திர வழியில் ஏற்பட்ட சஞ்சலங்கள் விலகிவிடும். தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால், அபிவிருத்தி பெருகும். வியாபார ரீதியாக எடுக்கும் முயர்ச்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலனையே காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மன நிம்மதியையும் நிறைவையும் அடைவார்கள். எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும். ஆனால், ஊதிய உயர்வுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும். போட்டி, பொறாமை யாவும் மறையும்.
இப்படியாக , குருவின் சஞ்சாரமும் , ராகு கேதுவின் சஞ்சாரமும் சரில்லையென்றாலும், சனியின் சாதகமான சஞ்சாரம் நற்பலன்களைக் கொடுக்கும். சனிக் கிரகமே சக்திமான் என்பதால், மற்ற கிரகங்களால் வரக்கூடிய கெடுபலன்களையும் குறைக்கவல்லது. எனவே இந்தப் புத்தாண்டு உங்களுக்கு சனிபகவான் அருளும் , சிறப்பு வரமாக அமையும்.
பரிகாரம்: உங்களுடைய ராசிக்கு ராகுவின் ஏழாமிடத்து சஞ்சாரம் சரியில்லை என்பதால், துர்க்கையம்மனை வழிபடவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். கேதுவின் ஜென்ம ராசி சஞ்சாரமும் சரில்லை என்பதால், வினாயகர் கோவிலுக்கு சென்று, கோவிலை சுத்தப்படுத்தி கோவிலுக்கு சேவை செய்யவும். கொள்ளுதானம் செய்யவும். குருவின் சஞ்சாரமும் சரியில்லை என்பதால், தட்சிணாமூர்த்தி கோவிலுக்குச் சென்று மஞ்சள் வஸ்திரம் அணிவித்து கொண்டக் கடலை- மாலை போட்டு வணங்கவும்.

By Anonymous with No comments

மிதுன ராசி 2012ம் ஆண்டு பலன்

மிதுனம்
மிருகஸ்ரீஷம்(3&4); திருவாதிரை;புனர்பூசம்(1.2&3) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
மிதுன ராசி
இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு பலவித யோகங்களை வழங்கும். இத்தகு யோகமான குருபலன் இந்த வருடம் மே மாதம் 17-ம் தேதிவரை நீடிக்கும்.
குருபகவானைத் தவிர, ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்திலும் கேது உங்கள் ராசிக்கு 12-மிடத்திலும் ஆண்டு இறுதிவரை சஞ்சரிக்கிறார்கள். இந்த சர்ப்ப கிரகங்கள் உங்களுக்கு நல்லது செய்யும் இடத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு மிகவும் சாதகமான காலக்கட்டமே. எனவே இந்தப் புத்தாண்டில் மகிழ்ச்சி நிறையப் போகிறது.
ஆண்டு தொடக்கத்தில், குருபகவான் உங்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு பண வரவு பெருகும்.வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு பிழைப்புக்கு வழி கிடைக்கும் வண்ணம் ஏதாவதொரு வேலை கிடைத்துவிடும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கும் உத்தியோக உயர்வு கிடைத்து அதன்மூலம் வருமானம் பெருகும். கொடுத்த கடன் திரும்ப கைக்கு வரும். முன்னேற்றத் திட்டங்களுக்காக எதிர்பார்த்த இடத்திலிருந்தும் வங்கியிலிருந்தும் கடன் கிடைக்கும். இப்படியெல்லாம்  தனகாரகனான குருபகவானுடைய தயவில் பலவகையிலும் பணம் , ஆதாயம் என்று வருவதற்கு இனிமேல் பல வழிகளும் திறந்து உங்களுக்கு வாழ்த்துக்கூறும். ஏற்கெனவே அடமானத்தில் இருந்த நகைநட்டுக்களையும் மீட்டுக் கொள்வீர்கள். புதிய பொன்னாபரணங்களையும் வாங்குவீர்கள். அலங்கார சாதனங்கள் , அழகுப் பொருள்கள் நுட்பமான தயாரிப்புகள், முதலியவற்றை வாங்குவீர்கள். வீட்டு யோகமும் சிறப்புறும். புதிய வீடு வாங்கும் யோகம் சிலருக்கு வாய்க்கும். சிலருக்கு வசதியான வாடகை வீட்டுக்கு போகமுடியும். வேண்டிய வசதிகள் அமையும்.
குருபகவானின் சுபத் தன்மை பெருகி திருமண யோகம் கூடும் . திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கூடிவரும். திருமணமான தம்பதியரிடையே ஒற்றுமை சிறந்து விளங்கும். பிள்ளைகளைப் பற்றிய குறை, வருத்தம் யாவும் அகலும். குழந்தைப் பேறு உண்டாகும். உங்களைப் பற்றிய பழி பாவங்கள்,  தப்பான அபிப்பிராயங்கள், வீண்பழி இவை உங்களைவிட்டு விலகிவிடும். பெற்றவர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் இதுவரை நீங்கள் செய்யத் தவறிய கடமைகளை இந்த ஆண்டில், சிலர் தூர தேசம் சென்றுகூட பயனடைய முடியும். இப்படியாக குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களாகக் கொடுப்பார்.  நீங்கள் எண்ணிய காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
ராகு-கேது ஆகிய இரு சர்ப்பக் கிரகங்களும் உங்களுக்கு நன்மை தரப் போவதால், இந்த ஆண்டு உங்களுக்கு லாபமாகவே இருக்கும். குருபகவான் அளித்த நற்பலன்களைப் போலவே, வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்கள் ,பணி உயர்வு ,உத்தியோக உயர்வு பெறுவார்கள். தொழில் போட்டியாளர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிவார்கள். தொழில், வியாபாரம் மேன்மையடையும். எதிர்பார்த்த லாபம் வரும். இப்படியாக குருபகவான் தரக்கூடிய நற்பலன்களை ராகுவும் வாரிவழங்கத் தயங்கமாட்டார். கடுமையான உடல்நலப் பாதிப்புகள் இருந்தால் அவை நீங்கிவிடும்.
சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அஜீரணக் கோளாறுகள், வாயுக் கோளாறுகள் வயிற்று சம்பந்தமான கோளாறுகள் ஆகியவை ஏற்படும். நெருங்கிய உறவினர் சிலர் எதிர்ப்பு காட்டக்கூடும். எதிர்பாராத பண வரவு ஏற்படும். தற்காலிக வசதிகளையும் வாய்ப்புகளையும் தேடிககொடுக்கும். சிலருக்கு புதிய தொழில் அமையும். எடுத்த காரியங்கள், செய்யும் முயர்ச்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலையும் அதன் காரணமாக நல்ல பலன்களும் உண்டாகும். இழந்த பொருள் அத்தனையும் மீட்பீர்கள். மங்கலமான நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். சிலருக்கு தடைப்பட்ட கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடர்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் காலம் இது.
கேதுபகவானின் சஞ்சாரமும்  யோகமாகவே உள்ளது. காத்திருக்கும் சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிலர் பொழுதுபோக்காக மகிழ்ச்சிச் சுற்றுலாவாக வெளிநாடு சென்று வருவார்கள். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். சிலருக்கு ஞான நிலை சித்திக்கும். சிலர் தியானம், யோகம் இவற்றில் தீவிரமாகி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்துகொள்ளும் முயர்ச்சியில் ஈடுபடுவார்கள்.
அடுத்தபடியாக சனிபகவானின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது,  நீங்கள் அர்த்தாஷ்டம சனியின் பிடியிலிருந்து விடுபட்டதே பெரிய விஷயம். இனி சனியின் ஐந்தாமிடப் பிரவேசம் உங்களுக்கு நன்மையே செய்யும். துலாம் ராசியில் இருந்தபடி உச்சம் பெற்ற சனி உங்கள்  ராசிக்கு 2,7,11-ம் இடங்களைப் பார்க்கப் போகிறார். இதன் விளைவாக பண வசதிக்கு குறைவில்லை. குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவி உறவு சிறக்கும். கருத்து வேறுபாடு மறையும். புதல்வர்கள் கல்வியில் சிறந்து உங்களுக்கு நற்பெயரை பெற்றுத் தருவார்கள். சகோதர சகோதரிகள், விலகிச் சென்ற சொந்தங்கள் அனைவரும் உங்களைத் தேடி வருவார்கள். தொழில், வியாபாரமும் சிறந்து, ஏற்றம் உண்டாகும் . உங்கள் ராசிக்கு எட்டுக்கும் ஒன்பதுக்கும் அதியபதியான சனி பகவான் 5-ல் உச்சம் பெறுகிறார். பணப் புழக்கம் அதிகரிக்கவும், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் அகலவும் சில முக்கிய புள்ளிகள் முன்வந்து உதவுவார்கள். சனியின் பார்வை உங்கள் லாப ஸ்தானத்தைப் பார்ப்பதால், உங்களுக்கு வள்ளலாக வாரி வழங்குவார். உங்களுடைய சப்தம ஸ்தானத்தையும் சனி பார்ப்பதால், வீட்டில் கெட்டி மேளம் முழங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைப்பட்ட சலுகைகள் தானாகவே திரும்பக் கிடைக்கும். இப்படியாக இந்த ஆண்டு முழுவதும் ராகு,கேது,சனி ஆகிய மூன்று கிரகங்களும் நற்பலன்களை வாரி வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. குருபகவானின் சஞ்சாரம் மே மாதம் 17-ம் தேதிவரைதான் சிறப்பாக இருக்கும். அதன்பிறகு குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்குப் போவதால், எதைத் தொட்டாலும் விரயமாகவே இருக்கும்.
இதுவரை கூறப்பட்ட பலன்களுக்கு எதிரிடையான பலன்களாகவே நடக்கும் . குரு விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்களுடைய ஊக்கம் குறையும். அலுப்பும் சலிப்புமே அதிகரிக்கும். ஊட்டம் குறைந்து உடல் பலவீனமாகும். உடல்நலத்தில் சின்ன சின்னக் குறைகள் தோன்றும். ஈரல்கோளாறுகளும் செரிமானக் கோளாறுகளும் ஏற்படும். சர்க்கரை வியாதி, கொலாஸ்ட்ரல்முதலிய வியாதிகள் வரும். சிகிச்சையின்மூலம் பணம் கரையும். வேலை நெருக்கடிகளையும் அலைக்கழிப்புகளையும் கொடுத்து நேரா நேரத்துக்கு சாப்பிட முடியாமல் போகும். கடினமான உழைப்பால் உடம்பில் உளைச்சல் உண்டாவது சகஜம் என்றாகிவிடும். பணம் ஏராளமாக செலவாகும். பணம் ஒன்றுக்கு இரண்டாக செலவழியும். வழக்கமான செலவுகளே வரம்பு மீறிவிடும். புதிய செலவினங்களும் கிளம்பி வாட்டி வதைக்கும். குடும்பசெலவுகள், பிள்ளைகளுக்கான பலவித செலவுகள், உறவினர் வகையில் விஷேஷங்களுக்கான செலவுகள் என்று சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். வரவேண்டிய பணம் சரியான சமயத்தில் கைக்கு வராததால், ஏகப்பட்ட நெருக்கடிகளில் சிக்கி, உங்கள் மதிப்பு குறையும் அளவுக்குப் போய்விடும். சொந்த பந்தங்களின் சுபகாரிய சீர்வரிசைக்கெல்லாம் செலவு செய்யவேண்டி நேர்வதால் திணறுவீர்கள். பொன்னாபரணங்களை அடமானம் வைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள். வட்டிகட்ட முடியாமல் நகைகளை விற்கும் நிலை ஏற்படும்.
கூடிவந்த திருமணம்கூட தடைப்படும். தம்பதியர் ஒற்றுமை குறையும். படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பிள்ளைகளால் சஞ்சலம் உண்டாகும். தூர தேசங்களில் பிள்ளைகளைப் பிரிந்திருக்க நேரும்.
கொஞ்சம் ஆறுதல் தரும் விதமாக, 12-மிடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானின் அருள் நிறைந்த பார்வைர்களில் ஒரு பார்வை உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் விழுவதால்,ஒளி வீசுகிறது. இதனால் க்ல்வி மேம்படும். வித்தைகள் விருத்தியாகும். தாயாருக்கு உடல்நலம் உயரும். இடம்,குடியிருப்பு, மனை, வீடு, தோட்டம், இதர சொத்துக்கள் ஆகியவற்றை பெருக்கிக்கொள்ள முடியும். குருபகவானின் மற்ற பார்வைகள் 6 மற்றும் 8 ஆகிய இடங்களைப் பார்ப்பதால், வியாதிகள் மட்டுப்படும். கடன், நோய்கள் குறையும். வழக்கு, விவகாரங்களை சந்தித்து வெற்றிகொள்ள முடியும். எனவே மொத்தத்தில் பெரும் கிரகங்கள் உங்களுகுத் துணை நிற்பதால், உங்களுக்கு இந்தப் புத்தாண்டு சுபமாகவே அமையும்.
பரிகாரம்:
மே மாதம் 17-ம் தேதிக்குப் பிறகு குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதால், வியாழக் கிழமைகளில் தட்சிணாமுர்த்தியை ஆலயம் சென்று வழிபட்டு, மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சித்து கொண்டக்கடலை மாலையிட்டு வணங்கவும். வினாயகரை வழிபடவும்.

By Anonymous with No comments

மூன்று பட விமா்சனம்

நடிப்பு: தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுப்பிரியா, ரோகிணி, சிவகார்த்திகேயன். இயக்கம்: ஐஸ்வர்யா
ஒளிப்பதிவு: ஆர்.வேல்ராஜ் இசை: அனிருத் தயாரிப்பு: ஆர்.கே புரொடக்ஷன்ஸ், வுண்டர் பார் பிலிம்ஸ்

பிளஸ் டூ படிக்கும் தனுஷூக்கும் ஸ்ருதிக்கும் காதல். ஸ்ருதியின் குடும்பம் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்கிறது. தனுஷைப் பிரிய முடியாத ஸ்ருதி, பெற்றோரிடம் விஷயத்தை சொல்கிறார். வழக்கம் போல எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதீத கோபம், அதீத வெறுப்பு என ஒருவிதமான மனநோயில் (Bipolar disorder) சிக்கிய தனுஷ், தன்னால் ஸ்ருதிக்கு அசம்பாவிதம் நேர்ந்துவிடுமோ என பயந்து தனது சொத்துக்களை அவர் பெயரில் எழுதி வைத்துவிட்டு திடீரென இறந்துபோகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

ஷார்ப்பான கதையை ஷார்பாக இயக்கியுள்ள ஐஸ்வர்யா, நம்பிக்கைக்குரிய இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். பிளஸ் டூ மாணவ, மாணவியாக தனுஷ், ஸ்ருதி ஜோடி அவ்வளவு பொருத்தம். ஒரு மழைநாளில் ஸ்ருதியின் சைக்கிளில் கழன்றுபோன செயினை மாட்டிக் கொடுத்ததுமே தனுஷ் மனதில் அப்பிக்கொள்கிறது காதல் தீ. ஸ்ருதியும் மனதைப் பறிகொடுக்க, பிறகு தொடர்கிறது இளமையும், கிளுகிளுப்புமான காதல் விளையாட்டு. ஸ்ருதியைக் கவர்வதற்காகவே தனுஷ், டியூஷன் சென்டரில் சேர்வதும், அங்கு சிவகார்த்திகேயனுடன் அடிக்கும் லூட்டியும் காமெடி மேளா.
தனக்கு வந்த மனநோயின் பாதிப்பை அறிந்து துடிக்கும் போதும், தன் நண்பன் சுந்தரை அடித்துவிட்டு புலம்பும்போதும், தன்னால் ஸ்ருதிக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்று நடுங்கும்போதும், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்க முடியாமல் தவிக்கும்போதும் தனுஷ் நடிப்பில் தகதக மினுப்பு. ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு மெருகேறி வருவதற்கு இதுவும் சாட்சி.

எதற்கெடுத்தாலும் தனுஷ் மடியில் அமர்ந்துகொள்ளும் ஸ்ருதி, இளசுகளின் லேட்டஸ்ட் ஹாட் ஆகியிருக்கிறார்.  காதலுக்காக பெற்றோரை எதிர்க்கும் ஸ்ருதி, ‘சரி நீ போ. இனிமே உன்னை பார்க்க வர மாட்டோம்‘ என்று அவர்கள் சொன்ன பிறகு தவிக்கிறாரே, முதிர்ச்சியான நடிப்பு. தனுஷின் மரணத்துக்குப் பிறகு நிலைகுலையும் அவர், உருக வைக்கிறார். கதறியழும் காட்சிகளிலும், டப்பிங்கிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

தனுஷின் பெற்றோர்களாக வரும் பிரபு, பானுப்பிரியா ஜோடி மனதில் நிற்கிறார்கள். ஸ்ருதியின் அம்மா ரோகிணி, அவரது கணவர், கை சைகைகளின் மூலம் அனைவருடைய கவனத்தையும் கவரும் தங்கை கேரக்டர், டைமிங் காமெடிக்கு உத்தரவாதம் தரும் சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும், தங்கள் கேரக்டருடன் ஒன்றியிருக்கிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு, பளிச். தனுஷ், ஸ்ருதியின் பள்ளிப் பருவம், பிறகு திருமணம், மனநோய் காலம் என, மூணு கட்ட வாழ்க்கையை இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். அனிருத், பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார்.

தனுஷுக்கு ஏற்பட்டிருந்த மனநோய், அவரது பெற்றோர்களுக்கும், தனுஷுடன் வாழ்க்கை நடத்தும் ஸ்ருதிக்கும் தெரியாமல் போனது எப்படி? மனநோய்க்கு தற்கொலைதான் தீர்வா? சட்டென முடியும் கிளைமாக்ஸ் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாதது ஏன்? என்பது உட்பட ஏகப்பட்ட கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. சூப்பர் ஹிட் பாடலான, ‘ஒய் திஸ் கொலவெறி’யை இவ்வளவு சாதாரணமாகவா படமாக்கியிருப்பார்கள்?

மூன்று பட உயா் ரக படங்களை பார்க்க.............

By Anonymous with No comments

மேஷ ராசி 2012ம் ஆண்டு பலன்

மேஷம்
அஸ்வினி; பரணி; கிருத்திகை(1) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
மேஷ ராசி
இந்த 2012-ம் ஆண்டு உங்களுக்கு ‘அப்பாடா’ என்று பெருமூச்சு விட வைக்கும். ஏனென்றால், கடந்த இரண்டாண்டுகள் குரு 12-ம் இடமான விரயஸ்தானத்திலும், தற்போது ஜென்ம ராசியிலும் சஞ்சரிப்பதால்.நிம்மதி என்பதே உங்களுக்கு மறந்துபோன் விஷயமாகிவிட்டது. இது மட்டுமின்றி, குரு சாதகமான 11-ம் இடத்தில் சஞ்சரித்தபோதுகூட உங்களால் நிம்மதியாக இருக்க முடிந்ததா, என்ன?குரு வக்கிரகதி என்ற பெயரில், இங்கும் அங்கும் ஒளிந்து பிடித்து விளையாடியதில், உங்களால், அந்த மகிழ்ச்சியையும், அனுபவிக்க முடியவில்லை. இப்போது வருகிற 2012- மே மாதம் 17-ம் தேதி வரப்போகும் குருப்பெயர்ச்சி உங்களது ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு பெயர்வதால், அது உங்களுக்கு யோகமாக இருக்கும். ஆனால் வருடத்தின் முற்பகுதியான ஜனவரி மாதம் முதல் மே 17-ம் தேதிவரையிலான காலக் கட்டத்தில், ஜென்ம சனியின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அது மட்டுமில்லாமல், சனியின் ஏழாமிடத்து சஞ்சாரமும் அனுகூலமானதல்ல். இது மட்டுமின்றி, எட்டாம் இட ராகுவும், இரன்டாமிட கேதுவும் நன்மை தராது. ராகு கேது சஞ்சாரமும், சனியின் சஞ்சாரமும், ஆண்டு முழுவதும் மாறாமல் இருக்கும். ஏழாமிடத்தில் சஞ்சரிக்கும் சனியை குருபார்ப்பதால், பெரிய பாதிப்புகளில் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள் என்றாலும், சனியின் பார்வை உங்கள் ஜென்ம ராசியில் பதிவதால், உங்கள் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். சனியின் பார்வை நான்காமிடத்தைப் பார்ப்பதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். சனியின் பார்வை ஒன்பதாமிடத்தில் பதிவதால், வெளிநாட்டுப் பயணங்கள் கைகூடும். கணவன்-மனைவி உறவு சிறக்கும்.
இது தவிர எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு, எதிர்பாராத நிகழ்வுகளை நடத்திக் காட்டும். எதிர்பாராத என்றால் தீய பலன்கள் மட்டுமல்ல. எதிர்பாராத சில நல்ல பலன்கள் நடப்பதற்கும் வாய்ப்புண்டு. ராகு பகவான் தனது மூன்றாம் பார்வையால் 10-ம் இடத்தைப் பார்ப்பதால்,உத்தியோக சம்பந்தமாகவோ தொழில் சம்பந்தமாகவோ, வெளியூர் செல்ல நேரும். சிலர் தங்கள் வசிப்பிடங்களை மாற்றுவர். அடிக்கடி வீடு மாறுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பண வரவுகள்ஏற்படும். பயணங்களின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். பயணத்தின்போது கைப்பொருள் தொலைந்துபோக நேரும். சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லையென்றால் வம்பு வழக்குகளில் சிக்கிக்கொள்ள நேரும். கணக்கு வழக்குககளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால், அரசாங்கத்தால் தொல்லைகள் வரும். அரசு ஊழியர்களும் உத்தியோகத்தில் இருப்பவர்களும் மேலதிகாரிகளால், பிரச்சினைகளை சந்திப்பார்கள். யாரிடமும் கையூட்டுப் பெறுவதை தவிர்க்கவேண்டும். இல்லையென்றால் காவல்துறையிடம் சிக்கி அவமானப்பட நேரும். வெளிநாட்டுப் பயணம் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரிடமும் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வராது. எந்த விஷயமாக இருந்தாலும் முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். மனதில் குழப்பநிலை நீடிக்கும். மறைந்திருக்கும் எதிரிகளால் தொல்லை ஏற்பட்டாலும் அவர்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிட முடியாது.
இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பொருளாதார ரீதியாக சில பாதிப்புகளை ஏற்படுத்தும். தொழில் மந்த கதிக்குப் போகும். கொடுக்கல்- வாங்கலில் சிக்கலான சூழ்நிலை உண்டாகும். கண்முன்னே தலை விரித்தாடும் செலவுகளை சமாளிக்க வருமானத்தை தேடி ஓட வேண்டியிருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற தடுமாறுவார்கள். குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தாரின் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும். செல்வாக்கும், அந்தஸ்தும் பாதிக்கப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். மனதில் விரக்தி மேலோங்கும். தாயாரின் உடல் நலம் பாதிப்படையும். வண்டி வாகனங்கள் விரயச் செலவு வைக்கும். தொழில் வியாபாரத்தில் கவனம் செல்லாது. சிலர் சொந்த பந்தங்களை விட்டுப் பிரிய நெரும். சிலருக்கு உறவும் பகையாகும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்தாலும்கூட, ஏதாவது கிண்டலாகப் பேசினால்கூட சண்டை வந்துவிடும். பூர்வீக சொத்தில் வில்லங்கம்  ஏற்படும்.
இதுவும் தவிர, உங்களுக்கு இப்போது ஜென்ம குரு நடந்துகொண்டிருப்பதால், உங்களுடைய சீர் கெடும். சிரமங்கள் உண்டாகும். பொன் பொருள்கள் கைவிட்டுப் போகும். அரசாங்க சம்பந்தமாகவும் குற்றங்குறைகள், சங்கடங்கள் உண்டாகும் என்பதெல்லாம் பொதுவான விதி. உங்களுடைய நடை உடை பாவனைகளில் ஒருவித தளர்ச்சி தெரியும். இனம் புரியாத ஒரு விரக்தி உணர்வு தலை தூக்கும். கவலை, சஞ்சலம், சந்தேகம், குழப்பம், வீண்பயம், அவனம்பிக்கைஆகியவை புகைமூட்டம் போல அடிக்கடி உங்களை சூழ்ந்து கொள்ளும்.
ஆரோக்கியம் திருப்தியாக இருக்காது. சின்னச் சின்ன நோய் ஏதாவது வருவதும் போவதும் சகஜமாக இருக்கும். பித்த மயக்கம், தலை சுற்றல், ஈரல் கோளாறுகள் செரிமானக் குறைவு, கொலஸ்ட்ரால் பிரச்சினைகள் சர்க்கரை வியாதி இவையெல்லாம் பொதுவாக ஜென்ம குருவால் வரக்கூடிய பிரச்சினைகள். ஆனால், குருபகவான், மேஷராசிக்கு பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி என்பதால், ஜென்ம குருவின்பொதுவான கெடுபலன்களை  குறைத்துவிடும் என்பதாலும் ஆரோக்கியம் அவ்வளவாக பாதிக்காது. சின்னச் சின்ன அசௌகரியங்கள் வந்து அவ்வப்போது குணமாகிவிடும்.
பொருளாதார நிலைப் பார்க்கும்போது விரயஸ்தானத்த்ல் குரு வாசம் செய்தபோது கையில் காசு தங்காமல் ஓடியது, இல்லையா? இபோதும் அதில் பெரிய மாற்றம் இருக்காது. வரவேண்டிய பணம் கைக்கு வராது. வந்தாலும் அரையும் குறையுமாக வரும். கொடுக்கல்- வாங்கல்களை சரிவர நடத்திக்கொள்ள முடியாமல் குளறுபடியாகிக்கொண்டிருக்கும். ஏற்கெனவே வாங்கிய கடனுக்கு வட்டிப்பணம், கடன் தவணை என்று செலுத்துகிற வகையில், வருமானத்தின் பெரும்பகுதியை இழக்க வேண்டி வரும். இதுதவிர வழக்கமான செலவுகளும் சேர்ந்துகொள்ளும்.எனவே கடன், கைமாற்று, இவற்றை சமாளித்து சரிக்கட்டுவதே பெரிய சிக்கலாகவும் வேதனை தருவதாகவும் இருக்கும். இதுமட்டுமில்லாமல், பணத் தட்டுப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகளும்.,மனஸ்தாபங்களும், அவமானங்களும் ஏற்படும். வீடு, மனை மாடு-கன்றுகள் இவற்றைப் பராமரிப்பதும் கஷ்டமாகிவிடும். மென்மேலும் செலவுகளில் இழுத்துவிடும்.
சுபகாரியங்கள் அனைத்தும் தடைப்படும். திருமணமான தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றும். மேலும் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியும், தம்பதியரிடையே இணக்கத்தைக் குறைக்கும். பிள்ளைகளாலும் கவலை  ஏற்படும். அவர்களைப்பற்றி ஏக்கமும் வருத்தமும் மிகும். ஆனால், இத்தனை விதமான கஷ்டங்களும் மே 16 வரைதான்.
மே 17-2012-ல் ஏற்படப்போகும் குருப் பெயர்ச்சி தனஸ்தானமான 2-ல் சஞ்சரித்து, 6,8,10 ஆகிய வீடுகளை பார்வை செய்யவுள்ளார். இதனால் குடும்பத்தில்மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கெண்ட சனியின் களத்திர ஸ்தான வாசமும் ராகு, கேதுவினால் நேர்ந்த இழப்புகளும் காணாமல் போய்விடும். ஏனென்றால் குரு என்னும் கிரகமே அனத்து கிரகங்களையும் கோலோச்சும் சக்தி பெற்றது. எனவே உங்கள் ராசிக்கு இதுவரை சொல்லப்பட்ட அத்தனை கஷ்டங்களும் காணாமல் போகுமளவுக்கு அடக்கி வாசிக்கப்படும்.
பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாவதுடன், தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பிரிந்த உறவினர்களும் ஓடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாகும் அளவுக்கு உங்களின் பலமும் வலிமையும் கூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் அளவுக்கு யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். எதிர்பாராத திடீர் உதவிகளும் கிட்டும். தொழில் வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளாலும் லாபம் அமையும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருப்பதால், எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளைப் பெற முடியும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், கூட்டாளிகளிடமும்,. தொழிலாளர்களிடமும் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன்  மூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
இப்படியாக ஆண்டின் முற்பகுதி சற்று வாட்டம் காணப்பட்டாலும் மே மாத நடுவில்  வரும் குருப் பெயர்ச்சி பலவிதமான யோகங்களை உங்களுக்கு வாரி வழங்கி, உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு இனிய குரு பெயர்ச்சியினால், இனிமை தரும் நல்லாண்டாகும்.
பரிகாரம்:
உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தில் ஒரு நாள் ‘மிருத்யஞ்ஜ்ய ஹோமமு’ மோ அல்லது ‘ஆயுஷ் ஹோமமோ’ செய்யுங்கள்.’ ஆதித்ய ஹிருத்யம்’ தினமும் பாராயணம் செய்யவும். கோதுமை தானம் செய்யவும். செவ்வாய்க் கிழமைககளில் முருகப் பெருமான் ஆலயத்துக்குச் செனறு, அவருக்கு செந்நிற மலர்களால் உங்கள் கைப்பட தொடுத்த மாலையை அணிவிக்கவும். துவரம்பருப்பை தானம் செய்யவும். ராகு எட்டில் இருப்பதால், துர்க்கயம்மனை வணங்கவும். கருப்பு உளுந்தை தானம் செய்யவும். மகாலக்ஷ்மிதேவியை வணங்கவும். சனி பகவானின் ஏழாமிடத்து சஞ்சாரம் நல்லதல்ல. சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்ளு தீபம் ஏற்றவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயோதிகர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ ஹனுமான் சலீஸா’ தினமும் படிக்கவும். மே மாத முற்பாதிவரை, ஜென்ம குருவின் சஞ்சாரம் நல்லதல்ல. எனவே, தட்சிணாமூர்த்தியை செவ்வரளி மாலையிட்டு, கொண்டக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து வணங்கவும். உங்கள் முன்னோர்களுக்கான நியமங்களையும் காரியங்களையும் தடைப்படாமல் நிறைவேற்றவும்.

By Anonymous with No comments

Tuesday, April 3, 2012

2015 உலகக் கிண்ண போட்டியில் சச்சின்!

கிரிக்கெட்டிலிந்து தற்போது ஓய்வுபெறும் எண்ணம் இல்லை ஒருவேளை அடுத்த உலகக் கிண்ண போட்டியில் கூட விளையாட வாய்ப்பிருக்கிறது என்று இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் சச்சின் மறைமுகமாக கூறியுள்ளார்.

2011 உலகக் கிண்ண தொடரோடு ஒருநாள் போட்டியில் இருந்து சச்சின் ஓய்வுபெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கபில்தேவ், உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது சச்சின் கூறியதாவது:

என்னுடைய ஓய்வு குறித்து நான் தான் முடிவு செய்ய வேண்டும். ஓய்வுபெறுமாறு எனக்கு அறிவுரை கூறும் யாரும் என்னை அணிக்கு கொண்டு வரவில்லை என்றார்.
2015 உலகக் கிண்ண போட்டியில் விளையாடும் எண்ணம் உள்ளதா என்று கேட்டபோது, நான் விளையாடுவேனா, இல்லையா என்பது குறித்த உங்களின் ஊகத்துக்கு பதிலளிக்க முடியாது என்று தெரிவித்த சச்சின், தற்போது எதையும் உறுதியாகக் கூறிவிட முடியாது.

இதேகேள்வி கடந்த 2011 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவீர்களா என்று 2007ம் ஆண்டு என்னிடம் கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளிப்பது அப்போது கடினமானதாக இருந்தது. தற்போதும் அதே சூழ்நிலையே ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. ரசிகர்கள் எனக்காக கடவுளிடம் வேண்டிக் கொண்டிருப்பதால் சாதித்திருக்கிறேன். தொடர்ந்து சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

மற்றபடி எல்லாம் கடவுளின் கையில்தான் உள்ளது. போட்டியை ரசித்து விளையாடவே விரும்புகிறேன். இலக்கை நிர்ணயித்து விளையாட விரும்பவில்லை என்றார்.
100 வது சதம் குறித்துப் பேசிய சச்சின், 100 வது சதமடித்ததும் மட்டையை உற்று நோக்கினேன். பின்னர் வானத்தை நோக்கி பார்த்து நான் என்ன தவறு செய்தேன், ஏன் இந்த சதத்தை அடிக்க இவ்வளவு நாட்கள் ஆனது என்று கடவுளிடம் கேட்டேன் என்றார்.

மேலும், இளம் வீரர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு, மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டும். நாங்கள் விளையாடத் தொடங்கியபோது எங்களுக்கு லட்சியம் இருந்தது. அதேபோல் வரும் தலைமுறையினரும் விளையாட வேண்டும்.

தற்போது வீராட் கோஹ்லி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் அதேபோல தொடர்ந்து சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன் என்றார்.

By Anonymous with No comments

கடக ராசி 2012ம் ஆண்டு பலன்

கடகம்
புனர்பூசம்(4); பூசம்; ஆயில்யம் ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
கடக ராசி
இந்தப் புத்தாண்டில்,  ஆண்டு கோளான குரு உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில்  இந்த ஆண்டு மேம மாதம் 16-ம் தேதிவரை சஞ்சரிக்கிறார்.  அதன்பின் அதாவது, மே மாதம் 17-ம் முதல், குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்துக்குப் போகிறார்.  சனி பகவான் சுக ஸ்தானமான 4-ம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.
துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி உச்ச சனியாக சஞ்சரிக்கப் போகிறார். உங்கள் ராசியையும், உங்கள் ராசிக்கு 1 , 6 மற்றும் 10 ஆகிய இடங்களைப் பார்வையிடுகிறார். இதன் விளைவாக உங்கள் பணிகளில் மாற்றம் ஏற்படலாம். கூட்டு முயற்சிகளில் உள்ளவர்கள் பிரிந்தாலும், வீட்டு உறுப்பினர்களையோ அல்லது  வேறு திறமையானவர்களையோ சேர்த்துக்கொண்டு  விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து நடத்துவீர்கள். ஆறாம் இடத்தை சனி பார்ப்பதால், ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகளைக் கொடுக்கலாம்.. அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகள் மாறலாம். எட்டுக்கு அதிபதியான சனி ஆறாம் இடத்தைப் பார்ப்பதால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உத்தியோக உயர்வு இப்போது வந்து சேரும். கடன் பாக்கிகள் வசூலாகும். பகையான நட்பு உறவாகும். பத்தாம் இடத்தை சனி பார்ப்பதால், உங்கள் பெயரில் உள்ள தொழில்களையும் சொத்துக்களையும் மனைவி மற்றும் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் பெயருக்கு மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். திடீர் இட மாற்றம், ஊர்மாற்றம் ஏற்படும். பங்குதாரர்கள் தங்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்துக்கொள்வது நல்லது.
இனி ராகு கேது சஞ்சாரங்களைப் பார்க்குமிடத்து ராகு உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்கிறார்கள்.
5-ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் ராகு பகவான், தனது ராசிக்கு 3-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்க்கிறார். தனது 11-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தைப் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடமான விருச்சிகத்தில் உலாவரும் ராகு பகவான் பலவகையான கற்பனைகளை உங்கள்  மனதில் தோற்றுவித்துக்கொண்டே இருப்பார். அதை சாதிக்க வேண்டும், இதை சாதிக்க வேண்டும் என்று செயல்பாட்டுக்கு வரமுடியாத , செயல்பாட்டுக்கு வராத எண்ண அலைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நாம் நினைத்தவை அனைத்துமே நடந்துவிடவேண்டும் என்ற ஆவல் அதிகரிக்கும். அதுபோலவே புதிய சிந்தனைகளும், புதிய வழிமுறைகளும், சிலருக்கு தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சிலர் புதிய எந்திரங்கள் , தங்கள் தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் , வண்டி வாகனங்கள் வாங்கும் யோகத்தைப் பெறுவார்கள். நாம் நினைத்தவை அனைத்தையும் அடைந்துவிடவேண்டும் என்ற ஆவல் சிலருக்கு அதிகரிக்கும்.
இந்தக் காலக் கட்டத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் நீங்கள் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. ஏனென்றால், அவர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு எதிர்பாராதவிதமாக வேலை வாய்ப்பு கிடைக்கும்.  சிலருக்கு புதிய நூதனமான , வியாபாரங்கள் அமையும். அலுவலர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம், , பணிமாற்றம் ,சில எதிர்பாராத புதிய பொறுப்புகள் இவற்றை அடையும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புத்திர –புத்திரிகளின் போக்கு கவலையைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். ஜனன காலத்தில் 5-ம் இடத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருக்குமானால், தற்சமயம் அவர்களுக்கு , புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படும். சிலர் வண்டி வாகனம் வாங்கி பவனிவர வாய்ப்புண்டு. சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். சிலர் புதிய வீடு, மனை, நிலம்  ஆகியவற்றை வாங்கும் வாய்ப்பினைப் பெறுவார்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும். திருமணம் ஆகாத வாலிப  வயதினராக இருந்தால், இந்த சமயத்த்ல் காதல் வயப்படுவார்கள். அதே நேரத்தில் அந்த காதல் ஜோடி வேற்று மதத்தினராகவோ, அல்லது வேற்று இனத்தவராகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்தக் காலத்தில் திருமணமாகி ,புத்திரப்பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு புத்திரப்பேறு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.ஆனால், 5-ம் இடத்தில் செவ்வாயோ ,சூரியனோ அமர்ந்து இருந்தால்,உடல்நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதில் செவ்வாய் இருந்தால், செவ்வாய் சுய வீடாக இருந்தால், சிறு உயர்வைக் காட்டி, பின்பு மோசமான பலன்களாக கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். தொழில் ரீதியாக எதிர்பாராத முன்னேற்றத்தைக் கொடுப்பார். ஆனால், 5-ம் இடத்தில் சூரியன் இருப்பாரேயானால், கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ராகு பகவானுக்கு உங்கள் 5-ம் வீடான விருச்சிகம் உச்சவீடு என்பதால், ராகுவுக்கு உரிய கோச்சார பலன்களைக் கொடுக்காமல், சிறப்பான பலன்களைக் கொடுப்பார். எதிர்பாராத அதிர்ஷ்டத்தைக் கொடுப்பார். புத்திர- புத்திரிகளை மேன்மையடையச் செய்வார். பூர்வீகச் சொத்தில் இருந்த பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பார். தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளச் செய்வார். குடும்பத்தாரின் தேவைகளை காலம் அறிந்து பூர்த்தி செய்து வைப்பீர்கள். அதன்பலனாக குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவுவதுடன், குடும்பத்தினரின் அன்புக்கும் ஆதரவிற்கும் பாத்திரம் ஆவீர்கள். புதிய நண்பர்ள், புதிய உறவுகள் என்று உங்கள் பழக்கங்கள் விரிவடையும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளை உரிய பெரிய மனிதரை அணுக்கி தீர்த்துக்கொள்வீர்கள்.
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தை ராகு பார்ப்பதால், உங்கள் மனோபலம் மேன்மையடையும். சகோதரர்களுடன் கருத்துவேறுபாடு அல்லது சகோதரர்களுக்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு 3-ம் பார்வையால், உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சிலர் நண்பர்களைப் பிரியக்கூடிய நிலைக்கு ஆளாவார்கள்.
மொத்தத்தில் 5-ம் இட்த்தில் ராகு சஞ்சரிக்கும்போது திடீர் வருமணம் கிடைக்கும். நல்ல பொருட்சேர்க்கை ஏற்படும். வீணான மனக் கசப்பும் அலைச்சலும் ஏற்படுவதற்கன வாய்ப்புகள் உண்டு. கோர்ட், கேஸ்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அலைச்சல் மனக்கவலை ஏற்படும்.  உறங்கக்கூட நேரமில்லாமல் போகலாம். கணவன்- மனைவி  உறவு சிறப்பாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
இனி கேதுபகவானின் சஞ்சாரம் எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.  இதுவும் உங்களுக்கு நற்பலன்ளாகவே இருக்கும். எதிர்பாராதவிதமாக தன லாபம் கிடைக்கும். சிலர் புதிய நூதனமான தொழில் ,வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். வருமானம் சிறப்பாக இருப்பதால் கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான நிலை காணப்படும். புதிய நண்பர்கள்  நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். காதில் விழும் விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கு நல்ல விஷயங்களாகவே இருக்கும். பெரியோர்கள், ஞானிகளின் சந்திப்பும் அவர்களின் ஆசியும் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் நன்மை உண்டு. மூத்த சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். சிலருக்கு அரசு சம்பந்தமான வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நல்ல பெயரும், சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடத்திற்கு பணிமாற்றம் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்பட வும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அரசியல்வாதிகள், அரசுத் துறையில் உள்ளவர்கள், கௌரவமிக்க பெரியவர்களின் உதவி கிடைக்க வாய்ப்புண்டு. இந்த காலகட்டம் தாய்க்கோ அல்லது தாய்வழி உறவினருக்கோ அல்லது தகப்பனாருடைய தாய்க்கோ உகந்த காலம் அல்ல. அவர்களுக்கு தீய பலன் ஏற்பட வாய்ப்புண்டு. கோர்ட் கேஸ்களுக்கு உங்கள் பக்கம் தீர்ப்பு வந்து சுமுகமாக முடியும்.
ஜனன காலத்தில் ரிஷபத்தில் மாந்தி இருப்பவரக்ளுக்கு பலவழிகளிலிருந்தும் திடீர் திடீரென வருமானம் வந்துகொண்டிருக்கும். குரு ஜனன காலத்தில் ரிஷபத்தில் இருப்பாரானால்,  புத்திரர்களால் கவலை, புத்திரர்கள் முன்னேற்றத்தில் தடை . பூர்வீக சொத்தில் விவகாரங்கள் போன்றவை ஏற்படும்.  அதுபோல சுக்கிரன் இருந்தால், தாயார் மேன்மை அடைவார். ஆடை- ஆபரணச் சேர்க்கை, வீடு, மனை ,சொகுசு வாகனங்கள் வாங்கும் யோகம் கிடைக்கும். செவ்வாய் இருக்குமானால், அரசு-கௌரவம், கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் அரசு உத்தியோகம் போன்றவை ஏற்படும். சிலருக்கு இந்த கால கடட்த்தில், ஆன்மீக நாட்டமும், தெய்வபக்தியும் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்ல நேரும். தீய நண்பர்கள் யாராவது தற்சமயம் உங்களுடன் இருந்தால் , அவர்கள் உங்களை விட்டுப் போய்விடுவார்கள். உங்களுடைய பகைவர்கள் கூட உங்களிடம் ஒட்டி உறவாடி உங்களிடம் ஆதாயம் தேட முனைவார்கள். சிலருக்கு அரசியல் ஈடுபாடு அதிகமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். சிலர் வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொள்வர். அந்நிய தேசத்திலிருந்து வருமானம் கிடைக்க வழியுண்டு. இந்த காலத்தில் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். சிலருக்கு வண்டி வாகனங்களால் ஆதாயம் உண்டு. கேதுவின் பார்வை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் பதிவதால், தந்தையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு தந்தை வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
இனி குருவின் சஞ்சார பலன்களைப் பாக்கும்பொழுது, குரு இந்த வருடம் மேமாதம் 16-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும் அதன்பிறகு  அதாவது மே மாதம் 17-ம் தேதி முதல் குரு உங்கள் ராசிக்கு 11-ம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளார்.  குரு 10-ம் இடத்தில் அமரும்போது உங்கள் பதவிகளுக்கு சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். தொழில் புரிபவர்கள் தீர ஆலோசித்து செயலில் இறங்குவது நலம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணக்கு வழக்குகளை சரிவர வைத்துக்கொண்டால், பங்காளிகளிடையே ஏற்படும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் யோசித்து செயலில் இறங்குவது நன்று. வேலையிலிருந்துகொண்டு  கொஞ்சம் சிறப்பான வேலை தேடுபவர்கள் சரியான வேலை  கிடைத்தபின் பழைய வேலையிலிருந்து விடுபடுவது நலம். பழைய வேலையைத் துறந்துவிட்டு புது வேலை தேடுபவர்கள் வேலை தேடித்தேடி, கிடைக்காமல் அலைய வேண்டியிருக்கும். தொழிலில் இருப்பவர்கள் தொழிலில் போட்டியை சமாளிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கம் அதிகம் இருந்தாலும் அதற்கேற்றபடி கடனும் இருக்கும். கடன் வாங்கி ,வண்டி வாகனம் வாங்கவும் புதுமனை கட்டவும் செய்வீர்கள். எதிர்பார்த்த இடங்களிலிருந்து கடன்கள் தாராளமாகக் கிடைக்கும். மறைமுக எதிர்ப்பு இருந்தாலும் அதையும் இனம் கண்டு வெற்றி காண்பீர்கள். தாயாரின் உடல்நலனில் நல்ல மாற்றம் காண்பீர்கள். தாயாரிடம் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று அவர்களிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு ஏற்படும். மேலதிகார்களின் கடுஞ்சொற்களுக்கு ஆளாகாமல் தபபித்துக்கொள்ள, கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிலருக்கு தேவையில்லா இடமாற்றம் ஏற்படும். தொழில் விஷயமாக,  வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆன்மீகத்திலும் ,கோவில்களுக்கு சென்று வருவதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன்-மனைவிக்கிடையேயும், மூத்த சகோதரர்களிடமும் பிரச்சினை ஏற்படும். மனக் குழப்பங்கள் மிகுந்திருக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பொருளாதாரம் சிறக்கும். சேமிப்பு மிகுதியாகும். மற்றவர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும்.
ஏற்கெனவே கூறியபடி, மே மாதம் 17-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடத்தில் அமரப் போகும் குரு, உங்களுக்கு நற்பலன்களாகவே வாரி வழங்குவார். . உங்கள் காட்டில் அடைமழைதான்!. இதுவரை முடிக்கமுடியாத பிரச்சினைகளை எளிதில் முடித்து வைப்பார். உங்கள் எண்ணங்கள் ,கனவுகள் அத்தனைக்கும் செயல்வடிவம் கொடுத்து வாழ்க்கையில் உன்ன்னத நிலையை அடைவீர்கள். மண்ணைத் தொட்டாலும் இனிமேல் பொன்னாகும் நேரம் வந்துவிட்டது. புதிய தொழில் தொடங்குவதற்கு இதுநாள்வரை இருந்துவந்த தடை நீங்கிவிட்டது. தொழிலில் அபரிமிதமான லாபம் காண்பீர்கள். இந்த குருப் பெயர்ச்சியில் , இதுவரை உள்மாநிலத்தில் மட்டும் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தவர்களுக்கு இனி வெளி மாநிலத்திலும் தொழிலை விரிவுபடுத்துவர். சிலருக்கு இதுவரை கூட்டுத் தொழில் நடத்தி வந்தவர்கள் தனிப்பட்ட முறையில் தானே முழுப் பொறுப்பையும் ஏற்று கம்பெனியை நடத்திச் செல்லும் யோகத்தையும் பெறுவீர்கள். அன்னிய பாஷை பேசுபவர்களுடன் வியாபாரத் தொடர்பும், நட்பும் ஏற்படும். இதுவரை இளைய சகோதரர்களுடன் இருந்துவந்த பிரச்சினைகள் அகன்று உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பிள்ளைகள் படிப்பிலும் ,பிற துறைகளிலும் சிறந்து விளங்கி நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சிலர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். விட்டுப் பிரிந்த நண்பர்கள்மீண்டும் உதவி செய்ய முன் வருவார்கள். மனைவியின் ஆலோசனைகளும் உதவியாக இருக்கும். தந்தையுடன் இருந்த பிரச்சினைகள் அகன்று அவரின் ஒத்துழைப்பும் மூத்த சகோதரரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு விருப்பமான பணி உயர்வும் விரும்பிய இயடமாற்றமும் கிடைக்கும். திருமணமாகாத பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் வீடுதேடிவந்து கதவைத்தட்டும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து சொத்து உங்கள் கைக்கு வரும். அல்லது அந்த சொத்தின்மூலம் ஒரு பெரும் தொகை உங்கள் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றி காண்பீர்கள்.
இப்படியாக  மே மாத பாதிவரை குரு பாதகமாக இருந்தாலும், பிற்பாதியில் சுபிட்சம் பெருகும். ராகுவும், கேதுவும் கூட சாதகமாக இருப்பதாலும், சனி, உங்களுக்கு நாலாம் இடத்தில் சஞ்சரித்தாலும் உச்சவீட்டில் அமர்ந்துள்ளதால், உங்களுக்கு எந்த கெடுதியும் உண்டாக வாய்ப்பில்லை.  நற்பலன்களே மிகுந்து காணப்படும். எனவே இந்த புத்தாண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாகவே இருக்கும்.
பரிகாரம்:
சிவாலயங்களில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து வரவும். வியாழக்கிழமைகளில் அவரை தரிசித்து  மஞ்சள் நிற மலர்களாலும் கொண்டக்கடலை மாலை சாத்தியும் வணங்கிவரவும். சனி  நாலாம் இடத்தில் சஞ்சரிப்பதால், சனிக்கிழமைகளில், சனீஸ்வரன் சந்நிதிக்கு சென்று, எள் தீபம் ஏற்றி, வழிபடவும். காக்கைக்கு தினந்தோறும் அன்னமிடவும். வயதானவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யவும். கறுப்பு நிற பொருள்களை தானம் செய்யவும். ‘ஹனுமான் சலீஸா’வை தினந்தோறும் பாராயணம் செய்யவும்.

By Anonymous with No comments

கன்னி ராசி 2012ம் ஆண்டு பலன்

கன்னி
உத்திரம்(2,3 &4); ஹஸ்தம்;  சித்திரை(1&2) ஆகிய நட்சத்திரங்களை உள்ளடக்கியது
கன்னி ராசி
இந்த 2012-ல் பிறக்கப்போகும் புத்தாண்டு ,உங்களுக்கு இரண்டும் கலந்ததாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக ஏழரைச் சனியில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தவகையில் பார்த்தால், இனி வரப்போகும் காலம் நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரம்தான். ஏழரைச் சனி முழுவதுமாக நீங்கிவிடவில்லை என்றாலும், இறுதி இரண்டரை ஆண்டில் இருக்கிறீர்கள். எனவே இது உங்களுக்கு ‘அப்பாடா ‘ என்று பெருமூச்சு விடவேண்டிய நேரம்தான்.
இனி கிரக சஞ்சார பலன்களைப் பற்றிப் பார்க்கலாம். சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திலும், குரு பகவான் மே மாதம் 16-ம் தேதிவரை உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்திலும், ராகு உங்கள் ராசிக்கு 3-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 9-ம் இடத்திலும், சஞ்சரிக்கிறார்கள். குரு பகவான் மே மாதம் 17-ம் தேதியன்று உங்கள் ராசிக்கு 9-ம் இடத்துக்கு மாறி சஞ்சரிக்கப் போகிறார்.
ராகு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் சஞ்சரித்து, உங்களுக்கு நல்ல பலன்களையே கொடுப்பார். ஏனென்றால், ராகுவுக்கு 3-ம் இடம் என்பது ஸ்தான பலம் உள்ள இடமாகும். மனதில் தைரியம் மிகுந்து எந்த பிரச்சினையும் சந்தித்து எதிர்கொள்வீர்கள். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருப்பீர்கள். பல துணிச்சலான காரியங்களில் இறங்கி, அவற்றை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள், செய்யும் செயல்கள் அனைத்திலும் வெற்றியே அடைவீர்கள். தொட்டதெல்லாம் பொன்னாகும். தற்போது உங்கள் முகத்தைப் பார்த்தாலே உங்களுக்கு வேண்டாதவர்கள்கூட உங்களுக்குத் தேவையானதை செய்துகொடுக்கத் தயங்க மாட்டார்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். பயணங்கள் உங்களுக்கு அலைச்சலைக் கொடுத்தாலும், அந்தப் பயணங்களால், வாழ்க்கைக்கு உதவும் முன்னேற்றங்களும், வெற்றிகளும் கிடைக்கும்.  தொழில், வியாபாரம் மேன்மை அடையும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத திடீர் வருமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பொருளாதார வசதி அதிகரிக்கும். வாழ்க்கையில் அந்தஸ்து கூடும். சிலருக்கு புதிய பதவிகள், பட்டங்கள், கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். அவர்களால், உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். அதுபோல தற்போது சில புதிய அரசியல்வாதிகள் , பிரமுகர்கள், அரசு அதிகாரிகளின் அறிமுகமும் கிடைக்கும். இது உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். போட்டிகள், பந்தயங்கள், பங்குச் சந்தைகள் முதலியவற்றில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு  வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும்.  சிலர் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பார்கள். அவர்களுக்கு நல்ல பலன் கிடைத்து அவர்களது கனவுகள் நனவாகும். வெளிநாட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பணி உயர்வு, வேண்டிய பணியிடமாற்றம் இவைகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியிடம் உங்கள் மதிப்பு உயரும். உங்களது சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். சிலர் விருந்து ,கேளிக்கைகள் என்று மகிழ்ச்சியில் திளைப்பார்கள். மாணவர்கள் படிப்பில் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். நிறைய மதிப்பெண்கள் பெறுவார்கள். கலைஞர்களுக்கு இது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் நேரம். புதிய ஒப்பந்தங்கள் உருவாகி முன்னேற்றம் கிடைக்கும்.  குடத்துக்குள் இருக்கும் விளக்கு போல இவர்களுடைய திறமை இதுவரை வெளி உலகிற்கு தெரியாமல் இருக்கும். இனி இவர்க்ள் குன்றின் மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பார்கள். இவர்கள திறமையை அனைவரும் உணர்ந்து பாராட்டுவார்கள். இதன் காரணகமாக இவர்களுக்கு நல்ல வெகுமதிகளும் பாராட்டுகளும் கிடைக்கும். உடன்பிறந்த சகோதர சகோதரிகள் மேன்மை அடைவார்கள். வேண்டிய சமயத்தில் அவர்களால், உங்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். கடந்த காலத்தில் உங்களைவிட்டுப் பிரிந்துபோன உடன்பிறந்தவர்கள் இப்போது உங்களைத் தேடி வருவார்கள். உங்களுடன் உறவாட விரும்புவார்கள்.  புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலருக்கு எப்போதோ வாங்கிப்போட்ட நிலம் இப்போது பல மடங்கு விலை உயர்ந்து கோடிகளைக் கொட்டிக்கொடுக்கும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம் தீரும். இதுவரை தாமதப்பட்டுவந்த நல்ல காரியங்கள் இப்போது தடைகள் நீங்கி நல்லபடியாக முடிவடையும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டினை தொடரும் நிலை உண்டாகும். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு புத்திரப்பேறு கிடைக்கும். நீங்கள் இழந்த பொருட்கள் திரும்பக் கிடைக்கும். மக்கள் மத்தியில் உங்களுக்கென்று தனி மரியாதை ஏற்படும்.
இனி கேது பகவானின் சஞ்சார பலன்களைப் பார்க்கலாம். இதுவரை ஒரு குறிக்கோள் இல்லாமல் சென்றுகொண்டிருந்த உங்களது வாழ்க்கை இப்போது ஒரு குறிக்கோளுடன் செல்ல ஆரம்பிக்கும். வாழ்க்கை நல்ல முன்னேற்றமான பாதையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். எதையும் தர்மப்படி, நியாயப்படி செய்யவேண்டும் என்கிற உயர்ந்த எண்ணமும் உயர்ந்த குறிக்கோளும் மனதில் உதயமாகும். வாழ்க்கையில் உங்களுக்கென்று ஒரு லட்சியம் பிறக்கும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தந்தை மட்டுமல்லாது உங்களைச் சேர்ந்த மற்றபெரியவர்களுக்கும் இப்போது உடல்நலம் பாதிக்கக் கூடும். தடைப்பட்டுப்போன குலதெய்வவழிபாடு இப்போது நல்ல முறையில் நடைபெறும். மனம் ஆன்மீகத்தில் லயிக்கும். சிலருக்கு கோவில்,மடம் போன்ற இடங்களில் கௌரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு ஞானிகள், சாதுக்கள் ஆகியோரின் சந்திப்புகளும் ஆசிகளும் கிடைக்கும்.  இதுவரை வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த உங்களது பெருமை இப்போது யாவருக்கும் புரிய ஆரம்பிக்கும். உலகியல் விஷயங்களில் ஆர்வம் குறையும். பொருள் சேர்க்கவேண்டும் என்று நினைப்பதைவிட நல்ல பெயரும் புகழும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். சிலர் உத்தியோகம் காரணமாகவோ அல்லது வியாபாரம் காரணமாகவோ குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டிற்கு செல்லவேண்டியிருக்கும். கட்டுமானப் பணிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கி  கட்டுமானப் பணிகள் இனிது முடிவாடையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பேச்சில், சாந்தமும், பொறுப்பும், நிதானமும் பெருகும். அதனால், யாரிடமும் எந்தக் காரியத்தையும் சாதித்துக்கொள்வீர்கள். கோர்ட் கேஸ்களில் வெற்றி உண்டாகும். மனைவிவழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் அமையும் வாய்ப்பு உண்டாகும்.
இனி குரு பகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது, இந்த வருடம் 2012-ல் குரு உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். எட்டாம் இடம் என்றதும் நீங்கள் பயம் கொள்வது புரிகிறது. நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனென்றால், குரு பகவான் உங்கள் ராசிக்கு 4,7-ம் வீடுகளுக்கான கேந்திர அதிபதியாகிவிட்டதால், உங்களுக்கு நற்பலன்களாகவே நிகழும். சிலருக்கு வீடு மாற்றும் யோகம் உண்டாகும். குருபகவான் உங்கள் ராசிக்கு அந்த இடங்கள் சிறப்படைகின்றன. வாக்கு வன்மை அதிகரிக்கும். தங்களின் பேச்சுக்கு வெளியில் நல்ல மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்சினைகள் தீர்ந்து குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள்மிகுதியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மீண்டும் பழைய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். 4-ம் இடம் குருவின் பார்வை பெறுவதால், தாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தங்களுக்கு சுகங்களும் சந்தோஷங்களும் அதிகரிக்கும். சிலருக்கு புதுமனை வாங்கும் யோகம் உண்டாகும். ஏற்கெனவே கட்டி பாதியில் நின்றுவிட்ட வீடு, கட்டிடங்களை கட்டி முடிக்க முயற்சி செய்து கட்டி முடிப்பீர்கள். தாயை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.  12-ம் இடம் குருவின் பார்வை பெறுவதால், தாங்கள் செய்யும் அனைத்து செலவுகளும், சுபவிரயங்களாக இருக்கும். அனைத்து செலவுகளும் தங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். தகப்பனாரின் உடல்நலனில் அக்கறை எடுதுக்கொள்ள வேண்டியது அவசியம். பிறரிடம் பேசும்பொழுது எச்சரிக்கையாகவும் யோசித்தும் பேசுவது நல்லது. பிறருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நலம். இளைய சகோதரருடன் சிறு சிறு பிரச்சினை உண்டாகலாம். தொழிலில் மாற்றம் உண்டாகும். மனைவியின் பேச்சுக்கு மரியாதை கொடுப்பீர்கள். தொழில் புரிபவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவது நலம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். லாபம் ஒரே சீராக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும். வெளியூர் பிரயாணங்கள் அதிகம் ஏற்படும். இப்படிப்பட்ட பலனாக அளித்துவந்த குருபகவான், வருகிற 17-ம் தேதி மே மாதம் 2012-ல் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் சஞ்ரிக்கப் போகிறார்.
குருவின் 9-ம் இட சஞ்சாரம் என்னேன்ன பலன்களைக் கொடுக்கும் என்று பார்க்கலாம். இந்த சஞ்சாரம், உங்களுக்கு பல யோகங்களை உண்டாக்கும். பணப் பிரச்சினை பொருளாதார சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து புது மனிதனாவீர்கள். தந்தை வழியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகன்று, ஒன்று சேர்வீர்கள். தந்தையின் பேச்சுக்கு மதிப்பளித்து அவர் சொற்படி நடந்தால், ஒரு சில பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம். ஆன்மீகத்தில் மனம் அதிகம் ஈடுபடும். கோவில் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் இனிதே முடியும். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்தத் துறையில் பகழடைவீர்கள். இதுவரை பிறரிடம் வேலை செய்து வந்தவர்கள் இனி சொந்தத்தில் தொழில் தொடங்குவார்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும் லாபகரமாகவும் அமையும். இதுவரை உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்தவர்கள்கூட உங்கள் முன்னேற்றத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். மற்றவர் முன்னிலையில் கம்பீரமாக வலம் வருவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடை ஆபரணங்கள் , ஆடம்பரப் பொருள்கள் அத்தனையும் வாங்கி மகிழ்வீர்கள். படிப்பில்  மந்தமாக இருந்த பிள்ளைகள்  படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். விட்டுப் பிரிந்த உறவுகள் மீண்டும் கூடி வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். தங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
இனி சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிப்பதற்கான பலன்களைப் பார்ப்போம். கடந்த 5 வருடமாக நீங்கள் பட்டு வந்த துயரமெல்லாம் நீங்கப் போகிறது. வாழ்க்கையில் நீங்கள் எதையெல்லாம் சந்திக்கக்கூடாது என்று நினைத்தீர்களோ அதையெல்லாம் சந்தித்து எல்லாவற்றிலும் துன்பம், துயரம், தோல்வி, ஏமாற்றம், குடும்பத்துக்குள் போராட்டம், தொழிலில் இழப்பு, தீராப் பகை என்று பலவித கஷ்ட  நஷ்டங்களையும் பார்த்து நொந்து போய்விட்ட சமயத்தில்தான் இந்த சனிப்பெயர்ச்சி, கோடை காலத்தில் மழைபோல வந்துள்ளது. இப்போது இரண்டாம் இடத்துக்கு வரப்போகும் சனி உச்ச சனியாக வரப் போகிறார். இதனால், உங்கள் தனமும், வாக்கும், குடும்பமும் உச்சமாகிக் கொடுக்கப் போகிறார். கூடுதல் அனுசரணையாக மேஷ ராசியில் இருக்கும் குருபகவானும் தன்னுடைய சுபப் பார்வையையை சனியின் மீது வீசுகிறார். வீடு, நிலம், தொழில் பூர்வீகச் சொத்தில் இருந்துவரும் கடன், வம்பு வழக்குகளில் இருந்து முற்றிலும் விடுதலை ஏற்படும்.  . இதனால் மன நிம்மதி உண்டாகும். சிலருக்கு புதிய வீடு, மனை,வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாமதமாகிவரும் திருமண பாக்கியம் சுப முடிவு சொல்லும். கடனை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த அத்தனை பிரச்சினைகளும் விலகி பதவி உயர்வு, சம்பள உயர்வு, வழக்கில் வெற்றி முதலியவை ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சொந்தத் தொழிலில் இருந்துவரும் தொய்வு நிலை நீங்கி, விறுவிறுப்பை எட்டும். கடலில் தத்தளிப்பவனுக்கு கை கொடுப்பதுபோல உங்களுக்கு உதவி செய்ய பல பெரிய மனிதர்கள், நண்பர்கள் முன்வருவார்கள். அவர்களில் சிலருக்கு உள்நோக்கம் வேறு மாதிரியாகக்கூட இருக்கும். அவர்களில் சிலரால் குடும்பத்தில் குழப்பம் வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. எனவே யாரையும் எளிதாக நம்பிவிடாமல் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் உங்களை வஞ்சிக்கக் காத்திருப்பவர்களின் நய வஞ்சகத்தைப் புரிந்து அதிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் அறிவையும் குருபார்வையிலிருந்தும் குருவின் சஞ்சாரத்தின் மூலமும் நீங்கள் பெறலாம். இனிமேல் வேலை இல்லாமல் இருப்போருக்கு வேலை கிடைக்கும். பணவரவு பெருகிஉங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். நீங்கள் எதிர்பார்த்தபடியே வெளிநாட்டு வேலையும் கிடைக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து திடீர் அழைப்புகல் வந்து உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் குளிப்பாட்டும். கணவன் –மனைவி உறவில் ஏகாந்தமான சூழ்நிலை உருவாகும். வெறுப்புடன் இருந்துவந்த மனைவிகூட தமது கணவர் நல்லவர்தான் என்று மெச்சும்படியான நேரம் வந்துவிட்டது. இதுவரை பொட்டுத் தங்கம்கூட இல்லாத வீட்டில்கூட தங்க நகைகளை வாங்கும் சூழ்நிலை யில் செல்வம் கொழிக்கும். கடன்கள் குறையும். கணவன்—மனைவி உறவில் நாளடைவில் மகிழ்ச்சி பெருகும். மனதில் இருந்துவரும் பயம் தன்னம்பிக்கைக் குறைவு நீங்கும். உத்தியோகத்தில் புதிய மதிப்பு, மரியாதை உண்டாகும். மூளையை மூலதனமாக்கி செய்யும் அத்தனை வேலையிலும் ஜொலிப்பீர்கள். முயற்சிக்குத் தகுந்த அளவு குறைவின்றி வருமானமும் புகழும் கிடைக்கும்.
இப்படியாக உங்களுக்கு இந்தப் புத்தாண்டு மிக நல்ல பலன்களை வழங்கும். ஆண்டின் தொடக்கமான முன்பாதியில் குருவின் சஞ்சாரம் சரியில்லை என்பதைத் தவிர மற்ற கிரகங்களான சனி, ராகு, கேது, ஆண்டுப் பின்பகுதியில் குரு என்று அனைத்து கிரகங்களும் உங்களுக்கு நற்பலன்களைத் தரப்போவதால், இந்தப் புத்தாண்டு உங்களுக்கு மிகவும் நன்றாகவே இருக்கும்.
பரிகாரம்:
ஏழரைச் சனியின் இறுதிப் பகுதியில் இருப்பதால், நீங்கள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சனீஸ்வரன் ஆலயம் சென்று, எள்தீபம் ஏற்றி வழிபடவும். தினந்தோறும் காக்கைக்கு அன்னமிடவும். வயதானவர்களுக்கும் உடல் ஊனமுற்றவர்களுக்கும் உதவிசெய்யுங்கள். கறுப்பு நிறப் பொருள்களை தானம் செய்யவும். தினந்தோறும் ‘ஹனுமான் சலீஸா’ பாராயணம் செய்யவும்.  குருபகவான் ஆண்டின் முற்பகுதியில் எட்டில் இருப்பதால்,  வியாழக்கிழமைகளில் குருதட்சிணாமூர்த்தியைகொண்டக் கடலையையும், மஞ்சள் நிற மலர்களும் கோண்டு மாலை சாத்தி வழிபடவும்.

By Anonymous with No comments

Share me on facebook